நைட்ரைல் சயனைடு

வேதிச் சேர்மம்

நைட்ரைல் சயனைடு (Nitryl cyanide) NCNO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் ஆற்றல்மிகு வேதிச் சேர்மமாகும். நைட்ரைல் சயனைடு சேர்மம் 2,4,6-முந்நைட்ரோ-1,3,5-முவசீன் என்ற கோட்டுபாட்டு ரீதியான வெடியுப்பு தயாரிப்பதற்கு உதவும் சாத்தியமான முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுகிறது.[1][2]

நைட்ரைல் சயனைடு
Nitryl cyanide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நைட்ரோபார்மோநைட்ரைல்
இனங்காட்டிகள்
105879-05-8
InChI
  • InChI=1S/CN2O2/c2-1-3(4)5
    Key: PLXPTFQGYWXIEA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15798559
SMILES
  • [O-][N+](=O)C#N
பண்புகள்
CN2O2
வாய்ப்பாட்டு எடை 72.02 g·mol−1
தோற்றம் Colourless liquid
அடர்த்தி 1.24 g ml−1 (−79 °செல்சியசு)
உருகுநிலை −85 °C (−121 °F; 188 K)
கொதிநிலை 7 °C (45 °F; 280 K)
நீருடன் வினை புரியும்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
212 kJ mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

நைட்ரைல் சயனைடு முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. நைட்ரோனியம் நான்குபுளோரோபோரேட்டுடன் டெர்ட்-பியூட்டைல் மெத்தில்சிலைல் சயனைடு சேர்த்து −30 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் நைட்ரைல் சயனைடு உருவாக்கிறது.[1] டெர்ட்-பியூட்டைல்சிலைல் புளோரைடும் போரான் முப்புளோரைடும் உடன்விளைபொருள்களாகத் தோன்றுகின்றன.[1]

NO2BF4 + t−BuMe2SiCN → NCNO2 + t−BuMe2SiF + BF3

இந்த முறையில் தோறும்ன் மாற்றம் 50% மட்டுமேயாகும். மேலும் டெர்ட்-பியூட்டைல்டிமெத்தில்சிலைலை அதிகமாகப் பயன்படுத்துவதால் விளைபொருள் மேலும் குறைகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரைல்_சயனைடு&oldid=3755473" இலிருந்து மீள்விக்கப்பட்டது