நௌகாச்சியா

இந்தியாவின் பீகார் மாநில கிராமம்

நௌகாச்சியா (Naugachhia) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள மிதிலா மண்டலம் , பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.[4][5][6] 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள் தொகை 49,069 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நௌகாச்சியா நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 62% ஆகும், இது தேசிய கல்வியறிவு சராசரியான 74% என்பதைவிடக் குறைவாகும். ஆண்களின் கல்வியறிவு 69% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 55% ஆகவும் இருந்தனர். மக்கள்தொகையில் 18% பேர் 9 வயதிற்குட்பட்டவர்கள்.[4]

நௌகாச்சியா
Naugachhia
नवगछिया
நௌகாச்சியா Naugachhia is located in பீகார்
நௌகாச்சியா Naugachhia
நௌகாச்சியா
Naugachhia
இந்தியாவின் பீகாரில் அமைவிடம்
நௌகாச்சியா Naugachhia is located in இந்தியா
நௌகாச்சியா Naugachhia
நௌகாச்சியா
Naugachhia
நௌகாச்சியா
Naugachhia (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°24′N 87°06′E / 25.4°N 87.1°E / 25.4; 87.1
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மண்டலம்மிதிலை[1]
அரசு
 • வகைநகர் பரிசத்து
 • நிர்வாகம்நௌகாச்சியா நகர் பரிசத்து
பரப்பளவு
 • மொத்தம்113 km2 (44 sq mi)
ஏற்றம்
25 m (82 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்49,069
 • அடர்த்தி1,370/km2 (3,500/sq mi)
மொழிகள்
 • பிராந்திய மொழிமைதிலி மொழி[2][3]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
853204
தொலைபேசிக் குறியீடு06421
வாகனப் பதிவுBR10

பாகல்பூரிலிருந்து ஒரு தனி மாவட்டமாக இருப்பதற்கான அளவுகோல்களை நௌகாச்சியா பூர்த்தி செய்கிறது. 2018 ஆம் ஆண்டில், நகரத்திற்கு ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக ஒரு பேரணி நடத்தப்பட்டது.[7]

போக்குவரத்து

தொகு

சோன்பூர் இரயில்வே பிரிவின் பரவுனி-கதிகார் பிரிவுடன் நௌகாச்சியா இரயில் நிலையம் வழியாக இந்த நகரம் இரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

விக்ரம்சிலா சேது இந்தியாவின் ஆறாவது மிக நீளமான பாலமாகும். கங்கையின் எதிர் பக்கங்களில் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை 33 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 31 இடையேயான இணைப்பாக 4.7 கி. மீ நீளமுள்ள இரண்டு வழி பாலம் செயல்படுகிறது, இது கங்கையின் தெற்கு கரையில் உள்ள பாகல்பூர் பக்கத்தை வடக்குக் கரையில் உள்ள நௌகாச்சியாவுடன் இணைக்கிறது. 

மேற்கோள்கள்

தொகு
  1. "वृहद विष्णु पुराण के अनुसार नवगछिया मिथिला क्षेत्र में आता है". www.maithilmanch.in. பார்க்கப்பட்ட நாள் 12 October 2023.
  2. "नवगछिया की मातृभाषा मैथिली के लिए सेमिनार का आयोजन" www.mknewsindia.in". பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  3. "मिथिला के नवगछिया की भाषा मैथिली में गायिका देवी का एल्बम लोकार्पण". www.naugachia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-10-07.
  4. 4.0 4.1 "Population finder | Government of India". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
  5. Jha, M. (1997). "Hindu Kingdoms at contextual level". Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective. New Delhi: M.D. Publications Pvt. Ltd. pp. 27–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175330344.
  6. Jha, Pankaj Kumar (2010). Sushasan Ke Aaine Mein Naya Bihar. Bihar (India): Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380186283.
  7. "Demand of Naugachhia District=www.timesofindia.com". பார்க்கப்பட்ட நாள் 2018-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நௌகாச்சியா&oldid=4117885" இலிருந்து மீள்விக்கப்பட்டது