நைட்ரோ அசிட்டிக் அமிலம்
நைட்ரோ அசிட்டிக் அமிலம் (Nitroacetic acid) என்பது (NO2)CH2CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பதிலீடு செய்யப்பட்ட இந்த கார்பாக்சிலிக் அமிலம் நைட்ரோ மீத்தேன் தயாரிக்கப் பயன்படும் ஒரு முன்னோடிச் சேர்மமாகும். வேதித் தொகுப்பு வினைகளில் வினையாக்கியாகவும் இழுவைப் பந்தயங்களில் ஓர் எரிபொருளாகவும் நைட்ரோ அசிட்டிக் அமிலம் பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-நைட்ரோ அசிட்டிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
நைட்ரோ அசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
625-75-2 | |
ChEMBL | ChEMBL571463 |
ChemSpider | 39723 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 43581 |
| |
பண்புகள் | |
C2H3NO4 | |
வாய்ப்பாட்டு எடை | 105.05 g·mol−1 |
காடித்தன்மை எண் (pKa) | 1.68 [1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகுளிர்ந்த சிறிதளவு கார நீர்க்கரைசலில் குளிர்ந்த குளோரோ அசிட்டிக் அமிலத்தை சேர்த்து தொடர்ந்து நீரிய சோடியம் நைட்ரைட்டு கரைசலை கலப்பதன் மூலம் நைட்ரோ அசிட்டிக் அமிலத்தை தயாரிக்க முடியும். கரைசலை அதிக காரமாக்காமல் பார்த்துக் கொள்வதும் சோடியம் கிளைக்கோலேட்டு உருவாக விடாமல் கரைசலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதும் இச்செயல் முறையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளாகும்.
வினைகள்
தொகுநைட்ரோமீத்தேன் தயாரிப்பில் நைட்ரோ அசிட்டிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் தொடர்புடைய உப்பு 80 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெப்ப கார்பாக்சில் நீக்கம் அடைந்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Dippy, J. F. J.; Hughes, S. R. C.; Rozanski, A. (1959). "498. The dissociation constants of some symmetrically disubstituted succinic acids". Journal of the Chemical Society (Resumed): 2492. doi:10.1039/jr9590002492.