உணவுக்குழாய் புற்றுநோய்
உணவுக்குழாய் புற்றுநோய் (Esophageal cancer) என்பது தொண்டைக்கும் வயிற்றுக்கும் இடையில் இயங்கும் உணவுக் குழாயில் ஏற்படும் புற்றுநோயாகும். [8] விழுங்கற்கடுமை, எடை இழப்பு ஆகியன இதன் அறிகுறிகளில் முக்கியமானது ஆகும்.. [1] பிற அறிகுறிகள் விழுங்கும்போது வலி, கரகரப்பான குரல், காறை எலும்பைச் சுற்ரியுள்ள நிணநீர்ச் சுரப்பிகள் பெரிதானவையாக இருத்தல், வறட்டு இருமல், இருமல் அதிகரித்தல் அல்லது அல்லது இரத்த வாந்தி எடுத்தல் ஆகியவையும் இருக்கலாம்.
உணவுக்குழாய் புற்றுநோய் | |
---|---|
ஒத்தசொற்கள் | Oesophageal cancer |
உணவுக்குழாய் புற்றுநோய் பரவு கல்லீரலைப் பாதித்துள்ள நிலையை வரைபடம் காட்டுகிறது | |
சிறப்பு | புற்றுநோயியல், பொது அறுவை சிகிச்சை |
அறிகுறிகள் | விழுங்கற்கடுமை, எடை இழப்பு, குரல் கரகரப்பு, [[காறை எலும்பு|காறை எலும்பைச் சுற்றியுள்ள நிணநீர்ச் சுரப்பி வீக்கமடைதல், இரத்த வாந்தி[1] | risks = புகையிலை, குடிப்பழக்கம், மிகச் சூடான பானங்கள்,[பாக்கு]] மெல்லுதல், உடற் பருமன், இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்[2][3] |
நோயறிதல் | உயிரகச்செதுக்கு<[4] |
சிகிச்சை | அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம்[4] |
முன்கணிப்பு | ஐந்தாண்டுகள் வரை உயிர்வாழும் விகிதம் ~15%[1][5] |
நிகழும் வீதம் | 746,000 affected as of 2015[6] |
இறப்புகள் | 509,000 (2018)[7] |
இந்த உணவுக்குழாய் புற்றுநோயில் இரண்டு முக்கிய துணை வகைகள் உள்ளன. முதலாவது உணவுக்குழாய் செதிள்-செல் புற்றுநோய் ( ESCC என சுருக்கமாக), [9] இது வளரும் நாடுகளில் மிகவும் பொதுவானது ஆகும். மற்றொன்று வளர்ந்த நாடுகளில் பொதுவாகக் காணப்படும் உணவுக்குழாய் அடினோகார்சினோமா (EAC) ஆகும். [8] சிறிதளவு பொதுவான வகைகளும் ஏற்படுகின்றன. ஸ்குவாமஸ்-செல் கார்சினோமா உணவுக்குழாயை வரிசைப்படுத்தும் புறவணியிழையச் செல்களிலிருந்து எழுகிறது.[10] அடினோகார்சினோமா உணவுக்குழாயின் கீழ்நிலையில் மூன்றாவதாக உள்ள சுரப்பிசார் உயிரணுக்களிலிருந்து தோன்றுகிறது. பெரும்பாலும் அவை ஏற்கனவே குடல் உயிரணு வகையாக மாறியிருக்கும். (இந்த நிலை பாரெட்டின் உணவுக்குழாய் என அழைக்கப்படுகிறது). [11] ஸ்கொமஸ்-செல் வகைக்கான காரணங்களில் புகையிலை, ஆல்கஹால், மிகவும் சூடான பானங்கள் அருந்துதல், மோசமான உணவுப் பழக்கம், வெற்றிலை மெல்லுதல் ஆகியவை அடங்கும். [3] அடினோகார்சினோமா வகையின் மிகவும் பொதுவான காரணங்கள் புகைபிடித்தல், புகையிலை, உடல் பருமன் மற்றும் இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ஆகியவையாகும்.[2]
இந்தப் புற்று நோயானது ஒளியிழைப் படக்கருவி கொண்டு செய்யப்பட்ட உயிரகச் செதுக்கு மூலம் கண்டறியப்படுகிறது. [4] புகைப்பிடிப்பதை நிறுத்துதல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது ஆகியவை இந்தப் புற்றுநோயை தடுக்க உதவும். [1] [8] சிகிச்சையானது புற்றுநோயின் நிலை மற்றும் பாதித்துள்ள இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதனுடன் பாதிக்கப்பட்ட நபரின் பொதுவான நிலை மற்றும் தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான ஸ்குவாமஸ்-செல் புற்றுநோய்க்கு நம்பிக்கையுடன் கூடிய அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படலாம் . பிற சந்தர்ப்பங்களில், கதிர்வீச்சுடன் கூடிய அல்லது கதிர் வீச்சு இல்லாத கீமோதெரபி அறுவை சிகிச்சையுடன் பயன்படுத்தப்படுகிறது. கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை கொடுத்தல் மூலம் பெரிய கட்டிகளின் வளர்ச்சியானது மெதுவாகக் கூட இருக்கலாம். நோய் மிகவும் விரிவாகப் பரவியிருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட நபர் அறுவை சிகிச்சைக்குத் தயாராக இல்லாவிட்டாலோ, மரணவலி தணிப்புச் சிகிச்சை பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, உணவுக்குழாய் புற்றுநோய் உலகளவில் எட்டாவது பொதுவான புற்றுநோயாகும், இந்த ஆண்டில் 572,000 புதிய நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது 1990 ஆம் ஆண்டில் 345,000 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் சுமார் 509,000 இறப்புகளை ஏற்படுத்தியது.