நேபாளத்தில் சுற்றுலா
நேபாளத்தில் சுற்றுலா (Tourism in Nepal) பெரிய தொழிலாகவும் அந்நிய செலாவணி மூலம் வருவாய் ஈட்டித்தரும் மிகப்பெரிய ஆதாரமாகவும் திகழ்கிறது. உலகின் மிக உயரமான பத்து மலைகளில் எட்டு மலைகளைக் கொண்ட நேபாளம், மலையேறுபவர்கள், பாறை ஏறுபவர்கள் மற்றும் சாகசத்தை விரும்புபவர்களுக்கு ஒரு விரும்பத்தகுந்த இடமாகும். இந்து மற்றும் [[பௌத்தம்|பௌத்த பாரம்பரியம் மற்றும் அதன் குளிர் காலநிலை ஆகியவை நேபாளத்தின் வலுவான ஈர்ப்புகளாகும்.[1]
நேபாள சுற்றுலா ஒரு பார்வை
தொகுகடல் மட்டத்தில் இருந்து 8848.88 மீ உயரம் கொண்ட உலகின் மிக உயரமான சிகரமான எவரெசுட்டு சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ளது. மலையேறுதல் மற்றும் பிற வகையான சாகச சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கிய இடங்களாகும். புத்தரின் பிறந்த இடமான உலக பாரம்பரிய தளம் லும்பினி, நேபாளத்தின் மேற்குப் பகுதியின் தெற்கில் அமைந்துள்ளது. நாட்டின் மையத்தில் இப்பகுதி அமைந்துள்ளது என்பதோடு நாடு முழுவதும் பிற முக்கியமான மத யாத்திரை தளங்களும் உள்ளன. சுற்றுலாத் துறையானது நாட்டின் வறுமையைப் போக்குவதற்கும், நாட்டில் அதிக சமூக சமத்துவத்தை அடைவதற்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது. சுற்றுலாதுறையின் மூலம் நேபாளத்திற்கு ஆண்டுக்கு $471 மில்லியன் வருவாய் வருகிறது.
. நேபாள அரசாங்கம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உதாரணமாக ஒரு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கும் நோக்கத்துடன் 2011 ஆம் ஆண்டை நேபாள சுற்றுலா ஆண்டாக அறிவித்தது. லும்பினியை மேம்படுத்துவதற்காக நேபாள அரசு 2012 ஆம் ஆண்டை லும்பினி சுற்றுலா ஆண்டாக அறிவித்தது.[2] 2020 ஆம் ஆண்டிற்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்கத்துடன் நேபாளத்திற்கு வாருங்கள் 2020 திட்டத்தை அறிவித்தது.
2017 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அதாவது 70.3% பேர் நேபாளத்தின் புனிதத் தலங்கள் மற்றும் புராதனச் சின்னங்களைக் கவனிப்பதற்காக வந்திருந்தார்கள். 34.5% பேர் மகிழ்ச்சிக்காக வருகை தந்திருந்தனர். இவர்களில் 13.1% பேர் மலையேறுதலுக்காகவும் மீதமுள்ள 18.0% பேர் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள், மாநாடுகள், வணிகம் போன்றவற்றிற்காக நேபாளத்திற்கு வருகை தந்தனர்.
2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அழிவுகரமான நிலநடுக்கத்திற்குப் பிறகும் பின்னர் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களாலும் நேபாளத்தின் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோயால் நேபாளத்தில் சுற்றுலாத் துறை மிகவும் சரிந்தது.[3]
புள்ளி விவரங்கள்
தொகு2007 ஆம் ஆண்டில், நேபாளத்திற்கு வருகை தந்த பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 526,705 பேர்களாக இருந்தது, இது அதற்கு முந்தைய ஆண்டை விட 37.2% அதிகமாகும். 2008 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5% குறைந்து 500,277 பேராக இருந்தது. 2018 ஆம் ஆண்டில்,பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.7 மில்லியனாக இருந்தது. நேபாளத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் பொக்காராவும் ஒன்று.
