நெப்டியூனியம்(III) குளோரைடு

வேதிச் சேர்மம்

நெப்டியூனியம்(III) குளோரைடு (Neptunium(III) chloride) என்பது NpCl3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது கதிரியக்கப் பண்பு கொண்ட ஒரு சேர்மமாகும். நெப்டியூனியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

நெப்டியூனியம்(III) குளோரைடு
Neptunium(III) chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நெப்டியூனியம்(III) குளோரைடு
வேறு பெயர்கள்
நெப்டியூனியம் டிரைகுளோரைடு, நெப்டியூனியம் முக்குளோரைடு
இனங்காட்டிகள்
20737-06-8 Y
InChI
  • InChI=1S/3ClH.Np/h3*1H;/q;;;+3/p-3
    Key: YCRHCDNZKKGRFF-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 19902958
SMILES
  • Cl[Np](Cl)Cl
  • [Cl-].[Np+3].[Cl-].[Cl-]
பண்புகள்
NpCl3
வாய்ப்பாட்டு எடை 343.41 கி/மோல்
தோற்றம் பச்சை திண்மம்[1]
அடர்த்தி 5.58g/cm3
உருகுநிலை 800 °C (1,470 °F; 1,070 K)[2][1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நெப்டியூனியம்(III) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

அம்மோனியா அல்லது ஐதரசனை பயன்படுத்தி நெப்டியூனியம்(IV) குளோரைடை 350~400 ° செல்சியசு வெப்பநிலையில் சிதைவு வினைக்கு உட்படுத்தினால் நெப்டியூனியம்(III) குளோரைடு உருவாகும்.[1]

2NpCl4+H2 --> 2NpCl3+2HCl

இயற்பியல் பண்புகள் தொகு

நெப்டியூனியம்(III) குளோரைடு 800 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். பச்சை நிறத்தில் திடப்பொருளாகக் காணப்படுகிறது. a = 740.5 பைக்கோமீட்டர் மற்றும் c = 427.3 பைக்கோமீட்டர் மற்றும் ஓர் அலகு கலத்திற்கு இரண்டு வாய்பாட்டு அலகுகள் என்ற அணிக்கோவை அளவுருக்கள் கொண்டு, P63/m (எண். 176) என்ற இடக்குழுவில் அறுகோண படிக அமைப்பில் படிகமாக்குகிறது. இதன் படிக அமைப்பு யுரேனியம்(III) குளோரைடு படிக அமைப்பை ஒத்துள்ளது. கட்டமைப்பில், நெப்டியூனியம் அணுக்கள் ஒவ்வொன்றும் ஒன்பது குளோரின் அணுக்களால் சூழப்பட்டுள்ளன. இதன் விளைவாக மூவுச்சி முக்கோண பட்டக ஒருங்கிணைப்பு உருவாகிறது.

வேதிப் பண்புகள் தொகு

நெப்டியூனியம்(III) குளோரைடு 450 ° செல்சியசு வெப்பநிலையில் நீராற்பகுப்புக்கு உட்பட்டு நெப்டியூணியம் ஆக்சிகுளோரைடை (NpOCl) உருவாக்குகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 《无机化学丛书》.第十卷 锕系 锕系后元素. 张青莲 等. 科学出版社. 8.3.2 镎的卤化物. 2.氯化物 . P160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-030572-5
  2. Arnold F. Holleman, Nils Wiberg: Lehrbuch der Anorganischen Chemie, 102. Auflage, de Gruyter, Berlin 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-017770-1, S. 1969.