பகுப்பு பேச்சு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்

இப்பகுதியிலுள்ள பல கட்டுரைகள் இலகுவாகக் குறுங்கட்டுரைகளாகத் தரமுயர்த்தப் படக்கூடியவை, சில ஒரு வரிக் கட்டுரைகளும் இங்கே உள்ளடக்கப்பட்டுள்ளன. இது போல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் இருக்கும் என எண்ணுகிறேன். எனவே நீக்குவதில் ஆர்வம் காட்டாது அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடிய தரத்துக்கு உயர்த்துவதே நல்லது. இரு வாரம், இரண்டு வாரம் என்று கெடு கொடுக்காமல், இக் கட்டுரைகளைப் பயனர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தால் பயன் கிடைக்கும் என எண்ணுகிறேன். Mayooranathan 02:42, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

என்னுடைய கருத்தும் இதுவே. --Umapathy 03:24, 26 ஆகஸ்ட் 2006 (UTC)
ஏற்கனவே தரமுயர்த்தப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பகுப்பு உள்ளது. எனினும், அதன் கவன ஈர்ப்பு அவ்வளவு பயனளிப்பதாய் இல்லை. பல பயனர்களுக்கு புதுக்கட்டுரைகளை உருவாக்குவதில் உள்ள வேகம், அவர்கள் ஏற்கனவே உருவாக்கிய கட்டுரைகளை மேம்படுத்துவதில் இல்லை. (இக்கருத்து எனக்கும் பொருந்தும்). துரித நீக்கல் பகுப்பில் இடம்பெறும் கட்டுரைகள் பலவும் அடையாளம் காட்டாத பயனர்கள் மற்றும் அடிக்கடி வராத பயனர்களால் உருவாக்கப்படுபவை. அவர்கள் திரும்ப வந்து இவற்றை மேம்படுத்துவர் என்று எதிர்பார்க்க இயலாது. ஏற்கனவே உள்ள பயனர்களுக்கும் எல்லா தலைப்புக்களிலும் ஆர்வம் இருக்கும் என சொல்ல இயலாது. ஒரு வரிக் கட்டுரைகளால் அதிக பயனில்லை என்பது தான் என் கருத்து. குறைந்தது ஒரு பத்தி அளவாவது கட்டுரை இருந்தால் நலம். பொருத்தமான இடங்களில் இவற்றை பட்டியல் பக்கங்களுக்கு நகர்த்தப் படுகிறது (எடுத்துக்காட்டுக்கு, ஈழத்தமிழ் நூல்கள் குறித்த கட்டுரைகள் சில). மிகவும் முக்கியமான தலைப்பு எனில், மேம்படுத்தவும் என பேச்சுப் பக்கங்களில் அறிவுறுத்தப்படுகிறது (எடுத்துக்காட்டுக்கு, ஆறுபடை வீடுகள் குறித்த கட்டுரைகள்). இவற்றையும் தாண்டி எஞ்சும் கட்டுரைகளுக்குத் தான் துரித நீக்கல் வார்ப்புரு இடப்படுகிறது. ஏதாவது ஒரு கெடு கொடுத்தாலன்றி, விரைவான நடவடிக்கையை எதிர்ப்பார்க்க இயலாது என்று நினைக்கிறேன். ஓரிருப் பயனர்களின் அதிகமான கட்டுரைகள் இப்பகுப்பில் இடம்பெறக்கூடும் என்பதால், ஒரு வாரம் என்பதற்கு பதில் இரண்டு வாரம் என்றோ ஒரு மாதம் என்றோ கெடு கொடுக்கலாம். இவ்வாறு கெடு கொடுக்கும் வழக்கம் பிற விக்கிமீடியா திட்டங்களிலும் உள்ளது தான். இல்லாவிட்டால், தள நிர்வாகத்தில் ஒரு சீரான நடைமுறையைக் கொண்டு வர இயலாது என நினைக்கிறேன்.--ரவி 09:34, 26 ஆகஸ்ட் 2006 (UTC)
  1. தலைப்பை விளக்கும் ஒரு வரிக் கட்டுரைகள்
  2. வெறுமனே படங்களுடன் காணப்படும் கட்டுரைகள்
  3. தலைப்புக்குச் சம்பந்தமில்லாத கட்டுரைகள்

