நேரு விளையாட்டரங்கம், கோட்டயம்
இந்தியாவின் கேரளாவில் உள்ள விளையாட்டு அரங்கம்
சவகர்லால் நேரு விளையாட்டரங்கம் (Nehru Stadium, Kottayam) இந்தியாவின் கேரளாவிலுள்ள கோட்டயத்தில் உள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டு மைதானமாகும். இந்த விளையாட்டரங்கம் பெரும்பாலும் தடகளம் மற்றும் கால்பந்து போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சவகர்லால் நேருவின் பெயரில் உள்ள இந்திய மைதானங்களில் இதுவும் ஒன்றாகும். .
നാഗമ്പടം സ്റ്റേഡിയം | |
அமைவிடம் | கோட்டயம், கேரளம் |
---|---|
உருவாக்கம் | 1972 |
இருக்கைகள் | 18,000 |
உரிமையாளர் | கேரள அரசு |
கட்டிடக் கலைஞர் | தகவல் இல்லை |
இயக்குநர் | கோட்டயம் நகராட்சி |
முடிவுகளின் பெயர்கள் | |
கிரீன் பார்க்கு முனை பாலம் முனை | |
25 சூலை 2015 இல் உள்ள தரவு மூலம்: Cricinfo |
18,000 பேர் உட்கார்ந்து பார்க்கும் திறன் கொண்ட இந்த விளையாட்டரங்கம் 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1972 முதல் 1993 ஆம் ஆண்டு வரை துடுப்பாட்டப் போட்டிகள் இங்கு நடத்தப்பட்டன. இங்கு ஐந்து முதல்தர போட்டிகளும் [1] இரண்டு பட்டியல் ஏ வகைப் போட்டிகளும் நடந்தன. [2] நீச்சல் குளம், செயற்கைப் பாதை, கூடைப்பந்து மற்றும் தென்னிசு மைதானங்கள் போன்றவற்றுடன் 2014 ஆம் ஆண்டு இந்த விளையாட்டரங்கம் புதுப்பிக்கப்பட்டது [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Firs-class matches". Archived from the original on 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
- ↑ "List A". Archived from the original on 8 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Nehru Stadium to be modern sports complex". 26 January 2014. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/nehru-stadium-to-be-modern-sports-complex/article5619440.ece.
புற இணைப்புகள்
தொகு- Wikimapia
- Cricketarchive பரணிடப்பட்டது 24 மார்ச்சு 2018 at the வந்தவழி இயந்திரம்