நொவேரா அகமது

நொவேரா அகமது (Novera Ahmed) வங்காள தேசத்தைச் சேர்ந்த' (29 மார்ச் 1939 - 6 மே 2015) [1] நவீன கால சிற்பியாவார். 1939 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இவர் பிறந்தார். வங்காளதேச அரசாங்கம் 1997 ஆம் ஆண்டு இவருக்கு வங்காள தேசத்தில் வழங்கப்படும் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருதான ஏகுசே பதக்கம் விருது வழங்கப்பட்டது. கலைஞர் சைனுல் ஆபெதீன் நொவேராவின் வேலையைக் குறித்து , "நோவேரா இப்போது என்ன செய்கிறார் என்பது நமக்குப் புரிய நீண்ட காலம் எடுக்கும் - அவர் அந்த வகையான ஒரு கலைஞர்." என்று கூறுகிறார்.

நொவேரா அகமது
Novera Ahmed
নভেরা আহমেদ
தாய்மொழியில் பெயர்নভেরা আহমেদ
பிறப்பு(1939-03-29)29 மார்ச்சு 1939
சுந்தரவனக்காடுகள், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு6 மே 2015(2015-05-06) (அகவை 76)
பாரிஸ், பிரான்சு
தேசியம்பங்களாதேசி
படித்த கல்வி நிறுவனங்கள்கேம்பர்வெல் கலை கல்லூரி
பணி
  • சிற்பி
  • ஓவியர்
செயற்பாட்டுக்
காலம்
1961–1973, 2014
அறியப்படுவதுமத்திய சாகித் மினார்
விருதுகள்எகுசே பதக்கம்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

நொவேரா அகமது 1939 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி அன்று, பிரித்தானிய இந்தியாவில் , வங்காள மாகாணத்தின் சுந்தர்பனில் பிறந்தார்.[1] இவரது மூதாதையர் வீடு சிட்டகாங்கில் இருந்தது. இவர் கொகல்கத்தா மற்றும் கொமிலாவில் படித்தார். 1955 ஆம் ஆண்டு இலண்டனில் உள்ள கேம்பர்வெல் கலைக் கல்லூரியிலிருந்து வடிவழகு மாதிரி மற்றும் சிற்பக்கலை படிப்பில் இவருக்கு பட்டயம் வழங்கப்பட்டது. கேம்பர்வெல்லில், இவர் பிரித்தானிய சிற்பி இயாக்கப் எப்சுடீன் மற்றும் செக்கோசுலோவாக்கியாவின் கரேல் வோகல் ஆகியோரின் மேற்பார்வையில் படித்தார். 1966 ஆம் ஆண்டு இவர் பாரிசில் டேனிசு கலைஞர் அசுகர் யோர்தானை சந்தித்தார்.[2] இவர் புளோரன்சிடமும் பின்னர் வியன்னாவில் வென்ட்யூரினோ வென்டூரி என்ற சிற்பியிடமும் ஐரோப்பிய சிற்பக்கலையைப் பயின்றார். என்றி மூர் போன்ற பல மேற்கத்திய நவீன சிற்பிகளால் இவர் பாதிக்கப்பட்டார்.

தொழில்

தொகு

நொவேரா அகமது டாக்காவின் சாகீத் மினாரின் அசல் வடிவமைப்பில் அமீதுர் ரகுமானுடன் இணைந்து பணியாற்றினார். 1956-1960 ஆம் ஆண்டு காலத்தில், இவர் டாக்காவில் சுமார் 100 சிற்பங்களைச் செதுக்கினார். இவரது 100 சிற்பங்களில் 33 சிற்பங்கள் தற்போது வங்காளதேச தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அகமதுவின் முதல் கண்காட்சி 1960 ஆம் ஆண்டு டாக்கா பல்கலைக்கழகத்தில் [3] நடைபெற்றது. இவரது படைப்புகளின் மற்றொரு கண்காட்சி 1961 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்றது. இவரது கடைசி கண்காட்சி பாரிசில் 1973 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் நடைபெற்றது.[3]

