நெல் குருத்து பூச்சி

பூச்சி இனம்
மஞ்சள் தண்டு துளைப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
கிராம்பிடே
பேரினம்:
சைர்போபாகா
இனம்:
சை. இன்செர்டுலாசு
இருசொற் பெயரீடு
சைர்போபாகா இன்செர்டுலாசு
(வால்கர், 1863)
வேறு பெயர்கள்
  • சிலோ இன்செர்டுலாசு வால்கர், 1863
  • சிலோ இன்செர்டுலாசு வால்கர், 1917
  • கேடாஜெலா அட்மோடெல்லா வால்கர், 1863
  • இசுகோனோபியசு பங்க்டெல்லசு சீலெர், 1863
  • இசுகோனோபியசு மினிட்டசு சீலெர், 1863
  • தைபனேயா பைபங்க்டிபெரா வால்கர், 1863
  • சிலோ கிரேடியோசெல்லசு வால்கர், 1864
  • ஸ்கோனோபியஸ் பைபங்க்டிபர் ஏபி. குயாடிரிபுன்க்டெலிபெரா இசுடிராண்டு, 1918

மஞ்சள் தண்டு துளைப்பான் (yellow stem borer) அல்லது அரிசி மஞ்சள் தண்டு துளைப்பான் என்பது நெற்பயிரைத் தாக்கும் சைர்போபாகா பேரினத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி சிற்றினமாகும்.

விளக்கம்

தொகு

மஞ்சள் தண்டு துளைப்பான் அல்லது அரிசி மஞ்சள் தண்டு துளைப்பான் (சைர்போபாகா இன்செர்டுலாசு) என்பது கிராம்பிடே குடும்பத்தினைச் சாந்த அந்துப்பூச்சி ஆகும். இது ஆப்கானித்தான், நேபாளம், வடகிழக்கு இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், சுமாத்திரா, சாவகம், போர்னியோ, சுபா, சுலாவெசி, பிலிப்பீன்சு, தைவான், சீனா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1]

ஆண் பூச்சியானது 18 முதல் 22 மிமீ நீளமும் பெண் பூச்சி 34 மிமீ நீளமும் உடையது.[2] முதிர்வடைந்த ஆண் பூச்சி பெண் பூச்சிகளை விட சிறியவை. ஆண் பூச்சி பழுப்பு நிறமுடையது. முன் இறக்கைகள் இருண்ட செதில்களால் போர்த்தப்பட்டுள்ளன. நரம்புகள் இளஞ்சிவப்பு நிறத்துடன் அடர் வண்ணத்தில் காணப்படும். கீழ் கோணத்தில் கருப்பு புள்ளி காணப்படும்.[3]

சூழலியல்

தொகு

இந்தியா, இலங்கை, நேபாலின் சிலபகுதிகளிலும் ஆண்டுதோறும் நெல் விளைச்சலில் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு பெரிய அரிசிப் பூச்சியாக இது கருதப்படுகிறது. இவை விருந்தோம்பும் தாவர தண்டுகளைத் துளைக்கின்றன. முழு வளர்ச்சியடைந்த இளம் உயிரி பழுப்பு நிறமுடன் மஞ்சள் கலந்த பசுமை நிறமாகக் காணப்படும். இவை 20 மிமீ நீளத்தை அடையவும். முதிர்ச்சியடையும் இளம் உயிரி வெள்ளை நிற கூட்டுப்புழுவினைத் தோற்றுவிக்கும்.

பாதிப்பு

தொகு

குஞ்சு பொரித்த பிறகு, ஆரம்பக் காலங்களில் இலை உறைகளைத் துளைத்து, உணவுண்பதன் விளைவாக நீளமான மஞ்சள்-வெள்ளை திட்டுகளை ஏற்படுத்துகின்றன. பின்னர் இது நெற்பயிரின் தண்டு மீது படையெடுத்து, தண்டில் குழியில் தங்கித் தண்டு சுவரின் மேற்பரப்பினை உண்ணும். இப்பாதிப்பு வெளிப்புறமாகப் பார்வைக்கான அறிகுறிகளாக தெரிவதில்லை. மிககடுமையான உண்பதால் பாரன்கிமா திசுக்களில் ஆழமான காயம் ஏற்படுகிறது.[4]

நோய்க்கட்டுப்பாடு

தொகு

உலகெங்கிலும் இவை நெற்பயிரில் அதிகமான சேதத்தினை ஏற்படுத்துவதால், பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. வேதியியல், இயற், உயிரியல் கட்டுப்பாடு மற்றும் பாரம்பரிய முறைகள் மூலம் இந்தப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.[4] பூச்சி தாக்குதலை எதிர்த்து வளரும் நெல் வகைகள், மரபணு மாற்றப்பட்டு உள்ளூர் அரசாங்கங்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உயிரியல் கட்டுப்பாட்டுக்குள், முட்டை ஒட்டுண்ணிகள் அதிகமாகவும் பரவலாகவும் பயன்பாட்டில் உள்ளன. மூன்று வகை டெலானோமசு, டெட்ராசுடிச்சசு மற்றும் டிரைக்கோடெர்மா ஒட்டுண்ணி இனங்கள் முட்டை, இளம் உயிரி மற்றும் வயதுவந்த அந்துப்பூச்சிகளுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இந்தியாவின் நாகாலாந்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[5] கான்செபாலசு லாண்ட்டின்னிசு, எனும் வெட்டுக்கிளி அந்துப்பூச்சி முட்டைகளின் தீவிர வேட்டையாடுகிறது என அறியப்படுகிறது. பல பூச்சி ஒட்டுண்ணிகள், பூஞ்சை, பாக்டீரியாக்கள், தீநுண்மிக்கள் மற்றும் மெர்மெயிட் நெமாட்டோட்களும் இந்த அந்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Savela, Markku. "Scirpophaga incertulas (Walker, 1863)". Lepidoptera and Some Other Life Forms. பார்க்கப்பட்ட நாள் July 23, 2018.
  2. cycle-of-yellow-stem-borer-scirpophaga-incertulas-wlk Life cycle of Yellow stem borer Scirpophaga incertulas Wlk[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Hampson G. F. (1892). "The Fauna Of British India Including Ceylon And Burma Moths Vol-iv". Digital Library of India. p. 558. பார்க்கப்பட்ட நாள் 4 July 2016. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 "yellow stem borer (Scirpophaga incertulas)". Plantwise Technical Factsheet. Archived from the original on 27 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Sarma AK (2006) Efficacy of Trichogramma japonicum Ashmead against yellow stem borer, Scirpophaga incertulas walk on rice in Nagaland. Journal of Applied Zoological Researches 17(2): 196-200. CABI abstract
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்_குருத்து_பூச்சி&oldid=3918765" இலிருந்து மீள்விக்கப்பட்டது