2008 ஆம் ஆண்டு 55.9% வெளிநாட்டுப் பார்வையாளர்கள் ஆசியாவிலிருந்தும், 27.5% பார்வையாளர்கள் மேற்கு ஐரோப்பியாவிலிருந்தும், 7.6% பார்வையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்தும், 3.2% பேர் ஆத்திரேலியா மற்றும் பசிபிக் பகுதியிலிருந்தும், 2.6% பேர் கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும், 1.5.பேர் மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்தும், ஆப்பிரிக்காவில் இருந்து 0.3% பார்வையாளர்களும் பிற நாடுகளில் இருந்து 1.4%. பார்வையாளர்களும் வருகை தந்தனர். ஆசிய பார்வையாளர்களில் 18.2% பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2008 ஆம் ஆண்டு நேபாளத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சராசரியாக 11.78 நாட்கள் நேபாள நாட்டில் தங்கியுள்ளனர்.[4][5]
வருகைகள்
தொகுஇந்த புள்ளிவிவரம், 1993-2019 ஆம் ஆண்டில் நேபாள நாட்டிற்கு வருகை தந்த பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.:[6] [7]
ஆண்டு | வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை நேபாள வருகை |
% மாற்றம் முந்தைய ஆண்டு |
---|---|---|
1993 | 293,567 | -12.2% |
1994 | 326,531 | +11.2% |
1995 | 363,395 | +11.3% |
1996 | 393,613 | +8.3% |
1997 | 421,857 | +7.2% |
1998 | 463,684 | +9.9% |
1999 | 491,504 | +6.0% |
2000 | 463,646 | -5.7% |
2001 | 361,237 | -22.1% |
2002 | 275,468 | -23.7% |
2003 | 338,132 | +22.7% |
2004 | 385,297 | +13.9% |
2005 | 375,398 | -2.6% |
2006 | 383,926 | +2.3% |
2007 | 526,705 | +37.3% |
2008 | 500,277 | -5.0% |
2009 | 509,956 | +1.9% |
2010 | 602,867 | +18.2% |
2011 | 736,215 | +22.1% |
2012 | 803,092 | +9.1% |
2013 | 797,616 | -0.7% |
2014 | 790,118 | -0.9% |
2015 | 538,970 | -31% |
2016 | 753,002 | +40% |
2017 | 940,218 | +24.8% |
2018 | 1,173,072 | +24.8% |
2019 | 1,197,191 | +2.1% |
நாடுகள் வாரியாக பயணிகள்
தொகுகுறுகிய கால அடிப்படையில் நேபாளத்திற்கு வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் பின்வரும் தேசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்:[8][9][10] [11]
தரம் | நாடு | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 | 2012 |
---|---|---|---|---|---|---|---|---|
1 | இந்தியா | 254,150 | 194,323 | 160,832 | 118,249 | 75,124 | 135,343 | 180,974 |
2 | சீனா | 169,543 | 153,633 | 104,664 | 104,005 | 66,984 | 123,805 | 113,173 |
3 | ஐக்கிய அமெரிக்கா | 93,218 | 91,895 | 79,146 | 53,645 | 42,687 | 49,830 | 47,355 |
4 | ஐக்கிய இராச்சியம் | 61,144 | 63,466 | 51,058 | 46,295 | 29,730 | 36,759 | 35,688 |
5 | இலங்கை | 55,869 | 69,490 | 45,361 | 57,521 | 44,367 | 37,546 | 32,736 |
6 | தாய்லாந்து | 41,653 | 52,429 | 39,154 | 26,722 | 32,338 | 33,422 | 40,969 |
7 | தென் கொரியா | 29,680 | 37,218 | 34,301 | 25,171 | 18,112 | 23,205 | 19,714 |
8 | ஆத்திரேலியா | 38,972 | 38,429 | 33,371 | 25,507 | 16,619 | 24,516 | 20,469 |
