நேரும் வீதப்படியான உயிரிழப்புகளுக்கான காரணங்களின் பட்டியல்
உலகளவில் இறப்பு வீதங்களைக் கொண்டு பட்டியலிடப்பட்ட 2002ஆம் ஆண்டிற்கான மனித உயிரிழப்புக்களுக்கான காரணங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அவ்வாண்டில் 57,029,000 இறப்புக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. சில காரணங்களில் அவற்றின் கீழுள்ள, குறிப்பிடக்கூடிய, துணைக்காரணங்களால் நேர்ந்தவையும் சேர்க்கப்பட்டுள்ளன. சிலவற்றில் இவை தவிர்க்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தக் கூட்டுத்தொகை 100 விழுக்காட்டை காட்டாதுள்ளது. 2005ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின்படி, ஏறத்தாழ 58 மில்லியன் பேர்கள் இறந்துள்ளனர்.[1]
எத்தனைமுறை என்பதன்படி காரணங்கள்
தொகுகுறிப்பு:வண்ணமிடப்பட்ட பின்னணி இக்காரணங்கள் பிந்தைய பட்டியல் ஒன்றிலும் இடம்பெற்றுள்ளதைக் குறிக்கிறது.
தொகுப்பு[3] | காரணம் | இறப்பு of விழுக்காடு |
அனைத்து இறப்புக்களும் 100,000க்கு |
ஆண் இறப்புக்கள் 100,000க்கு |
பெண் இறப்புக்கள் 100,000க்கு |
---|---|---|---|---|---|
– | அனைத்துக் காரணங்கள் | 100.0 | 916.1 | 954.7 | 877.1 |
A | இதயக் குழலிய நோய்கள் | 29.34 | 268.8 | 259.3 | 278.4 |
B | நோய்த்தொற்று மற்றும் ஒட்டுண்ணி நோய்கள் | 23.04 | 211.3 | 221.7 | 200.4 |
A.1 | ஆக்சிசன் குறை இதய நோய் | 12.64 | 115.8 | 121.4 | 110.1 |
C | புற்றுப் பண்புள்ள கட்டிகள் (புற்றுநோய்கள்) | 12.49 | 114.4 | 126.9 | 101.7 |
A.2 | பெருமூளை குருதிக்குழாய் நோய்கள் (பக்கவாதம்) | 9.66 | 88.5 | 81.4 | 95.6 |
B.1 | சுவாசத் தொற்றுகள் | 6.95 | 63.7 | 63.5 | 63.8 |
B.1.1 | கீழ் சுவாசக்குழாய் தொற்றுகள் | 6.81 | 62.4 | 62.2 | 62.6 |
D | சுவாசக்குழாய் நோய்கள் | 6.49 | 59.5 | 61.1 | 57.9 |
E | திட்டமிடாத காயங்கள் | 6.23 | 57.0 | 73.7 | 40.2 |
B.2 | எய்ட்சு | 4.87 | 44.6 | 46.2 | 43.0 |
D.1 | நெடுங்கால சுவாச அடைப்பு நோய் | 4.82 | 44.1 | 45.1 | 43.1 |
– | கருக்குழவி கோளாறுகள் | 4.32 | 39.6 | 43.7 | 35.4 |
F | இரையகக் குடலிய நோய்கள் | 3.45 | 31.6 | 34.9 | 28.2 |
B.3 | வயிற்றுப்போக்கு நோய்கள் | 3.15 | 28.9 | 30.0 | 27.8 |
G | திட்டமிடப்பட்ட காயங்கள் (தற்கொலை, வன்முறை, போர், etc.) | 2.84 | 26.0 | 37.0 | 14.9 |
B.4 | காச நோய் | 2.75 | 25.2 | 32.9 | 17.3 |
B.5 | மலேரியா | 2.23 | 20.4 | 19.4 | 21.5 |
C.1 | நுரையீரல் புற்றுநோய்கள் | 2.18 | 20.0 | 28.4 | 11.4 |
