பசிபிக் இரத்த கடல் விண்மீன்

கடல்வாழ் உயிரினம்
பசிபிக் இரத்த கடல் விண்மீன்
Sea star in sea grass
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எச்சினாசிடிரிடே
பேரினம்:
என்றிசியா
இனம்:
எ. லெவியசுகுலா
இருசொற் பெயரீடு
என்றிசியா லெவியசுகுலா
(சிம்சன், 1857)

பசிபிக் இரத்த கடல் விண்மீன் (Henricia leviuscula) என்று அழைக்கப்படும் என்றிசியா லெவியசுகுலா, வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் காணப்படும் கடல் விண்மீன் சிற்றினமாகும்.

விளக்கம்

தொகு

பசிபிக் இரத்த கடல் விண்மீன் பொதுவாகப் பிரகாசமான ஆரஞ்சு-சிவப்பு நிறத்தால் அடையாளம் காணப்படலாம். ஆனால் பழுப்பு நிறத்திலிருந்து கிட்டத்தட்ட ஊதா வரை பல வேறுபாடுகள் காணப்படலாம். வட்டு சாம்பல் நிறமாக இருக்கலாம். கதிர்களுக்கு இடையில் இளஞ்சிவப்பு புள்ளிகளின் சேணம் போன்ற குறிகளும் இருக்கலாம்.[1] இவை பொதுவாக 5 ஆரங்களைக் கொண்டிருக்கின்றன (எப்போதாவது 4-6). ஆரங்கள் மென்மையாகவும், நுண் இடுக்கி மற்றும் முதுகெலும்புகள் இல்லாததால் மென்மையாகவும் தோன்றும். இச்சிற்றினம் ஒப்பீட்டளவில் சிறியது. இதனுடைய விட்டம் பொதுவாக 8 செ.மீ. க்கு மேல் இருக்கும். அரிதாக 12 செ.மீ. ஐ விட பெரியதும் உள்ளன.[2] அனைத்து கடல் நட்சத்திரங்களையும் போலவே, இரத்த நட்சத்திரமும் ஒரு கற்சல்லடைத் தட்டினைக் கொண்டுள்ளது. இதைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.

 
கற்சல்லடைத்தட்டு

இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கை வரலாறு

தொகு

பசிபிக் இரத்த கடல் விண்மீனில் ஆண் பெண் எனப் பாலினங்கள் தனித்தனியாகக் காணப்படும். பெண்களுக்கு அடைகாக்கத் தெரியாது.[3] இந்த அறிக்கை மற்ற ஆதாரங்களுடன் முரண்படுகிறது. இளம் வயது பெண் கடல் நட்சத்திரம் அடைகாக்கும் மற்றும் பெரிய கடல் நட்சத்திரம் நேரடியாகத் தண்ணீரில் முட்டைகளை வெளியேற்றும். இவற்றை அடைகாப்பதில்லை.[4] இதன் காரணமாக இச்சிற்றினம் ஒரு சிக்கலானது என்று உயிரியலாளர்கள் நம்புகின்றனர்.[5] கரு நிலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் தனித்தனியாக மிதக்கின்றன. குஞ்சு பொரித்த இளம் உயிரிகள் குற்றிலையுடையன. இதனால் இவை நீந்துகின்றன. முட்டையிடப்பட்ட முட்டைகள் 1342 மைக்ரோ மீட்டர் விட்டமுடையது.[6]

நடத்தை

தொகு

பசிபிக் இரத்த கடல் விண்மீன் என்ரிசியா லெவியசுகுலா தன்னை நிலைநிறுத்தும் நடத்தையை ஒப்பிடும் ஆய்வில், கரங்கள் 1 மற்றும் 3ஐ ஒன்றையொன்று நோக்கி முறுக்கி, தொட்டியின் அடிப்பகுதியில் தன்னைத் தாங்கிக் கொள்ள 4 மற்றும் 5 கைகளைப் பயன்படுத்துகின்றன. மேலும் இது உட்கார்ந்து இருப்பது போன்ற நிலையில் காணப்படும். தன்னைத்தானே புரட்டிக்கொள்ளும். இந்நிகழ்வு ஒட்டுமொத்தமாக, 15.22 நிமிடங்கள் சராசரி நேரத்தைக் கொண்டுள்ளது.[7]

பரவல்

தொகு

பசிபிக் இரத்த கடல் விண்மீனின் வாழிட வரம்பு அலாசுக்காவிலிருந்து பாஜா கலிபோர்னியா வரை காணப்படுகின்றது.[8]

வாழ்விடம்

தொகு

பசிபிக் இரத்த கடல் விண்மீனின் வாழ்விடமானது பாறைகளுக்கு அடியில் உள்ள அலைக்கற்றை மண்டலம் மற்றும் குறைந்த அலைக் கோட்டிலிருந்து சுமார் 400 மீட்டர் ஆழம் வரை பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஆகும்.[9] இவை பெரும்பாலும் ஆர்க்டோனோ விட்டட்டா என்ற புழுவுடன் இணைவாழ்வினை கொண்டுள்ளன.[10]

கூட்டுவாழ்வு

தொகு

என்ரிசியா லெவியுசுகுலா முக்கியமான கலப்பினங்கள் மற்றும் சாத்தியமான தனித்துவமான சிற்றினமாக இருக்கலாம்.[11] என்றிசியா லெவியசுகுலா அனெக்டென்சு மற்றும் என்றிசியா லெவியசுகுலா லெவிவசுகுலா ஆகியவை துணையினங்கள் உள்ளன.[12]

