நெடுவாசல் ஜமீன்

பாளையக்காரர்

'நெடுவாசல் ஜமீன்' என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், "திருவரங்குளம்" பகுதி 'நெடுவாசல்' என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது "பன்றிகொண்டார்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.[1][2]

வரலாறு தொகு

1879 ஆம் ஆண்டு, விஜயரகுநாத முத்தையன் பன்றிக்கொண்டாரின் கீழ் 15 கிராமங்கள் இருந்தன (9532 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 2037 ரூபாய் 6 அணா 6 பைசா ஆகும்.[3]

புதுக்கோட்டை அரச குடும்பத்துடன் திருமண உறவு மூலம் நெய்வாசல் ஜமீன்கள் இணைந்திருந்தார்கள். அய்யாசாமி பன்றிகொண்டார் அவர்கள், புதுக்கோட்டை மன்னரின் மகள் மங்களாம்பாள் ராஜா அம்மணி சாகிப் அவர்களை திருமணம் செய்துகொண்டார்.[4]

ரகுநாத பன்றிகொண்டார் என்பவர் புதுக்கோட்டை மன்னரின் சாகிர்தார் ஆவார். ஜாகிர் (Jagir) என்பது படைத்தலைவர்களின் சேவை கருதி அவர்களுக்கு வழங்கப்படும் சிறிய ஆட்சிப் பகுதியைக் குறிக்கும்.[5] கட்டக்குறிச்சி பன்றிகொண்டார் மற்றும் முத்துசாமி பன்றிகொண்டார் , புதுக்கோட்டை மன்னருக்கு எதிராக கலகம் செய்தனர். மக்களை கிளர்ச்சிக்கு தூண்டிய முத்துசாமி பன்றிகொண்டார் புதுக்கோட்டை மன்னரின் சொந்த மைத்துனர் ஆவார்.[6]

நெடுவாசல் பன்றிக்கொண்டார் மற்றும் செரியலூர் பன்றிக்கொண்டார் ஜமீன்கள் சகோதரர்கள் ஆவர்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு. 1976. பக். 319. https://archive.org/details/THFmuvendharPinnA/mode/1up. 
  2. "நெடுவாசல்". தினமலர்.
  3. கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. பக். 91. https://archive.org/details/kallar-sarithiram/page/n99/mode/1up. 
  4. Chiefs And Leading Families. 1923. பக். 14. https://archive.org/details/tva-bok-0013484-chiefs-and-leading-families-1/mode/1up. 
  5. Gazetter Of Tamil Nadu Pudukkottai District Gopala Krishna Gandhi. 1923. பக். 538. https://archive.org/details/gazetteroftamilnadupudukkottaidistrictgopalakrishnagandhi_202003/page/n320/mode/2up?q=. 
  6. புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு. 1980. பக். [116]. https://books.google.co.in/books?id=LeEHAQAAIAAJ&q=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjd_pXDrvTrAhUiyosBHUY2Dk8Q6AEwAHoECAAQAQ. 
  7. தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (இரண்டாம் தொகுதி). 1989. பக். 116. https://archive.org/details/20200906_20200906_1733/page/n138/mode/1up. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுவாசல்_ஜமீன்&oldid=3794625" இலிருந்து மீள்விக்கப்பட்டது