நடை மற்றும் நுட்பம்

தொகு

நொவேரா அகமதுவின் ஆரம்பகால சிற்பங்கள் கற்கள், கற்குழம்பு போன்றவற்றால் ஆக்கப்பட்டு மானுட வடிவங்களால் செய்யப்பட்ட வடிவியல் வடிவங்களை ஒத்திருந்தன. மனித உருவத்தையும் விலங்குகளையும் கலந்தாற்போல இச்சிற்பங்கள் இருந்தன.[2] பின்னர் இவர் இரும்பு , எஃகு மற்றும் வெண்கலத்தைப் பயன்படுத்த தொடங்கினார். அமெரிக்க இராணுவத்தின் (1964-1969) விமான விபத்து எச்சங்களைப் பயன்படுத்தி தெளிப்பு ஓவியங்களை உருவாக்கத் தொடங்கினார்.[2] மோசமான ஒரு விபத்துக்குப் பிறகு, இவருடைய வரைபடங்கள் தியானநிலை குணத்தின் வடிவங்கள் மற்றும் உருவங்களை உள்ளடக்கியதாக உருவாகின. விண்வெளி, தீவு, வானத்தில் பறவைகள், பீனிக்சு, பூக்கள், நீர், சூரிய ஒளி மற்றும் சந்திரன், குறைந்தபட்ச நிலப்பரப்புகள், மனித உருவங்கள் ஒரு புதிய அடிவானம் மற்றும் பிறவற்றை நோக்கி இவரது படைப்புகள் திரும்பின.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நொவேரா அகமது 1954 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொல்கத்தாவில் ஒரு காவல்துறை அதிகாரியை மணந்தார். இந்த இணை 1954 இன் பிற்பகுதியில் விவாகரத்து பெற்றது. இவர் 1970 ஆம் ஆண்டு பிரான்சில் வாழத் தொடங்கினார்.[2] 1984 ஆம் ஆண்டு கிரிகோயர் டி பிரவுனை மணந்தார்.

இறப்பு

தொகு

2010 ஆம் ஆண்டு அகமது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்தார்.[4] 2015 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதியன்று பிரான்சின் பாரிசு நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார்.[5] 2017 ஆம் ஆண்டு வங்காளதேச அரசின் கலாச்சார விவகார அமைச்சகம், அகமதுவின் பத்து ஓவியங்களை $ 47,000 தொகைக்கு வாங்கும் திட்டத்தை அறிவித்தது.[6]

29 மார்ச் 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 29 ஆம் தேதியன்று கூகிள் தேடுபொறி இவரது 80 ஆவது பிறந்த நாளை நினைவு கூர்ந்தது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Novera Ahmed's 80th Birthday". Google. 29 March 2019."Novera Ahmed's 80th Birthday". Google. 29 March 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Amine, Patrick (February 2014). "Novera, la comète imprévisible" [The unpredictable comet]. Exporevue Magazine. Archived from the original on 14 May 2017. பார்க்கப்பட்ட நாள் 4 September 2017.
  3. 3.0 3.1 . bdnews24.com. "Pioneer sculptor Novera Ahmed dies in Paris". bdnews24.com. 7 May 2015.
  4. "Novera, pioneer of progressiveness in Bangladesh". The Daily Star. 7 May 2015. http://www.thedailystar.net/arts-entertainment/novera-pioneer-progressiveness-bangladesh-80953. "Novera, pioneer of progressiveness in Bangladesh". The Daily Star. 7 May 2015.
  5. "Sculptor Novera passes away". The Daily Star. 6 May 2015. http://thedailystar.net/arts-entertainment/sculptor-novera-passes-away-80931. 
  6. "Govt plans to purchase Novera Ahmed paintings". Dhaka Tribune. 31 August 2017. http://www.dhakatribune.com/feature/people-feature/2017/08/31/govt-purchase-novera-paintings/. 

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொவேரா_அகமது&oldid=3867222" இலிருந்து மீள்விக்கப்பட்டது