பகாங் மாநில ஆட்சிக்குழு

மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழு

பகாங் மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Pahang State Executive Council (EXCO); மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Pahang (MMKN) என்பது மலேசியா பகாங் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். பகாங் சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட பகாங் மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் பகாங் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.

பகாங் மாநில ஆட்சிக்குழு
Pahang State Executive Council
Majlis Mesyuarat Kerajaan Negeri Pahang
2022–தற்போது
உருவான நாள்28 நவம்பர் 2022
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்வான் ரோசுடி வான் இசுமாயில்
பாரிசான் (BN) அம்னோ (UMNO)
நாட்டுத் தலைவர்சுல்தான் அப்துல்லா
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை11
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
எதிர்க்கட்சித் தலைவர்துவான் இப்ராகிம் துவான் மான்
பெரிக்காத்தான் (PN)பாஸ் (PAS)
வரலாறு
Legislature term(s)15-ஆவது பகாங் மாநிலச் சட்டமன்றத் தொடர்

பகாங் ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.

பகாங் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பகாங் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். பகாங் ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை; மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.

அலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்

தொகு
அரசாங்கப் பதவி பெயர்
மாநிலச் செயலாளர் முகம்மது சபியான் இசுமாயில் (Muhammad Safian Ismail)
மாநிலச் சட்ட ஆலோசகர் சம்சுல்பகரி இப்ராகிம் (Shamsulbahri Ibrahim)
மாநில நிதி அதிகாரி முகமது ரோசுலான் அருன் (Mohamad Roslan Harun)

ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியல்

தொகு

28 நவம்பர் 2022 முதல் பகாங் ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள்: [1][2][3][4][5][6]

     பாரிசான் நேசனல் (9)      பாக்காத்தான் அரப்பான் (2)
பெயர் துறை கட்சி சட்டமன்றத் தொகுதி பதவி தொடக்கம் பதவி முடிவு
வான் ரோசுடி வான் இசுமாயில்
பகாங் மந்திரி பெசார்
(Wan Rosdy Wan Ismail)
  • நிதி
  • நில
  • இயற்கை வளங்கள், ஆற்றல் மற்றும் நீர்
  • பொருளாதாரம்
  • பொருட்கள்
  • விவசாயம்
பாரிசான் (அம்னோ) ஜெலாய் சட்டமன்றத் தொகுதி
(Jelai)
28 நவம்பர் 2022 தற்போது
முகமது சோபி அப்துல் ரசாக்
(Mohd Soffi Abd Razak)
  • தோட்டத்துறை
  • விவசாயம் சார்ந்த தொழில்
  • உயிரி தொழில்நுட்பம்
  • கல்வி
பெந்தா சட்டமன்றத் தொகுதி
(Benta)
2 டிசம்பர் 2022
சையத் இப்ராகிம் சையத் அகமது
(Syed Ibrahim Syed Ahmad)
  • இசுலாமிய விவகாரங்கள்
  • கிராமப்புற வளர்ச்சி
  • உள்நாட்டு விவகாரங்கள்
கெர்டாவ் சட்டமன்றத் தொகுதி
(Kerdau)
முகமது பக்ருதீன் முகமது ஆரிப்
(Mohammad Fakhruddin Mohd Ariff)
  • பொதுப்பணி
  • பொதுப் போக்குவரத்து
  • சுகாதாரம்
  • சுற்றுச்சூழல்
பெபார் சட்டமன்றத் தொகுதி
(Bebar)
14 பிப்ரவரி 2024
  • வீட்டுவசதி
  • உள்ளூர் அரசு
  • பசுமைத் தொழில்நுட்பம்
14 பிப்ரவரி 2024 பதவியில்
ரசாலி காசிம்
(Razali Kassim)
  • பெல்டா விவகாரங்கள் (FELDA)
  • கூட்டுறவு
  • தொழில்முனைவோர் மேம்பாடு
முவாட்சாம் சா சட்டமன்றத் தொகுதி
(Muadzam Shah)
2 டிசம்பர் 2022 14 பிப்ரவரி 2024
  • பொதுப்பணி
  • பொதுப் போக்குவரத்து
  • சுகாதாரம்ம்
  • சுற்றுச்சூழல்
14 பிப்ரவரி 2024 தற்போது
நிசார் நஜிப்
(Nizar Najib)
  • முதலீடு
  • தொழில்
பெராமு ஜெயா சட்டமன்றத் தொகுதி
(Peramu Jaya)
2 டிசம்பர் 2022
சபரியா சைடான்
(Sabariah Saidan)
  • மக்கள் நலன்
  • மகளிர் மற்றும் குடும்ப வளர்ச்சி
குவாய் சட்டமன்றத் தொகுதி
(Guai)
பட்சிலி முகமது கமல்
(Fadzli Mohamad Kamal)
  • தொடர்புதுறை மற்றும் பல்லூடகம்
  • இளைஞர்கள் மற்றும் விளையாட்டு
  • அரசு சாரா அமைப்புகள்
டோங் சட்டமன்றத் தொகுதி
(Dong)
ஜொகாரி அருன்
(Johari Harun)
  • வீட்டுவசதி
  • உள்ளூர் அரசு
  • சுற்றுச்சூழல்
  • பசுமை தொழில்நுட்பம்
பெலங்காய் சட்டமன்றத் தொகுதி
(Pelangai)
17 ஆகஸ்டு 2023
அமிசார் அபு ஆடாம்
(Amizar Abu Adam)
  • பெல்டா விவகாரங்கள் (FELDA)
  • கூட்டுறவு
  • தொழில்முனைவோர் மேம்பாடு
13 பிப்ரவரி 2024 தற்போது
லியோங் யு மான்
(Leong Yu Man)
  • ஒற்றுமை
  • சுற்றுலா மற்றும் கலாசாரம்
பாக்காத்தான் (ஜசெக) திரியாங் சட்டமன்றத் தொகுதி
(Triang)
2 டிசம்பர் 2022
சிம் சோன் சியாங்
(Sim Chon Siang)
  • நுகர்வோர் விவகாரங்கள்
  • மனித வளம்
பாக்காத்தான் (நீதிக் கட்சி) தெருந்தும் சட்டமன்றத் தொகுதி
(Teruntum)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ten Pahang exco memebrs sworn in". The Star. 2 December 2022. பார்க்கப்பட்ட நாள் 2 December 2022.
  2. "Pahang exco members get their portfolios". The Star. 14 December 2022. பார்க்கப்பட்ட நாள் 19 December 2022.
  3. Bernama (2022-12-29). "PN Pahang umum 18 portfolio tumpuan untuk pantau peranan Exco". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  4. Amir Hamzah Nordin (25 August 2023). "Pahang tak lantik EXCO baharu ganti Allahyarham Johari". Berita Harian.
  5. "Pelangai state rep sworn in as new Pahang exco member". New Straits Times. 13 February 2024. பார்க்கப்பட்ட நாள் 14 February 2024.
  6. "Wan Rosdy umum rombakan kecil exco Pahang". Malaysiakini. 14 February 2024. பார்க்கப்பட்ட நாள் 14 February 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாங்_மாநில_ஆட்சிக்குழு&oldid=3954450" இலிருந்து மீள்விக்கப்பட்டது