நோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம்

நோய்க்கிருமிகள் மற்றும் உலக சுகாதாரம் (Pathogens and Global Health) என்பது ஒரு சக மதிப்பாய்வு மருத்துவ ஆய்விதழ். இது அயனமண்டல நோய்கள், அவற்றின் நுண்ணுயிரியல், நோய்ப்பரவலியல், மூலக்கூற்று உயிரியல், மற்றும் மருத்துவப் பூச்சியியல், எயிட்சு, மலேரியா, காச நோய் போன்றவற்றின் தகவல்களை விவரிக்கிறது. இவ்விதழின் தலைமை தொகுப்பாசிரியர் லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த அந்திரேயா கிரிசாந்தி ஆவார்.

நோய்க்கிருமிகளும் உலக சுகாதாரமும்
Pathogens and Global Health
 
சுருக்கமான பெயர்(கள்) Pathog. Glob. Health
துறை நோய்ப்பரவலியல்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: அந்திரேயா கிருசாந்தி
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் டெய்லர் & பிரான்சிசு
வரலாறு 1906–இன்று
தாக்க காரணி 3.735 (2021)
குறியிடல்
ISSN Pathogens and Global Health
2047-7724 (அச்சு)
2047-7732 (இணையம்)
Annals of Tropical Medicine and Parasitology
0003-4983 (அச்சு)
1364-8594 (இணையம்)
இணைப்புகள்

ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இவ்விதழ் 2021 இல் தாக்க காரணி 3.735 ஐக் கொண்டிருந்தது.[1]

வரலாறு

தொகு

இவ்வாய்வு இதழ் 1906 ஆம் ஆண்டில் சர் ரொனால்டு ராஸ் என்பவரால் வெப்பமண்டல மருத்துவம் மற்றும் ஒட்டுண்ணியியல் பதிவேடுகள் என்ற பெயரில் வெப்பமண்டல மருத்துவத்திற்கான லிவர்பூல் பள்ளியின் ஆய்வு முடிவுகளை பகிர்ந்து கொள்வதற்காகத் தொடங்கினார். 2011 மே மாதத்தில், இது மானே பதிப்பகத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு இப்போதுள்ள பெயரில் தொடக்க வரையறைக்கு அப்பாற்பட்ட மருத்துவ சம்பந்தமான நோய்க்கிருமிகளின் உயிரியல், நோயெதிர்ப்பு, மரபியல், சிகிச்சை உள்ளிட்ட பரந்த கவனத்தைப் பெறக்கூடியதாக வெளிவருகிறது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Pathogens and Global Health". 2022 Journal Citation Reports. அறிவியல் வலை (Science ed.). Thomson Reuters. 2021.
  2. "Master Journal List". Intellectual Property & Science. Thomson Reuters. Archived from the original on 2017-09-26. பார்க்கப்பட்ட நாள் 2015-03-22.
  3. "Pathogens and Global Health". NLM Catalog. National Center for Biotechnology Information. பார்க்கப்பட்ட நாள் 2015-03-22.

வெளி இணைப்புகள்

தொகு