போன்றவை கலைக் களஞ்சியமொன்றுக்குப் பொருத்தமானவையல்ல. ஒரு வரிக் கட்டுரைகள் பெருமளவில் காணப்படுவது உண்மைதான். ஜூலை புள்ளிவிபரங்களின் படி 500 அத்தகைய கட்டுரைகள் (<200ch) இருக்கலாம். அவற்றை முடிந்தவரை குறைக்க வேண்டும். நீக்கத் தொடங்கியமையால் குறிப்பிடத்தக்க கவனத்தை இந்தக் குறுங் கட்டுரைகள் பெறுகின்றன என்றே படுகிறது. உதாரணத்துக்கு மயூரநாதன், நற்கீரன் இருவரும் இவ்விரு கட்டுரைகளை மேம்படுத்தியதை அவதானித்தேன். விருபாவும் பங்களித்தார். நான் மாத்தளை, மாத்தறை, நந்தியாவட்டை, சிவகாமியின் சபதம் போன்ற பலவற்றில் ஓரிரு வரிகளையேனும் சேர்த்தேன். அமீரகங்களுக்கு வார்ப்புரு இணைத்தேன். Mascarenhas வங்கி பற்றிய கட்டுரையை இணைத்தார்.

மேம்படுத்தப்படாமலிருக்கும் கட்டுரைகளை நீக்குவதால் அவை சிறப்பாக உருவாக்கப்படும் வாய்ப்பாவது ஏற்படும். (உ-ம்: வங்கி) தமிழ் விக்கிபீடியாவில் பயனர்கள் பழைய கட்டுரைகளை மேம்படுத்துவதில் எடுக்கும் ஆர்வம் மிகக் குறைவு. அத்துடன் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். ஓர் உதாரணத்துக்குக் குன்றுதோறாடல் கட்டுரையை எடுத்தால், google இல் ஒருவர் குன்றுதோறாடல் என் இட்டுத் தேடினால் நிச்சயம் முதற்பக்கத்தில் விக்கிபீடியாக் கட்டுரைத் தொடுப்பு வரும். அவர் அதனை அழுத்தி இங்கு வந்தால்... விக்கிபீடியாவுக்கான மோசமான அறிமுகம் வேறெதுவுமில்லை. அப்படியான ஒரு வரிக் கட்டுரை இருப்பதைவிட இல்லாமலிருப்பது எவ்வளவோ மேலானது. குன்றுதோறாடல் அறுபடைவீடுகளுள் ஒன்றென்பதை அறியாமலா ஒருவர் அதனைத் தேடப் போகிறார்?

speed-delete-on வார்ப்புரு ஒரு கிழமை அவகாசத்துடன் பயன்படுத்தப்படுவதை நான் மிகவும் விரும்புகிறேன். ஓரிரு வரிகளை நீக்குவது பெரும் இழப்பு இல்லை. அவசியமானால் மீண்டும் உருவாக்கலாம். பயனர்கள் விரும்பினால் தாம் குறித்த பக்கத்தை விரிவாக்குவதாக பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டுவிட்டு speed-delete வார்ப்புருவை அகற்றுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆதலால் துறைசார் ஆர்வமுள்ளவர்களுக்கு அதனைத் தெரியப்படுத்தும் நடைமுறையைப் பின்பற்றுவது நல்லது.

மேலும் பயனர்கள் புதிய பக்கங்களை உருவாக்குவதோடு நின்றுவிடாது குறும்பக்கங்களையும் விரிவாக்குவதில் பங்களிக்க அழைக்கிறேன். அந்த வகையில் பின்வரும் பயனர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

  • கட்டிடங்கள் பற்றிய படங்கள் - மயூரநாதன்
  • ஆறுபடைவீடுகள், வால்மீகி, கூர்ம அவதாரம் போன்றவை - கனக சிறீதரன்
  • களுத்துறை, மாத்தளை, மாத்தறை, கேகாலை போன்றவை - டெரன்ஸ்
  • குந்தி, இராமன் போன்றவை - சிவகுமார்
  • அமீரகங்கள் - ரவி (ஏதாச்சும் எழுதுங்க ரவி :-))
  • மூலிகைகள் சிலவற்றை நான் செய்ய முயல்கிறேன்
  • பொருளியல் போன்றவை - கலாநிதி
  • குறும்பக்கங்கள் பக்கத்தில் முதல் 1000 கட்டுரைகளில் பிடித்தமானவை - நற்கீரன், மயூரேசன், சுந்தர், உமாபதி, மயூரன்