[7] [12] இந்த விகிதங்கள் நாடுகளிடையே பரவலாக வேறுபடுகின்ற. இதில் எல்லா நிகழ்வுகளிலும் பாதி சீனாவில் நிகழ்கின்றன. [8] இது பெண்களை விட ஆண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட மூன்று மடங்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நோயின் விளைவுகள், இந்த நோய்த் தாக்கம், பிற மருத்துவ நிலைமைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை, ஆனால் பொதுவாக நோயறிதல் பெரும்பாலும் தாமதமாகக் கண்டறியப்படுவதால் விள்ளைவுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. [13] நோய்க் கண்ட பின் ஐந்தாண்டுகளுக்கு உயிர்வாழும் சாத்திய விகிதங்கள் 13% முதல் 18% வரை இருக்கும். [1][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Tumors". Ferri's clinical advisor 2013. Mosby (Elsevier). 2012. pp. 389–391. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0323083737.
- ↑ 2.0 2.1 Zhang (Jun 2012). Epidemiologic differences in esophageal cancer between Asian and Western populations.. பக். 281–6.
- ↑ 3.0 3.1 Akhtar (February 2013). Areca nut chewing and esophageal squamous-cell carcinoma risk in Asians: a meta-analysis of case-control studies. பக். 257–65.
- ↑ 4.0 4.1 4.2 Stahl, M; Mariette, C; Haustermans, K; Cervantes, A; Arnold, D; ESMO Guidelines Working, Group (Oct 2013). "Oesophageal cancer: ESMO Clinical Practice Guidelines for diagnosis, treatment and follow-up.". Annals of Oncology 24 Suppl 6: vi51–6. doi:10.1093/annonc/mdt342. பப்மெட்:24078662 இம் மூலத்தில் இருந்து 2016-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160323065221/http://annonc.oxfordjournals.org/content/24/suppl_6/vi51.full.
- ↑ 5.0 5.1 "SEER Stat Fact Sheets: Esophageal Cancer". National Cancer Institute. Archived from the original on 6 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014.
- ↑ GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282.
- ↑ 7.0 7.1 "Esophageal Cancer Factsheet" (PDF). Global Cancer Observatory. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
- ↑ 8.0 8.1 8.2 8.3 Montgomery, EA; et al. (2014). "Oesophageal Cancer". World Cancer Report 2014. World Health Organization. pp. 528–543. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9283204299.
- ↑ Even by those using the British English spelling "oesophagus"
- ↑ Kelsen (2007). Gastrointestinal oncology: principles and practices. Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781776172.
- ↑ Whittemore (2006). Cancer epidemiology and prevention. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199747979.
- ↑ Global and regional mortality from 235 causes of death for 20 age groups in 1990 and 2010: a systematic analysis for the Global Burden of Disease Study 2010.
- ↑ Esophageal cancer. http://gastro.ucsd.edu/fellowship/materials/Documents/Esophageal%20Cancer/NEJM%202003%20Esophageal%20CA%20.pdf.