நைட்ரோசிலசைடு

நைட்ரோசிலசைடு (Nitrosylazide) என்பது N4O, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது சிறிதும் நிலைப்புத் தன்மையற்ற நைட்ரசன் ஆக்சைடு வகைச் சேர்மமாகும். தாழ் வெப்பநிலையில் சோடியம் அசைடையும் நைட்ரோசில் குளோரைடையும் சேர்த்து சூடாக்கும் தொகுப்பு வினை மூலமாக நைட்ரோசிலசைடு தயாரிக்க முடியும்.

நைட்ரோசிலசைடு
இனங்காட்டிகள்
62316-46-5
InChI
  • InChI=1S/N4O/c1-2-3-4-5 Y
    Key: LHKVDVFVJMYULK-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18974641
  • [N-]=[N+]=NN=O
பண்புகள்
N4O
வாய்ப்பாட்டு எடை 72.03 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

−50 0செ வெப்பநிலைக்குக் கீழ் நைட்ரோசிலசைடு வெளிர் மஞ்சள் நிறத் திண்மமாக உருவாகிறது. வெப்பநிலை இதைவிட அதிகரிக்கும் போது மூலக்கூறு நைட்ரசன் மற்றும் நைட்ரசாக்சைடாகச் சிதைவடைகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோசிலசைடு&oldid=3945583" இலிருந்து மீள்விக்கப்பட்டது