1000b இனை விடக் குறையாத அளவில் கட்டுரைகள் எழுதப் பயனர்கள் முன்வர வேண்டும். 2000b என்றால் இன்னும் நல்லது. குறைந்தது மூன்று வசனங்கள் கொண்டதாகக் கட்டுரைகள் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்

4000 கட்டுரைகளைக் கடந்துவிட்டோம். நாம் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. கோபி 13:28, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபியின் அனைத்துக் கருத்துக்கள், விளக்கங்கள், பரிந்துரைகள் ஆகியவற்றுடன் உடன்படுகிறேன். இருந்தாலும், ஏதாச்சும் எழுதுங்க ரவி என்று என்னை கேட்கும் அளவுக்கு என் நிலை வந்துவிட்டது கண்டு வருந்துகிறேன் ;) ஐயகோ..!! கோபி, நானும் கட்டுரை எழுதத் தொடங்கிவிட்டால் அப்புறம் யார் விக்கியாக்கம், தரமேம்பாடு ஆகியவற்றில் உங்களுக்குத் தோள் கொடுப்பது ;) அதுவும் அமீரகம் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது. அக்கட்டுரைகளை எழுத மயூரனாதன் சரியானவர். சரி, சரி, இனி நானும் எழுதுகிறேன் என்று சொல்வதற்காகவேனும் சில கட்டுரைகளை தொடங்குகிறேன். என் பழைய ஆக்கங்களையும் மேம்படுத்துகிறேன்.!--ரவி 17:24, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, ரவி, உங்கள் கருத்துக்களுடன் முரண்படுவதற்கு மன்னிக்கவும், தமிழ் விக்கிபீடியாவின் தரத்தை உயர்த்துவதில் உங்கள் இருவருக்கும் இருக்கும் அக்கறையும், ஈடுபாடும் பாராட்டுக்கு உரியதும், சந்தேகத்துக்கு இடமில்லாதவகையில் முக்கியமானதும் ஆகும். ஆனாலும் கட்டுரைகளை நீக்குவதில் நடைமுறைச் சாத்தியப்பாடுகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே ஒருவாரக் கெடுவுடன் கூடிய துரிதமாக நீக்கப்படவேண்டிய கட்டுரைகளின் பட்டியலில் 25 கட்டுரைகள் உள்ளன. முதலாவதாக இவை எல்லாம் ஏன் துரிதமாக நீக்கப் படவேண்டியவை என்று எனக்குப் புரியவில்ல. அடுத்ததாக எத்தனைபேர் கட்டுரைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள்? இதைப் போன்ற கட்டுரைகள் ஏராளமாக இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தொடர்ந்து பட்டியலிட்டுக்கொண்டே போனால் அவற்றையெல்லாம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் மேம்படுத்துவது சாத்தியமாக இருக்காது. குறைந்த எண்ணிக்கையான கட்டுரைகள் இருக்கும்போது இந்த எதிர்மறையான அழுத்தம் பயன் தரக்கூடும் ஆனால் 200, 300 என்று கட்டுரைகளைக் குறுகிய காலத்துள் மேம்படுத்துவதற்கு இவ்வாறான யுக்தி பயன்படும் என்பது சந்தேகமே. ஆகவே வேறு வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்கவேண்டியது அவசியம். கட்டுரைகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடம் இல்லை. இந்த நோக்கத்தை அடைவதற்குப் பின்வரும் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்பது எனது கருத்து.

  • துரிதமாக நீக்கப்படவேண்டிய பக்கங்கள் என்பதை உண்மையில் தமிழ் விக்கிபீடியாவுக்குப் பொருத்தமில்லாத பக்கங்களின் நீக்கத்தைக் கோருவதற்காக மட்டும் வைத்துக்கொள்ளவேண்டும்.
  • பதிலாக துரிதமாக மேம்படுத்தவேண்டிய பக்கங்கள் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட தொகையான பக்கங்களைப் பட்டியலிடலாம்.
  • தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்புச் செய்பவர்கள் மேம்பாட்டு முயற்சியில் ஈடுபட விரும்பினால் இப் பட்டியலிலிருந்து ஒவ்வொரு வாரமும் அவர்களால் இயலக்கூடிய குறிப்பிட்ட பக்கங்களைத் தெரிவு செய்து மேம்படுத்துவதற்காக எடுத்துக்கொள்லலாம்.
  • இவ்வாறான ஒரு Positive அணுகுமுறையே பொருத்தமானது என்பது எனது கருத்து.