9 | மியான்மர் | 36,274 | 41,402 | 30,852 | 25,769 | 21,631 | பொருத்தமில்லை | பொருத்தமில்லை |
10 | செருமனி | 36,641 | 36,879 | 29,918 | 23,812 | 16,405 | 18,028 | 22,263 |
11 | வங்காளதேசம் | 25,849 | 26,355 | 29,060 | 23,440 | 14,831 | 21,851 | 22,410 |
12 | சப்பான் | 30,534 | 29,817 | 27,326 | 22,979 | 17,613 | 25,892 | 26,694 |
13 | பிரான்சு | 30,646 | 31,810 | 26,140 | 20,863 | 16,405 | 24,097 | 21,842 |
14 | மலேசியா | 21,329 | 22,833 | 18,284 | 13,669 | 9,855 | 18,915 | 18,842 |
15 | எசுப்பானியா | 19,057 | 20,214 | 15,953 | 12,255 | 6,741 | 13,110 | 10,412 |
16 | கனடா | 17,102 | 17,317 | 15,105 | 12,491 | 8,398 | 11,610 | 12,132 |
17 | நெதர்லாந்து | 15,032 | 15,353 | 13,393 | 11,453 | 7,515 | 12,320 | 10,516 |
மொத்த பயணிகள் | 1,197,191 | 1,173,072 | 940,8 | 753,002 | 538,970 | 790,118 | 797,616 |
சிட்வான் தேசியப் பூங்கா Chitwan National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
காண்டாமிருகத்துடன் யானை சவாரி |
வன சுற்றுலா
தொகுநேபாள சுற்றுலா அமைச்சகத்தின் கூற்றுப்படி, இருசக்கர வாகன மலையேற்றம், அந்தரத்தில் குதித்தல், மலையேற்றம், நடைப்பயணம், ஓட்டப் பயணம், பாறை ஏற்றம் போன்றவை முக்கிய சுற்றுலா சாகச நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.[12] பறவைகள் கண்காணிப்பு, பறத்தல், வானில் மிதத்தல், படகு சவாரி மூலம் நீர்வழிகளை ஆய்வு செய்தல் போன்றவையும் இச்சாகசங்களில் உள்ளடங்கும்.[13]
-
சிட்வான் தேசியப் பூங்காவில் போலோ விளையாட்டு
ஆன்மீகச் சுற்றுலா
தொகுநேபாளத்தில் பெரும்பான்மையானவர்களின் மதம் இந்து மதம் ஆகும். காட்மாண்டுவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சிவன் கோவிலான பசுபதிநாத் கோயில் பல யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் இந்நாட்டிற்கு ஈர்க்கிறது. பியூதன் மாவட்டத்தில் உள்ள சுவர்கத்வாரியில் உள்ள கோவில் வளாகம்; மிதிலா பகுதியில் சனக்புர்தத்தின் சானகி மந்திர்; துஞ்சே அருகே உள்ள கோசைன்குண்டா ஏரி; தேவகாட்டில் உள்ள கோவில்கள்; கோர்கா மாவட்டத்தில் உள்ள மனகமன கோவில்; பங்லிங் அருகே பதிபரா; மற்றும் சிவபெருமானின் மிகப்பெரிய உலோக சிலை அமைந்துள்ள பல்பா மாவட்ட நேபாள் மகாமிருத்யுஞ்சய சிவசன் போன்றவை பிற முக்கியமான இந்து தளங்களாகும்.
இங்கு பௌத்தம் மிகப்பெரிய சிறுபான்மை மதம் ஆகும். பாரம்பரியமாக கௌதம புத்தரின் பிறப்பிடமாகக் கருதப்படும் லும்பினியில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னம் ஒரு முக்கியமான புனிதத் தலமாகும். மற்றொரு முக்கிய பௌத்த தலமானது காத்மாண்டுவில் உள்ள குரங்கு கோவில் சுயம்புநாத்து ஆகும்.
டாங் பள்ளத்தாக்கு இந்துக்கள் மற்றும் பிற மதத்தினருக்கு ஒரு புனிதமான இடமாகும். சில்லிகோட் மலையில் உள்ள காளிகா மற்றும் மாலிகா தேவி, அம்பேகேசவோரி கோயில், கிருட்டிணன் கோயில், தரபாணி கோயில் ஆகியவை டாங் மாவட்டத்தில் உள்ள புனித தலங்களாகும். சில்லிகோட் மலையானது சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு சிறந்த இடமாகவும், ஓர் அரசனின் பழங்கால அரண்மனையாகவும் உள்ளது.
