பகதூர் பிரசாத்

இந்திய தடகள போட்டியாளர்

பகதூர் பிரசாத் சிங் (Bahadur Prasad Singh) ஒரு முன்னாள் இந்திய நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர் ஆவார். 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். 5000 மீட்டர் ஓட்டத்தில் தற்போதைய தேசிய சாதனையை இவர் வைத்துள்ளார். சிங் 1992 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று இங்கிலாந்தின் பர்மிங்காமில் 5000 மீ ஓட்டப்போட்டியில் சாதனையை (13:29.70) படைத்தார். பின்னர் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று 1995 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பிரசாத் 3:38.00 நிமிடத்தில் 1500 மீ தேசிய சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனை 23 ஆண்டுகளாக இவரிடம் இருந்தது. [2] [3]

பகதூர் பிரசாத்து
Bahadur Prasad
தனித் தகவல்கள்
முழுப் பெயர்பகதூர் பிரசாத்து
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்1 செப்டம்பர் 1965 (1965-09-01) (அகவை 59)
பிறந்த இடம்பில்லாவுவா, சித்வால், மவூ, உத்தரப் பிரதேசம், இந்தியா
உயரம்1.77 m (5 அடி 9+12 அங்)[1]
எடை72 கிலோ கிராம்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)1500 மீட்டர், 3000 மீட்டர், 5000 மீட்டர்
சங்கம்இந்திய இரயில்வே
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை1500 m: 3:38.00 (1995)
5000 m: 13:29.70 (1992)

பிரசாத் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்சிலோனா ஒலிம்பிக்கில் 5000 மீ போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு இவர் பந்தய தூரத்தை 13:50.71 நேரத்தில் கடந்தார். 1996 ஆம் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் 1500 மீ ஓட்டத்திலும் பங்கேற்றார். அவர் ஐந்தாவது பிரிவில் முதல் சுற்றில் 3:46.16 என்ற முயற்சியுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தார். [4] நடுத்தர தூர ஓட்டத்தில் இவர் செய்த சாதனைகளுக்காக 1992 ஆம் ஆண்டிற்கான அர்ச்சுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bahadur Prasad". Sports Reference LLC. Archived from the original on 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
  2. "Official Website of Athletics Federation of India: NATIONAL RECORDS as on 21.3.2009". Athletics Federation of INDIA. Archived from the original on 2009-08-05. பார்க்கப்பட்ட நாள் 2009-09-06.
  3. "SAF Games : Athletic Records". tomorrowsrilanka.com. Archived from the original on 28 August 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-09-06.
  4. "Athletics at the 1996 Atlanta Summer Games: Men's 1,500 metres Round One". Sports Reference LLC. Archived from the original on 2020-04-17. பார்க்கப்பட்ட நாள் 2009-09-06.
  5. "ARJUNA AWARDEES ON INDIAN RAILWAYS" (PDF). indianrailways.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2009-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகதூர்_பிரசாத்&oldid=3757911" இலிருந்து மீள்விக்கப்பட்டது