இதனை நடைமுறைப்படுத்தியும் பக்கங்களை மேம்படுத்தப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றால், நாங்கள் இத்தகைய கட்டுரைகளை நீக்குவதற்கு இன்னும் தகுதிபெறவில்லை என்பது பொருள். Mayooranathan 17:57, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

குறைந்தது மூன்று வரிகளையாவது கட்டுரைகள் கொண்டிருக்க வேண்டும் என்ற என் அபிப்பிராயத்தை நான் இங்கு வெளியிட்டமை உங்களைத் தவறான புரிதலுக்கு இட்டுச் சென்றுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது. உண்மையில் துரிதமாக நீக்கப்படவேண்டிய பக்கங்கள் என்பதை உண்மையில் தமிழ் விக்கிபீடியாவுக்குப் பொருத்தமில்லாத பக்கங்களின் நீக்கத்தைக் கோருவதற்காக மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடும். ஒரு வரிக் கட்டுரைகள் மற்றும் விக்கிபீடியாவுக்குப் பொருத்தமற்ற கட்டுரைகள் தொடர்பில் நீக்குவதற்குப் பரிந்துரைத்து வாக்கெடுப்பின் பின்னர் நீக்குவதே பொருத்தமானது.

இப்பகுப்பில் இப்போதிருக்கும் 23 கட்டுரைகளில் பக்ரீத் மட்டுமே அத்தகையதாகும். ஏனைய அனைத்தும் பெரும்பாலும் உள்ளடக்கமேதும் அற்றவையே. அழுத்தம் பற்றிய கோட்பாடுகள், வெண்ணி இரண்டும் தேவையற்ற பக்கங்கள். களுத்துறை, ஆசியர், காப்பிரி, குன்றுதோறாடல், ஈழத்து முஸ்லிம் புலவர்கள், ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் என்பன கட்டுரை எண்ணிக்கையை மட்டுமே அதிகரிப்பனவாக உள்ளன.

சுருக்கமாகச் சொன்னால் இதைப்பு அணைக்கட்டு, கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ், கொலோசியம்- ரோம், திரித்துவக் கல்லூரி-கேம்பிறிஜ், மில்லெனியம் டோம், ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஹேகியா சோபியா ஆகிய ஏழு கட்டுரைகள் மட்டுமே விரிவாக்கப்படக் கூடியன.

குறித்த பக்கங்களுக்கான ஆங்கில விக்கித் தொடுப்புக்கள் சேர்க்கப்பட்டால் அவை ஒரு வாரத்துள் சிறிதளவேனும் விரிவாக்கப்படக் கூடியவையே. ஏனைய அனைத்தும் நீக்கப்படலாம்.

தமிழ் விக்கிபீடியாவின் புள்ளிவிபரங்களை அவதானித்ததன் அடிப்படையில் அவற்றை மேம்படுத்த எண்ணியே துரித நீக்கக் கோரிக்கைகளை முன்வைத்தேன். ஒரு பத்துக் கட்டுரைகளையாவது கடந்த சில நாட்களில் மேம்படுத்தியுமிருக்கிறேன்.

உண்மையில் அறிவியல் வரலாறு, ஸ்நேகா போன்ற வெற்றுப் பக்கங்களையும் கிட்டு பீரங்கிப் படையணி, டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் போன்றவற்றையும் நீக்கவே இந்தப் பகுப்புப் பயன்படும். இன்று பாலசந்திரன் உருவாக்கிய ஞானசேகரன் சிறுகதைகள் பக்கத்துக்கு உடனடியாகவே வார்ப்புரு இடப்பட்டது. சில காலத்தின் பின்னர் அவர் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்காதே போகலாம். அதன்பின் எவரும் அதனை மேம்படுத்தாமலும் போகலாம். ஆதலால் உடனடியாக தெரியப்படுத்த வார்ப்புரு உதவியது. ஒருவேளை அவர் கட்டுரைய மேம்படுத்தினால் இந்தப் பகுப்பின் உபயோகம் அதுதான். ஆரம்ப நிலையென்பதால் தான் அதிக கட்டுரைகள் சேர்ந்துவிட்டன. சில வாரங்களின்பின் ஓரிரு கட்டுரைகள் மட்டுமே வந்துபோகும் வேற்றுப் பகுப்பாகவே காணப்படும் என நம்புகிறேன்.