உணவூட்டம்

தொகு

பசிபிக் இரத்த கடல் விண்மீன் முக்கியமாகக் கடற்பாசிகள் மற்றும் சிறிய பாக்டீரியாக்களை உணவாக உட்கொள்கிறது.[13] கடல் நட்சத்திரம் இந்த சிறிய துகள்களைக் கோழைப் படலத்தால் பிடிக்கப்பட்டு குற்றிலையுடைய உணவுப் பாதையில் குற்றிலை அசைவுகளால் கடத்தப்படுகிறது. இது கடற்பாசிகள் மற்றும் பிரயோசோவாவின் மேற்பரப்பில் வயிற்றைப் பயன்படுத்தி உணவூட்டுகிறது.[14]

பாதுகாப்பு நிலை

தொகு

பட்டியலிடப்படவில்லை. வேட்டையாடுபவர்கள் மனிதர்கள் மற்றும் பறவைகள் அபாயத்தில் உள்ளது.

 
ஹென்ரிசியா லெவியஸ்குலா

தொடர்புடைய பெயர்கள்

தொகு
  • கீட்டாசுடர் கலிபோர்னிகசு குரூப், 1856 ஒத்த பெயர்
  • கிரிப்ரெல்லா லேவியுசுகுலா சிலாடன், 1889 ஒத்த பெயர்
  • கிரிப்ரெல்லா லேவியசுகுலா வைட்டேவ்சு, 1878 ஒத்த பெயர்
  • என்றியா அட்டினுட்டா எச். எல். கிளார்க், 1901 ஒத்த பெயர்
  • என்றியா இனுகுலிசு வெர்ரில், 1914 இணைச்சொல்
  • என்றிசியா லுனுலா வெர்ரில், 1914 இணைச்சொல்
  • என்றிசியா இசுபாட்டுலிபெரா வெர்ரில், 1909 ஒத்த பெயர்
  • லின்கியா லெவியுசுகுலா இசுடிம்ப்சன், 1857 ஒத்த பெயர் [15]

பொதுவான பெயர்கள்

தொகு

பசிபிக் இரத்த கடல் விண்மீன், இரத்த கடல் விண்மீன், இரத்த நட்சத்திர மீன்.[16]

மேற்கோள்கள்

தொகு
  1. Kozloff, E. N. (1996). Marine Invertebrates of the Pacific Northwest. Seattle: University of Washington Press.
  2. Kozloff, E. N. (1993). Seashore Life of the Northern Pacific Coast. Seattle: University of Washington Press.
  3. Kozloff, E. N. (1996). Marine Invertebrates of the Pacific Northwest. Seattle: University of Washington Press.
  4. Meinkoth, N. A. (1981). National Audubon Society Field Guide to North America Seashore Creatures. New York: Chanticleer Press, Inc.
  5. Cowles, D. (2005). Henricia leviuscula. Retrieved May 8, 2010, from Key to Invertebrates Found At or Near Rosario Beach: http://www.google.com/imgres?imgurl=http://www.wallawalla.edu/academics/departments/biology/rosario/inverts/Echinodermata/Class%2520Asteroidea/Henricia_leviuscula4sDLC2005.jpg&imgrefurl=http://www.wallawalla.edu/academics/departments/biology/rosario/inver
  6. Douglas J. Eernise, M. F. (2010). Henricia pumila sp. nov.: A brooding seastar (Asteroidea) from the coastal. Retrieved May 11, 2010, from http://www.mapress.com/zootaxa/2010/f/zt02329p036.pdf
  7. Sarah Pearson, S. P. (2008, July 11). Righting Behavior of Sea Stars. Retrieved May 2010, 8, from https://scholarsbank.uoregon.edu/xmlui/bitstream/handle/1794/7841/Pearson-Pedemonte.pdf?sequence=1
  8. Meinkoth, N. A. (1981). National Audubon Society Field Guide to North America Seashore Creatures. New York: Chanticleer Press, Inc.
  9. Meinkoth, N. A. (1981). National Audubon Society Field Guide to North America Seashore Creatures. New York: Chanticleer Press, Inc.
  10. Arctonoe vittata பரணிடப்பட்டது 2012-07-30 at the வந்தவழி இயந்திரம்
  11. Kozloff, E. N. (1996). Marine Invertebrates of the Pacific Northwest. Seattle : University of Washington Press.
  12. Catalogue of Life. (2008). Retrieved May 8, 2010, from Species 2000: http://www.catalogueoflife.org/annual-checklist/2008/browse_taxa.php?selected_taxon=991569
  13. Meinkoth, N. A. (1981). National Audubon Society Field Guide to North America Seashore Creatures. New York: Chanticleer Press, Inc.
  14. Lester B. Pearson College. (2001, December 1). Henricia leviuscula. Retrieved May 8, 2010, from Racerocks.com: http://www.racerocks.com/racerock/eco/taxalab/taniam.htm
  15. Henricia leviuscula (Stimpson, 1857). (2010, May 07). Retrieved May 07, 2010, from Encyclopedia of Life: http://www.eol.org/pages/598509
  16. Henricia leviuscula (Stimpson, 1857). (2010, May 07). Retrieved May 07, 2010, from Encyclopedia of Life: http://www.eol.org/pages/598509

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு