ஆலா சிங்

பாட்டியாலா சுதேச அரசின் முதல் மன்னர்

ஆலா சிங் (Ala Singh) (1691-1765) பாட்டியாலா சுதேச அரசின் முதலாவது மன்னர் ஆவார்.[1][2] 1691 ஆம் ஆண்டு இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டிண்டா மாவட்டத்தில் இவர் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சவுத்தரி ராம் சிங் சித்து என்பதாகும். துன்னா, சுபா, ஆலா, பகா, புதா, லூதா என்னும் ஆறு குழந்தைகள் இவருக்கு இருந்தனர். கிபி 1526 ஆம் ஆண்டு நடந்த முதல் பானிபட் போருக்குப் பிறகு மிசுலின் சவுத்ரியத் முதன் முதலில் பாபரால் ஆலா சிங்கின் மூதாதையரான பிராமிற்கு வழங்கப்பட்டது.[3]

ஆலா சிங்
Ala Singh
பாட்டியாலாவின் மகாராசா
பின்வந்தவர் மகாராசா அமர் சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு 1691
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டிண்டா மாவட்டத்தின் புல்
இறப்பு 1765
பிள்ளைகள் சர்தாவுல் சிங், பூமியன் சிங், லால் சிங்
பெற்றோர் சவுத்தரி ராம் சிங்

அரசர் மூனாக்கில் இருந்த போது பர்னலா அகமது சா துராணியால் தாக்கப்பட்டது. அரசர் ரூபாய் 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அகமது சா அரசரை கட்டாயப்படுத்தினார். ஆனால், கோரப்பட்ட தொகையில் அவருக்கு 50 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. துரானி மன்னர் இவருக்கு அரசன் என்ற பட்டத்தை வழங்கினார். 727 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியையும் ஆலா சிங்குக்கு வழங்கினார். கிபி 1763 ஆம் ஆண்டில் ஆலா சிங் தனது 57 வது வயதில் பாட்டியாலா நகருக்கு அடித்தளம் அமைத்தார். அதே ஆண்டில் இவர் சீக்கிய கூட்டமைப்புக்கு தலைமை தாங்கி நானு சிங் சைனியுடன் இணைந்து சிர்கிந்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றினார். 1765 ஆம் ஆண்டு ஆலா சிங் இறந்தார். இவரது பேரன் மகாராசா அமர் சிங்கிடம் நாட்டை ஒப்படைத்தார். ஆலாசிங்கின் மூன்று மகன்களும் இவருக்கு முந்தியே இறந்து போனார்கள். மூத்தவர் சர்தாவுல் சிங் 1753 ஆம் ஆண்டிலும் பூமியன் சிங் 1742 ஆம் ஆண்டிலும் இளையவர் லால் சிங் 1748 ஆம் ஆண்டிலும் இறந்தனர்.[4]

மேற்கோள்கள் தொகு

மேலும் வாசிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலா_சிங்&oldid=3810133" இருந்து மீள்விக்கப்பட்டது