பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை (Pachchilaipalli Divisional Council) இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 167.75 சதுர மைல்கள். இதன் வடக்கிலும், கிழக்கிலும் யாழ்ப்பாண மாவட்டமும்; தெற்கில் கரைச்சி பிரதேச சபையும்; மேற்கில் யாழ்ப்பாண நீரேரியும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் 9 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 9 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வட்டாரங்கள்

தொகு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைப் பகுதி 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 முகமாலை KN91 அரசங்கேணி
KN92 இத்தாவில்
KN93 முகமாலை
2 கிளாலி KN89 அல்லைப்பளை
KN94 வேம்பொடுகேணி
KN95 கிளாலி
3 பளை KN87 பளை நகரம்
KN88 புலோப்பளை மேற்கு
KN90 கச்சார்வெளி
4 தம்பாகமம் KN86 தம்பாகமம்
5 முல்லையாடி KN84 புலோப்பளை
KN85 முல்லையாடி
6 சோரன்பற்று KN82 சோரன்பற்று
KN83 தர்மகேணி
7 முகாவில் KN80 முகாவில்
KN81 மாசார்
8 இயக்கச்சி KN78 கோவில்வயல்
KN79 இயக்கச்சி

தேர்தல் முடிவுகள்

தொகு

1998 உள்ளாட்சித் தேர்தல்

தொகு

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[2][3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 731 46.15% 5
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 377 23.80% 2
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 362 22.85% 2
  தமிழீழ விடுதலை இயக்கம் 114 7.20% 0
செல்லுபடியான வாக்குகள் 1,584 100.00% 9
செல்லாத வாக்குகள் 385
மொத்த வாக்குகள் 1,969
பதிவில் உள்ள வாக்காளர்கள் 7,463
வாக்களித்தோர் 26.38%

2011 உள்ளாட்சித் தேர்தல்

தொகு

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 1,650 55.89% 6
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 1,184 40.11% 3
  ஐக்கிய தேசியக் கட்சி 114 3.86% 0
  மக்கள் விடுதலை முன்னணி 4 0.14% 0
செல்லுபடியான வாக்குகள் 2,952 100.00% 9
செல்லாத வாக்குகள் 339
மொத்த வாக்குகள் 3,291
பதிவில் உள்ள வாக்காளர்கள் 7,116
வாக்களித்தோர் 46.25%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்

தொகு
  1. Ward Map for Pachchilaipalli Pradeshiya Sabha – Kilinochchi District[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  3. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 26 மார்ச் 2017. 
  4. "Local Authorities Election - 23.07.2011 Kilinochchi District Pachchilaipalli Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]