முக்திநாத் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் புனிதமான இடமாகும். இந்த தளம் முசுதாங்கு மாவட்டத்தில் முக்திநாத் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
பசூரா மாவட்டத்தில் உள்ள பதிமாலிகா கோவில், பாரா மாவட்டத்தில் உள்ள காதிமாய் கோவில், கோட்டாங்கில் உள்ள அலேசி மகாதேவா கோவில். நேபால்கஞ்சில் உள்ள பாகேசுவரி மந்திர். ராச்பிராசில் உள்ள பகபதி மந்திர் போன்றவை நேபாளத்தில் உள்ள சில பிரபலமான கோயில்களாகும்.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ Turner, Rochelle. "Travel & Tourism Economic Impact 2015 Nepal". World Travel & Tourism Council. Archived from the original on July 23, 2016. பார்க்கப்பட்ட நாள் August 2, 2016.
- ↑ Nepal aims to attract 1 million foreign tourists next year பரணிடப்பட்டது 2010-10-02 at the வந்தவழி இயந்திரம் Xinhua News Agency, accessed 21 November 2010
- ↑ Sharma, Bhadra; Gettleman, Jeffrey (2020-11-02). "Mount Everest Empties as Covid-19 Strikes Tourism in Nepal" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2020/11/02/world/asia/coronavirus-nepal-tourism-remittances.html. "The trails snaking through the Himalayas are deserted, including those leading up to Everest Base Camp. Fewer than 150 climbers have arrived this fall season, immigration officials said, down from thousands last year."
- ↑ Survey report பரணிடப்பட்டது 2011-03-04 at the வந்தவழி இயந்திரம், Government of Nepal, Ministry of Finance, accessed 21 November 2010
- ↑ Nepal Tourism Statistics 2010 Report பரணிடப்பட்டது 2012-09-07 at the வந்தவழி இயந்திரம், Government of Nepal, Ministry of Tourism, and Civil Aviation, accessed April 3rd, 2012.
- ↑ Government of Nepal, Ministry of Culture, Tourism & Civil Aviation (May 2016). "Nepal Tourism Statistics 2018" (PDF) (Visitor Arrivals). Archived from the original (PDF) on 2017-11-18. பார்க்கப்பட்ட நாள் 2017-11-23.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Government of Nepal, Ministry of Culture, Tourism & Civil Aviation: "Nepal Tourism Statistics 2019" பரணிடப்பட்டது 2021-12-27 at the வந்தவழி இயந்திரம், Kathmandu, May 2016
- ↑ "Countrywise Tourist Arrival Statistics (2013-2016)". Nepal Tourism Board. Archived from the original on 27 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Arrival Departure Final Summary 2017" (XLSX). Nepal Tourism Board. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Nepal Tourism Statistics 2018" (PDF). tourism.gov.np. Archived from the original (PDF) on 2 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Government of Nepal, Ministry of Culture, Tourism & Civil Aviation: "Nepal Tourism Statistics 2019" பரணிடப்பட்டது 2021-12-27 at the வந்தவழி இயந்திரம், Kathmandu, May 2016
- ↑ "Popular Hiking Routes in Nepal". Everest Uncensored. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015.
- ↑ Major Tourism Activities பரணிடப்பட்டது 2015-07-13 at the வந்தவழி இயந்திரம், Nepal Ministry of Culture, Tourism and Civil Aviation, retrieved 21 October 2014
- ↑ "9 Amazing Nepali Temple You Should Visit Before You Die" (in en-US). Prasant Bhatt. 2018-04-13 இம் மூலத்தில் இருந்து 2018-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180414092341/http://www.prasantbhatt.com/nepal-travel-trekking/9-amazing-nepali-temple-you-must-visit-before-you-die/.
புற இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: நேபாளம்
- Official tourism website பரணிடப்பட்டது 2020-06-22 at the வந்தவழி இயந்திரம்
- Ministry of Tourism and Civil Aviation