நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம், பட்டியாலா
நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம் (Netaji Subhas National Institute of Sports) (என்ஐஎஸ்) என அழைக்கப்படுகிற நிறுவனம், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பட்டியாலா நகரில் அமைந்துள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (எஸ்ஐஐ) கல்விசார் பிரிவாகும். இது ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு நிறுவனம் ஆகக் கருதப்படுகிறது.
நிறுவப்பட்டது | 7 மே 1961 |
---|---|
அமைவு | பட்டியாலா, இந்தியா |
இணையதளம் | www |
வரலாறு
தொகு7 மே 1961 ஆம் நாளன்று நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 1973 ஜனவரியில் நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம் என மறுபெயர் சூட்டப்பட்டது. இந்த நிறுவனம் 1987 ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைக்கப்பட்டது. இந்நிறுவனம் 268 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பட்டியாலா மாநிலத்தின் முந்தைய அரச இந்நிறுவனம் உள்ளது, இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்திய அரசால் வாங்கப்பட்டது. [1]
நினைவுப்பொருள்கள்
தொகுதற்போது அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு தொடர்பான கலைப்பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 95 கிலோ எடையுள்ள ஹாஸ் (டோனட் வடிவ உடற்பயிற்சி வட்டு) போன்றவை கிலோ, தி கிரேட் காமா எனப்படுகின்ற குத்துச் சண்டை வீரர் பயன்படுத்தியவை உள்ளன. மேலும் 1928 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின்போது மேஜர் தியான் சந்தின் பெற்ற தங்கப் பதக்கம் மற்றும் 1986 ஆம் ஆண்டில் சியோல் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது [2] பி.டி. உஷா அணிந்திருந்த காலணிகள் ஆகியவை தேசிய விளையாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. [3]
துறைகள்
தொகுநேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் விளையாட்டு மருத்துவத் துறை, உடற்பயிற்சி உடலியல் துறை, விளையாட்டு உயிர் வேதியியல் துறை, விளையாட்டு மானுடவியல் துறை, விளையாட்டு உளவியல் துறை, விளையாட்டு ஊட்டச்சத்து துறை, பொது கோட்பாடு மற்றும் பயிற்சி முறைகள், உயிர் விசையியல் துறை உள்ளிட்ட பல துறைகள் செயல்பட்டு வருகின்றன.
விளையாட்டு தொடர்பான வசதிகள்
தொகுநேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் ஜிம்னாசியம் மற்றும் நீச்சல் குளம் வளாகம், மல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, கூடைப்பந்து, பூப்பந்து, மேசைப் பந்தாட்டம் ஆகியவற்றை நடத்துவதற்காக மூன்று உட்புற அரங்குகள், கைப்பந்து, எறிபந்தாட்டம் மற்றும் ஜூடோ, இரண்டு சுவர்ப்பந்து விளையாட்டு அரங்குகள், சைக்கிள் ஓட்டுதல் வெலோட்ரோம் ஹாக்கி விளையாடும் தரை அமைப்பு ஆஸ்ட்ரோடர்ப் மற்றும் மூன்று புல் வயல் அமைப்புகள், தடகள பாதை - செயற்கை (8 பாதைகள்), புல் (4 பாதைகள்) மற்றும் சிண்டர் (8 பாதைகள்), வீசுதலுக்கான பகுதி, சிமெண்ட்டால் ஆன இரண்டு கூடைப்பந்து அரங்குகள், இரண்டு கால்பந்து மைதானங்கள், இரண்டு எறிபந்தாட்ட மைதானங்கள், டென்னிஸ் (3 கடினமான தரைப் பகுதி மற்றும் 3 புல்வெளி தரைப் பகுதிகள்) நான்கு கைப்பந்து மைதானங்கள், டர்ஃப் விக்கெட் துடுப்பாட்ட மைதானம் மற்றும் 6 கிரிக்கெட் வலைகள், வில்வித்தை மைதானம் ஐந்து வழிச் ஜாகிங் மற்றும் கிராஸ் கன்ட்ரி டிராக் , உஷு பயிற்சி மையம், ஃவாள் வீச்சுக்கான பயிற்சி மையம் உள்ளிட்ட பலவிதமான விளையாட்டு தொடர்பான அமைப்புகள் மற்றும் வசதிகள் உள்ளன.
வகுப்புகள்
தொகுஇந்த நிறுவனம் முது அறிவியல் (விளையாட்டு கற்பித்தல்), பட்ட மேற்படிப்பு (விளையாட்டு மருத்துவம்), சான்றிதழ் வகுப்பு (விளையாட்டு கற்பித்தல்), பட்டய வகுப்பு (விளையாட்டு கற்பித்தல்) போன்ற வகுப்புகளையும், திறன் மேம்பாட்டு வகுப்புகளையும் நடத்தி வருகிறது. [4]
குறிப்புகள்
தொகு- ↑ "About us". National Institute of Sports. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
- ↑ "1986 Asian Games", Wikipedia (in ஆங்கிலம்), 2019-11-26, பார்க்கப்பட்ட நாள் 2019-12-17
- ↑ A rare museum, The Tribune (Chandigarh), 24 November 2001.
- ↑ Netaji Subash National Institute of Sports, Patiala