எனது கருத்துக்களில் தவறிருந்தால் மன்னிக்கவும். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. கோபி 18:49, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

மயூரனாதன், நீக்க வார்ப்புருக்களை இடுவதுடன் கட்டுரை மேம்பாட்டிலும் பங்களிக்க வேண்டும் என்ற உங்கள் கருத்தை ஏற்று ஸ்னேகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்டுரைகளை மேம்படுத்தியுள்ளேன். விக்கிபீடியாவுக்கு பொருத்தமில்லாத பக்கங்களுக்கு நாம் எந்த வித அறிவிப்பும், வார்ப்புருவும் இன்றியே நீக்குகிறோம். நீக்கல் குறிப்பில் காரணம் மட்டும் குறிப்பிடுகிறோம். முக்கியத்துவம் வாய்ந்த மேம்படுத்த தக்க கட்டுரைகளுக்கு மட்டுமே இவ்வார்ப்புரு தற்போது இடப்படுகிறது. உங்களுடன் சேர்ந்து நான் உட்பட பிற பயனர்களும் இவற்றை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவர் என்றே நம்புகிறேன். நன்றி--ரவி 19:18, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

வார்ப்புருவின் பெயர் தொகு

வார்ப்புருவின் பெயரை விரைந்து நீக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என மாற்றலாமா? --செல்வா 17:10, 12 பெப்ரவரி 2007 (UTC)

துரிதம் - தமிழ் இல்லையா? ஐயகோ, எத்தனை சொற்களை தான் இப்படி பிழையாகத் தமிழ் என நினைத்துக் கொண்டிருப்பதோ :( பெயரை மாற்றலாம் செல்வா.--Ravidreams 17:30, 12 பெப்ரவரி 2007 (UTC)

புணர்ச்சி பிழையானால் பொருளும் பிழையாகும் தொகு

இந்த தலைப்பில் நான் எழுதியுள்ள கட்டுரை விக்கிப்பீடியாவில் உள்ளதென்னும் கருத்து காணப்படுகிறது. ஆனால், இந்த கருத்தை முதன்முதலாக முன்வைத்தவன் நானேயென்றெண்ணுகிறேன். இந்த கருத்தை வேறெவரேனும் முன்வைத்திருந்தாலும் அந்தக்கட்டுரைக்கும் இதற்கும் தொடர்பிருக்காதென்பதுடன், இதில் நான் இன்னும் சொல்லப்போகும் கருத்துகள் இதுவரை சொல்லப்படாதவையாகவேயிருக்கும்.

அப்படி எங்கேனும் புணர்ச்சியால் பொருள் மாறுவதை எவரேனும் விளக்கியிருந்தால் அதை எங்கேகாண்பதென்பதை எனக்கு தெரியப்படுத்தவும். இந்த என் கட்டுரையை இன்னும் நீட்டிக்கொண்டேபோகலாமென்பது என் எண்ணம். அவ்வாறு நீளமான தொடரை இங்கு எழுதமுடியுமாவென்பதையும் எனக்கு சொல்லவும். முடியாதென்றால், பகுதிபகுதியாக வெவ்வேறுதலைப்புகளில் எழுதி, அவற்றை ஒன்றாகக்கொண்டுவரமுடியுமாவென்பதையும் எனக்கு சொல்லுங்கள். தமிழ் இக்காலத்தில் புணர்ச்சியைப்பொருத்தவரை பிழையாகவேயுள்ளது. அதை நேராக்குவதற்கு என்னால் ஏதாவது செய்யமுடியுமென்றால் அதை இங்கு கட்டுரைவரைவதன்வாயிலாக செய்யலாமென்னும் ஓர் உந்துதலினாலேயே இங்கு வந்துள்ளேன். என் ஊக்கத்தை கெடுக்கவேண்டுமென்பது தங்கள் நோக்கமாக இருக்கமுடியாதென்பதை நான் அறிவேன். என்றாலும், என் கட்டுரையை நீக்கக்கோரியிருப்பதால் நான் குழப்பமடைந்துள்ளேன். தயைகூர்ந்து எனக்கு சரியானவழியை காட்டுமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன். - பொன்முடிவடிவேல்