E.1 | சாலை விபத்துகள் | 2.09 | 19.1 | 27.8 | 10.4 |
B.6 | சிறு அகவையர் நோய்கள் | 1.97 | 18.1 | 18.0 | 18.2 |
H | நரம்பு உளமருத்துவ நோய்கள் | 1.95 | 17.9 | 18.4 | 17.3 |
– | நீரிழிவு நோய் | 1.73 | 15.9 | 14.1 | 17.7 |
A.3 | உயரழுத்த இதய நோய் | 1.60 | 14.6 | 13.4 | 15.9 |
G.1 | தற்கொலை | 1.53 | 14.0 | 17.4 | 10.6 |
C.2 | வயிற்றுப் புற்றுநோய் | 1.49 | 13.7 | 16.7 | 10.5 |
I | சிறுநீர் இனவள உறுப்புகள் நோய்கள் | 1.49 | 13.6 | 14.1 | 13.1 |
F.1 | கல்லீரலின் கல்லீரல் இழைநார் வளர்ச்சி | 1.38 | 12.6 | 16.1 | 9.1 |
I.1 | சிறுநீரக அழற்சி/நிறுநீரக நோய் | 1.19 | 10.9 | 11.0 | 10.7 |
C.3 | பெருங்குடல் மலக்குடல் புற்றுநோய் | 1.09 | 10.0 | 10.3 | 9.7 |
C.4 | கல்லீரல் புற்றுநோய் | 1.08 | 9.9 | 13.6 | 6.2 |
B.6.1 | தட்டம்மை | 1.07 | 9.8 | 9.8 | 9.9 |
G.2 | வன்முறை | 0.98 | 9.0 | 14.2 | 3.7 |
– | தாயிறப்பு கோளாறுகள் | 0.89 | 8.2 | 0.0 | 16.5 |
– | பிறவிசார் கோளாறுகள் | 0.86 | 7.9 | 8.1 | 7.7 |
J | ஊட்டச்சத்துக் குறைபாடுகள் | 0.85 | 7.8 | 6.9 | 8.7 |
C.5 | மார்பகப் புற்றுநோய் | 0.84 | 7.7 | 0.1 | 15.3 |
C.6 | உணவுக்குழாய் புற்றுநோய் | 0.78 | 7.2 | 9.1 | 5.2 |
A.4 | அழல் இதய நோய் | 0.71 | 6.5 | 6.7 | 6.2 |
H.1 | ஆல்சைமர் நோய் மற்றும் பிற மறதிநோய்கள் | 0.70 | 6.4 | 4.7 | 8.1 |
E.2 | விழுதல் | 0.69 | 6.3 | 7.5 | 5.0 |
E.3 | மூழ்குதல் | 0.67 | 6.1 | 8.4 | 3.9 |
E.4 | நஞ்சு உட்கொளல் | 0.61 | 5.6 | 7.2 | 4.0 |
C.7 | நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்கள், பல சார்ப்புற்றுகள் | 0.59 | 5.4 | 5.4 | 5.4 |
A.5 | வாத இதய நோய் | 0.57 | 5.3 | 4.4 | 6.1 |
C.8 | வாய் மற்றும் வாய்த்தொண்டை புற்றுநோய்கள் | 0.56 | 5.1 | 7.1 | 3.1 |
E.5 | நெருப்புக்கள் | 0.55 | 5.0 | 3.8 | 6.2 |
B.6.2 | கக்குவான் | 0.52 | 4.7 | 4.7 | 4.8 |
C.9 | முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் | 0.47 | 4.3 | 8.6 | 0.0 |
C.10 | இரத்தப் புற்றுநோய் | 0.46 | 4.2 | 4.7 | 3.8 |
F.2 | வயிற்றுப் புண் | 0.46 | 4.2 | 5.0 | 3.5 |
J.1 | புரத-சக்தி குறைபாடு | 0.46 | 4.2 | 4.2 | 4.2 |
– | நாளமில்லாச் சுரப்பி/ஊட்டச்சத்துக் கோளாறுகள் | 0.43 | 3.9 | 3.4 | 4.4 |
D.2 | ஈழை நோய் | 0.42 | 3.9 | 3.9 | 3.8 |
C.11 | கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் | 0.42 | 3.8 | 0.0 | 7.7 |
