பட்டியாலா இராச்சியம்
பட்டியாலா இராச்சியம் (Patiala State) இந்திய துணைக்கண்டத்தில் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் காலத்தில் பிரித்தானிய இந்தியாவிற்கு வெளியேயிருந்த தன்னாட்சி பெற்ற மன்னராட்சி ஆகும். பட்டியாலா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 17 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
பட்டியாலா இராச்சியம் ਪਟਿਆਲਾ | |||||
மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
1911ஆம் ஆண்டு பஞ்சாபின் நிலப்படத்தில் பட்டியாலா இராச்சியம் | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1763 | |||
• | இந்திய விடுதலை இயக்கம் | 1948 | |||
Population | |||||
• | 1931 | 16,25,000 | |||
தற்காலத்தில் அங்கம் | பஞ்சாபு அரியானா | ||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
1947இல் பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டுச் சென்றபோது, அவர்கள் மன்னர் அரசுகளுக்கு அளித்து வந்த துணைப்படைத் திட்டங்களை கைவிட்டனர். பட்டியாலா மகாராசா புதிய இந்திய ஒன்றியத்துடன் இணைய உடன்பட்டார்.
வரலாறு
தொகுபட்டியாலா இராச்சியம் 1763இல் பாபா ஆலா சிங் என்ற ஜாட் சீக்கியத் தலைவரால் நிறுவப்பட்டது; கிலா முபாரக் என்றறியப்படும் பட்டியாலா கோட்டைக்கான அடிக்கல்லை நாட்டினார். 1761இல் மூன்றாம் பானிபட் போர் முடிந்த பிறகு மராட்டியர்களை ஆப்கானியர்கள் தோற்கடிக்க, பஞ்சாபெங்கும் பஷ்தூன் மக்களின் அதிகாரமே மேலோங்கியிருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் பட்டியாலாவின் அரசர்கள் அரச வம்சத்தை நிலைநிறுத்த முயன்றனர். துராணிப் பேரரசு, மராட்டியப் பேரரசு மற்றும் லாகூரின் சீக்கியப் பேரரசுகளுடன் நாற்பது ஆண்டுகளுக்கு பட்டியாலா இராச்சியம் தொடர்ந்து போராடி வந்தது. 1808இல் பட்டியாலாவின் அரசர் இலாகூரின் இரஞ்சித் சிங்கிற்கு எதிராக பிரித்தானியருடன் இணைந்தனர். பட்டியாலா பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு 17-துப்பாக்கி வணக்கம் செலுத்தும் நாடானது . பட்டியாலாவின் அரசர்கள் கரம் சிங், நரிந்தர் சிங், மகேந்திர சிங், இராஜிந்தர் சிங், பூபேந்தர் சிங் மற்றும் யத்வேந்திர சிங் பிரித்தானியரால் மிகவும் மதிப்புடனும் சிறப்புடனும் நடத்தப்பட்டனர்.
பட்டியாலா நகரம் கோயில் கட்டிடக்கலையைச் சார்ந்து வடிவமைக்கப்பட்டது. சிர்கிந்தைச் சேர்ந்த இந்துக்கள் பட்டியாலாவில் முதலில் குடியேறியவர்கள் ஆவர். அவர்கள் தர்சனி வாயிலுக்கு வெளியே வணிக அங்காடிகளைத் திறந்தனர்.[1]
தற்போதைய மகாராசாவாக மாண்புமிகு கேப்டன் அமரிந்தர் சிங், பட்டியாலாவின் மகேந்திர பகதூர் உள்ளார்; இவர் 2002 முதல் 2007 வரை பஞ்சாபின் முதலமைச்சராக இருந்துள்ளார். அரச வம்சத்தினர் பண்பாடுடையவர்களாகவும் பட்டியாலாவின் அரசியல் சின்னமாகவும் கருதப்படுகின்றனர்.
பட்டியாலாவினுள் இராசத்தானி ஓவியங்கள்
தொகுபட்டியாலா இராச்சியம், மற்ற சீக்கிய நாடுகளிலிருந்து மாறுபட்டிருந்தது; சீக்கிய சமயத்தை ஆதரிக்கவோ சீக்கிய விதிகளைப் பின்பற்றவோ இல்லை. இருப்பினும் இராச்சியத்தின் சமயமாக சீக்கியம் இருந்தது. பின்னாள் பட்டியாலா மகாராசாக்கள் (கரம் சிங்) கிலா முபாரக்கில் இந்து கடவுளரின் ஓவியங்களை அறிமுகப்படுத்தினர். இவற்றை இன்றும் அரண்மனை சுவர்களில் காணலாம். 1800களிலிருந்து இராசபுதன இந்துக் கடவுள் ஓவியங்கள் பட்டியாலாவில் மிகவும் புகழ்பெற்றிருந்தன. மகாராசாக்கள் இராசபுதனப் பாணியிலேயே தங்கள் உருவப்படங்களைத் தீட்டிக்கொண்டனர். இராசத்தானின் இந்து அரச குடும்பங்களுடன் உறவு கொண்டிருந்தனர்.
மகாராசாக்களின் பட்டியல்
தொகு- மகாராசா ஆலா சிங் (1691-1765)
- மகாராசா அமர் சிங் (1748-1782)
- மகாராசா சாகிபு சிங் (1773-1813)
- மகாராசா கரம் சிங் (1798-1845)
- மகாராசா நரிந்தர் சிங் (1823-1862)
- மகாராசா மகேந்திர சிங் (1852-1876)
- மகாராசா இராஜிந்தர் சிங் (1872-1900)
- மகாராசா பூபேந்தர் சிங் (1891-1938)
- மகாராசா யத்வேந்திர சிங் (1913-1974)
- கேப்டன் அமரிந்தர் சிங் (1942-1948)
இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்கு ஒப்பிடுதல்
தொகு1948இல் மகாராசா யத்வேந்தர சிங் இந்தியாவுடன் இணைவதற்கான உடன்பாட்டில் ஒப்பமிட்டார்; தனது இராச்சியத்தை இந்திய அரசுக்கு அளித்து பட்டியாலா இராச்சியத்தை இந்தியப் பஞ்சாபுடன் இணைக்க உடன்பட்டார். தவிர மற்ற அரச மன்னராட்சிகளையும் இந்திய ஒன்றியத்துடன் இணைய வற்புறுத்தினார்.
இதனையும் காண்க
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-24. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.