பகுப்பு பேச்சு:திருமாலின் பெயர்கள்

நிர்வாகிகளின் கவனத்திற்கு தொகு

'விஷ்ணுவின் பெயர்கள்'என்பதால் இது எதோ வைணவசமயத்தின் கொள்கைகள் என்ற எண்ணம் வரும். விஷ்ணு சஹஸ்ரநாமம் வைணவர்களின் தனிச்சொத்து அல்ல. இந்து சமயத்திற்கே பொதுவானது.ஆதி சங்கரர் அதற்கு பாஷ்யம் எழுதியதிலிருந்தே தெரிய வரும்.

இதே ரீதியில் போனால் நாளை 'சிவனின்' பெயர்கள், அம்பாளின் பெயர்கள், முருகனின் பெயர்கள் என்ரு தனித்தனியே பகுப்பு வைக்கவேண்டி வரும்.

'கடவுளின் பெயர்கள்' என்று வைப்பதே சரி. இந்து சமயத்தில் பழைய நூற்றாண்டுகளில் (11, 12, 13வது), வைணவம், சைவம், சாக்தம், என்ற வித்தியாசங்கள் இருந்தது உண்மை. ஆனால் தற்காலத்தில் அவ்வித்தியாசங்கள் இல்லை. மேலும் நாம் த.வி. மூலம் இந்த வேறுபாடுகளை வளர்ப்பதற்கு காரணமாகக்கூடாது.

இந்து சமூகத்திலும் யாரும் இவைகளை விஷ்ணுவின் பெயர்கள் என்று சொல்வதில்லை. 'பகவந்நாமம்' என்றுதான் சொல்கிறார்கள்.

தயவு செய்து 'கடவுளின் பெயர்ப்பெருமை' என்று பகுப்பின் பெயரை மாற்றவும். அப்படிச்செய்தால், எல்லாக்கடவுளின் முக்கிய பெயர்களும் இதில் அடங்கிவிடும். பார்க்கப்போனால் எல்லாக்கடவுளின் பெயர்களும் ஒரே பொருளைக்கொடுப்பது தெரியவரும்.

--Profvk 00:52, 8 ஆகத்து 2011 (UTC)Reply

  • விரிவான விளக்கங்களுக்கு நன்றி. நானும் அவ்விதமே, பெயர்மாற்றக் கோருகிறேன்.01:07, 8 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..


விஷ்ணு என்பவர் வைணவக் கடவுளாக முன்பு கொள்ளப்பட்டிருந்தாலும் தற்போது இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகத்தான் அறியப்படுகிறார். தற்போது சைவம், வைணவம் என்பது போன்ற பிரிவுகளில் தீவிரமோ, இதைக் கொண்டு பாகுபாடுகளோ அதிகம் இல்லை. எனவே தங்கள் பயம் தேவையற்றது. ஆதிசங்கரர் காலத்தில் இந்து சமயத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தன. இந்தப் பிரிவுகளால் இந்து சமயம் அழிந்து போய்விடக் கூடாது என்பதற்காக அந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பல பிரிவுகளை இணைத்தும், சில பிரிவுகளைத் தவிர்த்தும் முடிவில், "சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்” என்று வகைப்படுத்தினார். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட ஆறு பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் இறைவன் ஒருவனையே சாரும் என்றும், இவையனைத்தும் சேர்ந்து “ஷண்மதம்” என்றும் சொன்னார். இந்த ஷண்மதம் தான் இந்து மதம் என்பதாகி விட்டது. எனவே தங்களின் வேறுபாடுகள் தோன்றிவிடுமோ என்கிற பயம் தேவையில்லை. மேலும் சிவனின் பெயர்கள், அம்பாளின் பெயர்கள், முருகனின் பெயர்கள், கணபதியின் பெயர்கள் என்பது போன்ற பகுப்புகள் உருவாக்கப்படுவதும் நல்லதுதான். இது தமிழ் விக்கிப்பீடியாவிற்குள் வருபவர்கள் இந்து சமயக் கடவுள்களின் பெயர்களை அவர்கள் விரும்பும் விதங்களில் வேகமாகப் பார்வையிடுவதற்கு உதவும். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:49, 8 ஆகத்து 2011 (UTC)Reply
வேறுபாடுகள் தோன்றிவிடுமோ என்ற பயம் எனக்கில்லை. வேறுபாடுகள் இல்லை என்பதை நம் பகுப்புகள் காட்டவேண்டும் என்பதே என் நோக்கம். மற்றும் இன்னொரு முக்கிய விஷயம். நூற்றுக்கணக்கான பெயர்கள் எல்லா கடவுளுக்கும் பொதுவான பெயர்கள். உங்கள் முறையில் பகுப்புகள் இருந்தால், இவைகள் எல்லாவற்றிலும் திருப்பித்திருப்பி வர இருக்கும் அல்லது எந்த பகுப்பில் போடுவது என்றே தெரியாதபடி நம்மை

