நைனா தேவி (பாடகர்)
நைனா தேவி (27 செப்டம்பர் 1917 - 1 நவம்பர் 1993) மேலும் நைனா ரிப்ஜித் சிங் என்றும் அழைக்கப்படுபவர், இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் இந்திய பாடகர் ஆவார். தும்ரி இசையால் மிகவும் பிரபலமான இவர் தாத்ரா மற்றும் கசல் (இசை) பாடியுள்ளார். இவர் அகில இந்திய வானொலியில் இசை தயாரிப்பாளராகவும் பின்னர் தூர்தர்ஷனிலும் இருந்தார். தனது இளம் வயதிலேயே கிர்ஜா சங்கர் சக்ரவர்த்தியிடம் இசை பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் 1950 களில் ராம்பூர்-சஹாஸ்வான் கரானாவின் உஸ்தாத் முஷ்டாக் உசேன் கான் மற்றும் பெனாரஸ் கரானாவின் ரசூலன் பாய் ஆகியோரிடம் மீண்டும் இசை பயிற்சியைத் தொடங்கினார். கொல்கத்தாவில் ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த இவர், 16 வயதில் கபூர்தலா மாநில அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். 1949 இல் கணவர் இறந்த பின்னரே இசை நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினார். பின்னர் இவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தார்.
1974 ஆம் ஆண்டில், இந்திய அரசின்நான்காவது மிக உயர்ந்த கவுரவ விருதானபத்மசிறீ அவருக்கு வழங்கப்பட்டது. [1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி
தொகுநிலினா சென் (நைனா தேவி) கொல்கத்தாவில் ஒரு பிரபுத்துவ பெங்காலி குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா கேசுப் சந்திர சென், தேசியவாத தலைவரும் பிரம்ம சமாஜ இயக்கத்தின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். ஐந்து உடன்பிறப்புகளில் ஒருவரான (சுனித், பினிதா, சாதோனா, நிலினா மற்றும் பிரதீப்), நிலினா அவர்களின் பெற்றோர்களான பேரறிஞர் சரல் சந்திர சென் மற்றும் நிர்மலா (நெல்லி) ஆகியோரிடமிருந்து தாராளமய வளர்ப்பு முறையில் வளர்ந்தார். இவரது மாமா பஞ்சு, இளம் நிலினாவை அங்கர்பலாவின் இசை நிகழ்ச்சிக்கு உள்ளூர் அரங்கிற்கு அழைத்துச் சென்றபோது இவருக்கு இசையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பிறகு, மஸ்ஜித் பாரி தெருவில் உள்ள தனது வீட்டில் அகுர்பாலாவைக் கேட்கச் சென்றார். இறுதியில் பிரபல பாடகரும் ஆசிரியருமான வங்காளத்தில் கயால் பாரம்பரியத்தை புத்துயிர் பெறுவதில் பெயர் பெற்ற கிரிஜா ஷங்கர் சக்ரவர்த்தியிடம் (1885-1948) ஒன்பது ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.[2]
1934 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், கபுர்தலா மாநிலத்தைச் சேர்ந்த ராஜா சரஞ்சித் சிங்கின் மூன்றாவது மகனான ரிப்ஜித் சிங் (பி. 1906) என்பவரை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு இவர் பஞ்சாபில் உள்ள கபுர்தலாவுக்குச் சென்றார். மேலும் இவர் தொடர்ந்து பாட அனுமதிக்கப்படவில்லை. 1949 ஆம் ஆண்டு இவரது கணவர் இறந்த போது, இவரது வயது 32 ஆகும். [3]
தொழில்
தொகு1949 இல் கணவர் இறந்த பிறகு, அவர் தில்லிக்கு குடிபெயர்ந்து தனது வாழ்நாள் முழுவதும் தில்லியில் கழித்தார். தில்லியில் கலை புரவலரும் டி.சி.எம் ஸ்ரீராம் குழுமத்தின் லாலா சரத் ராமின் மனைவியுமான சுமித்ரா சரத் ராமுடன் தொடர்பு கொண்டார். பின்னர் தில்லியில் ஒரு சிறிய கலை நிகழ்ச்சியான ஜான்கர் கமிட்டியை நடத்தி வந்தார். இது ஸ்ரீராம் பாரதிய கால கேந்திராவை நிறுவுவதற்கு வழி வகுத்தது. 1952 இல், தேவி அதன் கலை இயக்குநராக இருந்தார். [4] அடுத்த ஆண்டுகளில், தில்லியின் அகில இந்திய வானொலியின் இசை தயாரிப்பாளராகவும், அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலுடன் தயாரிப்பாளராகவும் இருந்தார். [2] [5] இதற்கிடையில், தில்லிக்கு வந்தபின், அவர் மீண்டும் தனது இசைப் பயிற்சியைத் தொடங்கினார். முதலில் பாரதிய கலா கேந்திரத்தில் ஆசிரியராக இருந்த ராம்பூர்-சஹாஸ்வான் கரானாவின் டொயன் உஸ்தாத் முஷ்டாக் ஹுசைன் கானிடமும் (இறப்பு: 1964), பின்னர் தும்ரியின் புராப் ஆங் பாணியை பெனாரஸ் கரானாவின் ரசூலன் பாயிடமும் கற்றுக் கொண்டார். மேலும் நைனா தேவி என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்த தொடங்கினார். [6]
குறிப்புகள்
தொகு- ↑ "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.
Nina Ripjit Singh, Naina Devi
- ↑ 2.0 2.1 "A Tale of Two Women: In search of their own songs". The Telegraph. 11 March 2012. http://www.telegraphindia.com/1120311/jsp/opinion/story_15229162.jsp#.UbBLt9I3CHg. பார்த்த நாள்: 6 June 2013.
- ↑ Subhra Mazumdar (25 September 2010). "Naina Devi and the nautch girl". The Times of India, Crest Edition இம் மூலத்தில் இருந்து 24 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131024090733/http://www.timescrest.com/culture/naina-devi-and-the-nautch-girl-3599. பார்த்த நாள்: 6 June 2013.
- ↑ Shriram Bharatiya Kala Kendra: a history : Sumitra Charat Ram reminisces.
- ↑ "Strains of a Bias". 1 October 2000. பார்க்கப்பட்ட நாள் 10 June 2013.
- ↑ Mukherji, p. 134