C.12 | கணையப் புற்றுநோய் | 0.41 | 3.7 | 3.9 | 3.5 |
B.6.3 | இசிவு நோய் | 0.38 | 3.4 | 3.4 | 3.5 |
B.7 | பால்வினை நோய்கள்கள், ஏய்ட்சு நீங்கலாக | 0.32 | 2.9 | 2.9 | 2.9 |
C.13 | சிறுநீர்ப்பை புற்றுநோய் | 0.31 | 2.9 | 4.0 | 1.7 |
B.8 | மூளையழற்சி | 0.30 | 2.8 | 2.9 | 2.7 |
G.3 | போர் | 0.30 | 2.8 | 5.0 | 0.5 |
B.7.1 | சிபிலிசு | 0.28 | 2.5 | 2.7 | 2.3 |
– | புற்றுப் பண்பில்லாக் கட்டிகள் | 0.26 | 2.4 | 2.4 | 2.4 |
J.2 | இரும்புச் சத்துக் குறை இரத்தசோகை | 0.24 | 2.2 | 1.5 | 2.9 |
C.14 | கருவகப் புற்றுநோய் | 0.24 | 2.2 | 0.0 | 4.4 |
B.9 | மலேரியா தவிர்த்த அயனமண்டல நோய்கள் | 0.23 | 2.1 | 2.5 | 1.6 |
H.2 | கால்-கை வலிப்பு | 0.22 | 2.0 | 2.2 | 1.8 |
– | தசைக்கூட்டு நோய்கள் | 0.19 | 1.7 | 1.2 | 2.2 |
B.10 | ஈரலழற்சி பி | 0.18 | 1.7 | 2.3 | 1.0 |
H.3 | நடுக்குவாதம் | 0.17 | 1.6 | 1.6 | 1.6 |
H.4 | குடிப்பழக்க நோய்கள் | 0.16 | 1.5 | 2.5 | 0.4 |
H.5 | போதைப்பொருள் பயன்பாட்டு கோளாறுகள் | 0.15 | 1.4 | 2.2 | 0.5 |
B.1.2 | மேல் சுவாசக்குழாய் தொற்றுக்கள் | 0.13 | 1.2 | 1.2 | 1.2 |
C.15 | கருப்பைப் புற்றுநோய் | 0.12 | 1.1 | 0.0 | 2.3 |
– | தோல் நோய்கள் | 0.12 | 1.1 | 0.8 | 1.4 |
C.16 | கரும்புற்றுநோய் மற்றும் பிற தோல் புற்றுநோய்கள் | 0.12 | 1.1 | 1.1 | 1.0 |
B.11 | ஈரலழற்சி C | 0.09 | 0.9 | 1.1 | 0.6 |
B.9.1 | லெசுமானியசிசு (ஓரணு ஒட்டுண்ணி நோய்) | 0.09 | 0.8 | 1.0 | 0.7 |
B.9.2 | டிரிப்பனோ சோமா ஒட்டுண்ணி நோய் | 0.08 | 0.8 | 1.0 | 0.5 |
I.2 | தீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கம் | 0.06 | 0.5 | 1.0 | 0.0 |
மேற்சான்றுகள்
தொகு- ↑ WHO (2005). "Cancer".
- ↑ World Health Organization (2004). "Annex Table 2: Deaths by cause, sex and mortality stratum in WHO regions, estimates for 2002" (pdf). The world health report 2004 - changing history. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ தொகுப்பு ஓர் தொடர்புடைய காரணங்களின் தொகுப்பிற்கான மதிப்பைக் காட்டுகிறது; காட்டாக, "A" விற்கான புள்ளிவிவரங்கள் (பெருமூளை குருதிக்குழாய் நோய்கள்) "A.1" (ஆக்சிசன் குறை இதய நோய்), "A.2" (பெருமூளை குருதிக்குழாய் நோய்), போன்றவற்றிற்கானதையும் உள்ளடக்கும். ஏதேனும் காரணத்திற்கு மதிப்புக் காட்டப்படாவிட்டால், அதனுடன் வேறெந்தக் காரணமும் தொகுக்கப்படவில்லை.