நேதாஜி பிறந்தநாள்

விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள்

நேதாஜி ஜெயந்தி (Netaji Jayanti) அல்லது நேதாஜி சுபாசு சந்திர போசு ஜெயந்தி, அதிகாரப்பூர்வமாக பராக்ரம் திவாசு[2] அல்லது பராக்ரம் திவாசு (மொ.'Day of Valour' வீரம் தினம்'),என்பது இந்தியாவின் முன்னணி விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்தியாவில் கொண்டாடப்படும் தேசிய நிகழ்வு ஆகும்.[3][4] இது ஆண்டுதோறும் சனவரி 23 அன்று கொண்டாடப்படுகிறது.[5][6] இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர், நேதாஜி. இவர் இந்தியத் தேசிய இராணுவத்தின் (ஆசாத் ஹிந்த் ஃபௌஜ்) தலைவராக இருந்தார். இவர் நாடு கடந்த இந்திய (ஆசாத் ஹிந்த்) அரசாங்கத்தின் நிறுவனர்-தலைவராக இருந்தார்.[7][8]

நேதாஜி பிறந்தநாள்
Netaji Jayanti
அதிகாரப்பூர்வ பெயர்பராக்ரம் திவாசு[1]
கடைப்பிடிப்போர்இந்தியா
வகைதேசபக்தி, தேசிய, பாரம்பரியம்
முக்கியத்துவம்இந்திய விடுதலையில் முக்கியப் பங்கு
அனுசரிப்புகள்வரலாற்று கொண்டாட்டங்கள்
நாள்23 சனவரி
நிகழ்வுஆண்டுதோறும்

அனுசரிப்புகள்

தொகு

நேதாஜி மறைந்து சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, நேதாஜி ஜெயந்தி யங்கோனில் கொண்டாடப்பட்டது.[7] இது பாரம்பரியமாக இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.[5] மேற்கு வங்கம்,[9] சார்க்கண்டு, திரிபுரா, அசாம் மற்றும் ஒடிசாவில் இந்நாள் அதிகாரப்பூர்வ அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் நேதாஜிக்கு இந்திய அரசு அஞ்சலி செலுத்துகிறது.[10] நேதாஜி ஜெயந்தி 2021ல் அவரது 124வது பிறந்தநாளில் முதன்முறையாக பராக்கிரம் திவாசு எனக் கொண்டாடப்பட்டது.[2]

சிக்கல்கள்

தொகு

நேதாஜி ஜெயந்தியை தேஷ்பிரேம் திவாசு (தேசபக்தி தினம்) என்று அறிவிக்க வேண்டும் என்று பார்வர்டு பிளாக் மற்றும் சுபாஷ் சந்திர போசின் குடும்ப உறுப்பினர்கள் இந்திய அரசைக் கோரினர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தேசநாயக் திவாஸ் (தேசிய மாவீரர் தினம்) மற்றும் தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோரினர். ஆனால் 19 ஜனவரி 2021 அன்று, ஒவ்வொரு ஆண்டும் பராக்ரம் திவாஸ் (வீரம் தினம்) கொண்டாடப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போசின் குடும்ப உறுப்பினர்கள், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், சுபாசின் பிறந்தநாளை ஜனவரி 23 அன்று பராக்கிரம் திவாசு என்று கொண்டாடுவதற்கான மையத்தின் முடிவினை கடுமையாக எதிர்த்தனர்.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Subhash Chandra Bose Birthday 2022: Know About the Netaji Jayanti Which Is Celebrated As Parakram Diwas". SA News Channel (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-23. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
  2. 2.0 2.1 "Government announces 23rd January to be celebrated as "PARAKRAM DIWAS' every year | DD News". ddnews.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-23.
  3. David Gellner (10 September 2009). Ethnic Activism and Civil Society in South Asia. SAGE Publications India. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132104223.
  4. Buddhadeb Ghosh. Local Governance: Search for New Path. Concept Publishing Company. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180697173.
  5. 5.0 5.1 "Netaji Subhas Chandra Bose Jayanti 2020: Famous Quotes by Valiant Leader". News18 (in ஆங்கிலம்). 23 January 2020. பார்க்கப்பட்ட நாள் 31 October 2020.
  6. "Subhas Chandra Bose Birth Anniversary: India will always remain grateful to Subhas Chandra Bose: PM – The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 31 October 2020.
  7. 7.0 7.1 Aryya, Manavati (2007). Patriot, the Unique Indian Leader Netaji Subhas Chandra Bose: A New Personalised Biography. Lotus Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183821087.
  8. "A biographical sketch of Netaji Subhash Chandra Bose!". www.culturalindia.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 November 2020.
  9. "Jan 23 to be observed as Desh Prem Divas". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
  10. "Subhash Chandra Bose Birthday 2022: Know About the Netaji Jayanti Which Is Celebrated As Deshprem Diwas". SA News Channel (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-20. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேதாஜி_பிறந்தநாள்&oldid=3873017" இலிருந்து மீள்விக்கப்பட்டது