குழப்பும். உதாரணமாக ஈசுவரன், பிரபு,சாசுவதன், ஆபத்பாந்தவன்,வேதவித், அஜன், பாவனன், அவியக்தன்.சத்ருக்னன், மனோஹரன், ஆதிதேவன், ஸர்வஸாட்சி, அசோகன், யோகீசன், தீனரட்சகன், .......... இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம். தயவு செய்து கடவுளின் பெயர்களை compartmentalise பண்ணாதீர்கள். --Profvk 03:18, 8 ஆகத்து 2011 (UTC)Reply


”விஷ்ணுவின் பெயர்கள்” என்பது தற்போது வைணவ சமயம் என்ற பகுப்பில் உள்ளது. “வைணவ சமயம்” “இந்து சமயப் பிரிவுகள்” என்ற பொதுப் பகுப்பில் தான் உள்ளது. இது ஒரு உட்பகுப்பு மட்டுமே. வேறுபடுத்திக் காட்டவில்லை. இதே முறையை பின்பற்றினால் “வைணவம்”, “சைவம்”, போன்ற பகுப்புகளை எடுத்து விட்டு “இந்து சமயம்” என்ற ஒரே பகுப்பைத் தான் பார்க்க வேண்டும். இங்கு பகுப்பு வேறுபாட்டை உணர்த்த வில்லை. உட்பிரிவுகளையே காட்டுகிறது. நீங்கள் குறிப்பிடும் பிரபு, சாசுவதன், ஆபத்பாந்தவன் போன்ற இறைவனைக் குறிக்கும் பொதுவான பெயர்களை மட்டும் பொதுப்பகுப்பில் இடலாம்.
இதே ரீதியில் போனால் நாளை 'சிவனின்' பெயர்கள், அம்பாளின் பெயர்கள், முருகனின் பெயர்கள் என்ரு தனித்தனியே பகுப்பு வைக்கவேண்டி வரும். இப்படி வைப்பது முறை தானே. இதில் என்ன தவறுள்ளது?
”கடவுளின் பெயர்ப்பெருமை” என்ற பகுப்பு மிகப்பொதுவானது. உலகில் உள்ள அனைத்து சமயங்கள், முன்னர் இருந்த சம்யங்கள் ஆகியவற்றின் கடவுள் பெயர்கள் அனைத்தும் இதில் அடங்கும் (அல்லா, யகோவா போன்றவை). ஒரு பெரிய பகுப்பு மேலும் சிறு பகுப்புகளாக பிரிக்கப்படுவதே பகுப்பாக்க முறை. மேலும் “பெருமை” என்று சொல்வது நடுநிலை அல்ல. பெயர் என்பதே "fact", பெயர்”பெருமை” என்பது ஆத்திகர்களின் பக்கச்சார்வு.--சோடாபாட்டில்உரையாடுக 16:26, 8 ஆகத்து 2011 (UTC)Reply
Return to "திருமாலின் பெயர்கள்" page.