உங்கள் கருத்துக்கு எதிர் கருத்தில்லை..இருப்பினும் விக்கிப்பீடியா என்ற கட்டமைப்பு சில கொள்கை வரைவுகளுக்குட்பட்டு செயல்படுகின்றது:
  • முதலாவதாக விக்கிப்பீடியா என்பது இரண்டாம்நிலை தரவுத்தளமாகும். வலைப்பதிவு போன்ற தனிநபர் ஆக்கங்களை ஒருங்கிணைக்கும் தளமல்ல. இங்கு முதல்நிலை ஆய்வுக்கட்டுரைகளோ காப்புரிமை உள்ள பிற தளங்களில் உள்ள உள்ளடக்கங்களோ அனுமதிக்கப்படுவதில்லை. காட்டாக "யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது ஏதுமில்லை" என பாரதியார் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதவியலாது. ஆனால் பாரதியார் இவ்வாறு பாடியுள்ளார் என்று சான்று தொடுப்புடன் நாம் தமிழ் மொழி பற்றிய கட்டுரையில் சேர்க்கலாம்.
  • இங்குள்ள கட்டுரைகளுக்கு எவருக்கும் உரிமை கிடையாது. மற்றவர் எழுதிய கட்டுரைகளை நீங்கள் மாற்றலாம். உங்கள் கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் மாற்றலாம். (உள்ளடக்க மாற்றங்கள் உங்களுக்கு மனவலியைத் தருமானால் கவனமாக இருங்கள்.) இதனாற்றான் இங்கு பதிப்புரிமம் உள்ள ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உங்கள் கட்டுரை ஏற்கெனவே இணையத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நீங்கள் உரிமத்துறப்பிற்கு தயாராக இருந்தாலும் நீங்கள் பதிவேற்றிய கூகிள் போன்ற உரிமையாளர்களின் பதிப்புரிமை மீறல் ஆகலாம்.
  • இங்கு ஏற்கெனவேயுள்ள புணர்ச்சி (இலக்கணம்), புணர்ச்சி விகாரம், இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்) கட்டுரைகளில் நீங்கள் தவறுகளைத் திருத்தலாம்; புதிய பத்திகளைக் கொண்டு விரிவாக்கலாம். ஆனால் உங்கள் கூற்றுக்களுக்கு பிற நூல்களிலிருந்து (எவரும் சரிபார்க்கக்கூடிய) சான்றுத்தொடுப்புத் தர வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் பார்த்தால் நான் கூற விழைவது விளங்கும்.
  • ஓர் பாடநூல் போல எழுத விழைந்தால்   விக்கிநூல்கள் பொருத்தமானதாக இருக்கும். நன்னூல் போன்ற காப்புரிமை நீங்கிய மூலநூல்களை பதிவேற்ற   விக்கிமூலத்தில் பொருத்தமானதாகும்.
--மணியன் (பேச்சு) 04:46, 17 திசம்பர் 2014 (UTC)Reply

நன்றியையா, விளங்கிக்கொண்டேன். என் கருத்துகள்யாவும் நானேகண்டவையாதலால் அவற்றுக்கு பிறநூல்களிலிருந்து சான்றுதருவது இயலாது. நான் எழுதியிருக்கும் 'தமிழ்வெல்லத்தாழி' என்னும் நூல் வெளிவந்தபின் அதைவேண்டுமானால் சான்றாக காட்டலாம்.

ஆகவே, என் கருத்துகளை 'புணர்ச்சி இலக்கணம்' எனக்காணப்படும் விக்கிப்பீடியாவின் தலைப்பின்கீழும் எழுதமுடியாது.

