நோனேனால்

ஓர் ஆல்க்கைல் ஆல்டிகைடு

நோனேனால் (Nonanal) என்பது C9H18O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒன்பது கார்பன்களைக் கொண்ட இந்த ஆல்க்கைல் ஆல்டிகைடானது நோனேனால்டிகைடு, பெலார்கோனால்டிகைடு அல்லது ஆல்டிகைடு சி-9 என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. எண்ணெய்ப் பசையுடன் நிறமற்றதாக நோனேனால் காணப்படுகிறது. மேலும் வாசனைத் திரவியங்களின் ஒரு பகுதிப் பொருளாக இது பயனாகிறது. இயற்கையில் சிட்ரசு வகை எண்ணெயாக இது பல்வேறு எண்ணெய்களில் தோன்றினாலும் வணிக முறையில் 1-ஆக்டீனை கீட்டோன்களை ஆல்டிகைடுகளாக மாற்றும் ஆக்சோ செயல்முறையில் இது தயாரிக்கப்படுகிறது [2].

நோனேனால்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நோனேனால்
வேறு பெயர்கள்
நோனேனால்டிகைடு
நோனால்டிகைடு
பெலார்கோனால்டிகைடு
ஆல்டிகைடு சி-9
இனங்காட்டிகள்
124-19-6 Y
ChemSpider 29029 Y
InChI
  • InChI=1S/C9H18O/c1-2-3-4-5-6-7-8-9-10/h9H,2-8H2,1H3 Y
    Key: GYHFUZHODSMOHU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C9H18O/c1-2-3-4-5-6-7-8-9-10/h9H,2-8H2,1H3
    Key: GYHFUZHODSMOHU-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31289
  • CCCCCCCCC=O
UNII 2L2WBY9K6T Y
பண்புகள்
C9H18O
வாய்ப்பாட்டு எடை 142.23862
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.827
உருகுநிலை −18 °C (0 °F; 255 K)
கொதிநிலை 191 °C (376 °F; 464 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

குலெக்சு வகை கொசுக்களை இச்சேர்மம் ஈர்க்கின்றது என அடையாளம் காணப்பட்டுள்ளது [3][4]. இதற்காக இணைவினையாக கார்பனீராக்சைடுடன் நோனேனால் வினைபுரிகிறது [5].

மேற்கோள்கள்

தொகு
  1. n-Nonaldehyde at chemicalland21.com
  2. Christian Kohlpaintner, Markus Schulte, Jürgen Falbe, Peter Lappe, Jürgen Weber (2005), "Aldehydes, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_321.pub2{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. UC Davis News & Information :: UC Davis Researchers Identify Dominant Chemical That Attracts Mosquitoes to Humans. News.ucdavis.edu (2009-10-26). Retrieved on 2011-01-03.
  4. Syed, Z.; Leal, W. S. (2009). "Acute olfactory response of Culex mosquitoes to a human- and bird-derived attractant". Proceedings of the National Academy of Sciences 106 (44): 18803–8. doi:10.1073/pnas.0906932106. பப்மெட்:19858490. 
  5. Scientists Identify Key Smell that Attracts Mosquitoes to Humans – US News and World Report. Usnews.com (2009-10-28). Retrieved on 2011-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோனேனால்&oldid=2652574" இலிருந்து மீள்விக்கப்பட்டது