நேர்மாறு (கணிதம்)

கணிதத்தில், நேர்மாறு (Inverse) என்பது பெரும்பான்மையான இடங்களில் ஏதாவது ஒரு கருத்துக்கு எதிர்மாறான ஒன்றாகக் கருதப்படுகிறது. நேர்மாறு மற்றும் அதிலிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் கணிதப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

e எனும் முற்றொருமை உறுப்பைக் கொண்ட ஈருறுப்புச் செயலி * ஐப்பொறுத்து ஒரு உறுப்பு x ன் நேர்மாறு உறுப்பு y எனில்,

x * y = y * x = e ஆகும்.
சார்புகளின் தொகுப்பு என்ற செயலைப் பொறுத்த நேர்மாறு உறுப்பு, தரப்பட்ட சார்பு தரும் மாற்றத்தைத் தலைகீழாக மாற்றும் சார்பாகும்:
f–1(f(x)) = x.
ஒரு வடிவவியல் உருமாற்றம்.
தளத்தில் வட்டத்தின் உட்புறம் வெளிப்புறமாகவும் வெளிப்புறம் உட்புறமாகவும் மாறும் ஒரு உருமாற்றம்.
நுண்புல இயற்கணிதத்தின் ஒரு கருத்து
~p → ~q என்பது pq என்ற கூற்றின் நேர்மாறு.
அணிப்பெருக்கல் செயலைப் பொறுத்த நேர்மாறு உறுப்பு.
நேர்மாறு அணியினைப் பொதுமைப்படுத்தல்;
என்ற சமன்பாட்டினை நிறைவு செய்யும் x மற்றும் y மாறிகளுக்கு இடையே உள்ள தொடர்பு.
ஒரு விசையின் எண்ணளவையானது தூரத்தின் வர்க்கத்தின் எதிர் விகிதசமத்தில் இருக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்மாறு_(கணிதம்)&oldid=2744708" இலிருந்து மீள்விக்கப்பட்டது