எனினும், 'விக்கிநூல்' என்றபகுதியில் எழுதலாமென்கிறீர்கள். அங்கே சான்றுகளின்றியெழுதவிலலுமாவென்பதை சொல்லுங்கள். என் எழுத்துகளில் நன்னூலிலிருந்தும் தொல்காப்பியத்திலிருந்தும் சான்றுகளை அங்கங்கே தந்தேசெல்வேன். நன்றி!--−முன்நிற்கும் கருத்து பொன்முடிவடிவேல் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பயனர்:பொன்முடிவடிவேல், //என் கருத்துகள்யாவும் நானேகண்டவையாதலால் அவற்றுக்கு பிறநூல்களிலிருந்து சான்றுதருவது இயலாது// இதிலிருந்து நீங்கள் கூறியுள்ள விதிகள் யாவும் நீங்களே உருவாக்கியது எனப் பொருள் கொள்ளலாமா?--Kanags \உரையாடுக 08:26, 17 திசம்பர் 2014 (UTC)Reply

ஆமாம்! புணர்ச்சிபற்றி நான் சொல்கின்ற புதுமையானசெய்திகள் இதுவரை எவராலும் சொல்லப்படாதவை. புணர்ச்சியை இலக்கணநூல்கள் சொல்கின்றனவென்றால், அவை புணரத்தக்கசொற்கள் தாம் புணரத்தக்கவிடங்களில் எவ்வாறுபுணருமென்பதுபற்றியேசொல்கின்றன. அதாவது, அவை இயல்பாய்ப்புணருமா அல்லது விகாரப்பட்டுப்புணருமாவென்பதையும், விகாரப்படுமெனில் அந்த விகாரம் எப்படிப்பட்டதாயிருக்குமென்பதும் அந்த நூல்களில் சொல்லப்படுகின்றன.

தொல்காப்பியமும் நன்னூலும் அவற்றின்வழியாய் பலரும் இதுவரை எழுதியுள்ள அனைத்துநூல்களும் இவற்றையேசொல்கின்றன. ஆனால், எந்தநூலிலும் சொற்கள் எந்தக்காரணத்தாற்புணரவேண்டுமென்பது சொல்லப்படவில்லை.

அதாவது, எடுத்துக்காட்டாய்ச்சொன்னால், இரண்டாம்வேற்றுமையின்முன் வல்லினம்வந்தால் புணர்ச்சியில் வலிமிகுந்துபுணருமென்பது விதி. இதை எண்ணிக்கொண்டு, இன்று அந்த வேற்றுமையின்முன் வல்லினம்வரும் அனைத்திடங்களிலும் புணர்த்திவிடுவதை அறிஞர்களுங்கூட வழக்கமாய்க்கொண்டுள்ளார்கள்.

எல்லாவேற்றுமைகளும் புணர்ந்தும்வரும், புணராமலும்வரும். புணர்ந்துவரும்போது அவை தரும் பொருளும் புணராதபோது அவை தரும் பொருளும் வெவ்வேறாயிருக்குமென்பதுதான் உண்மை. இந்த உண்மையை அறியாததால் இரண்டாம்வேற்றுமையின்முன் வல்லினம்வரும் அனைத்திடங்களிலும் புணர்த்திவிடுகிறார்கள். இந்த இரண்டாம்வேற்றுமையின்முன் வினைச்சொல்மட்டுமேபுணரும், பெயர்ச்சொல் புணர்ந்துவராது. புணராமல் தனித்தேவரும். ஆனால், இன்று வருவது பெயராயிருந்தாலும், வலியை மிகுத்துவிடுகிறார்கள்!

வினையெச்சத்தின்முன்னும் பெயர்வருமிடங்களில் வலிமிகுத்துவிடுவதை காணலாம். இதுவும் குற்றமே. ஏனெனில், வினையெச்சமும் பெயரும் புணரா.'தமிழைப் பிழையின்றியெழுதுவோம்' என்பது குற்றம். இதில் ஐயுருபின்முன்வந்த பெயர் புணர்ந்துள்ளதற்கடையாளமாக வலிமிகுந்திருப்பதைப்பாருங்கள். 'பிழையின்றித் தமிழெழுதுவோம்' என்பதில் வினையெச்சத்தின்முன் பெயர்வந்துள்ளதையும் வலி மிகுந்துள்ளதையும்பாருங்கள். - பொன்முடிவடிவேல்

Return to "விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்" page.