பஜன் கவுர்

இந்திய வில்வித்தை வீராங்கனை

பஜன் கவுர் (Bhajan Kaur, பிறப்பு 26 ஆகத்து 2005) என்பவர் அரியானாவைச் சேர்ந்த இந்திய வில்வித்தை வீராங்கனை ஆவார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வில்வித்தை அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோருடன் இணைந்து, இந்திய மகளிர் வில்வித்தை அணிக்கு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.[2] வெண்கலப் பதக்கத்திற்கான பிளே-ஆஃப் போட்டியில் இந்திய முத்தரப்பு 6-2 என்ற கோல் கணக்கில் வியட்நாம் அணியை வீழ்த்தியது.[3][4] 16 சூன் 2024 அன்று, துருக்கியின் அணதோலியாவில் நடந்த ஒலிம்பிக் இறுதி தகுதிச் சுற்றில் தங்கம் வென்றார். 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.[5]

பஜன் கவுர்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு26 ஆகத்து 2005 (2005-08-26) (அகவை 19)
எலெனாபாத், அரியானா, இந்தியா
விளையாட்டு
விளையாட்டுவிற்கலை

துவக்ககால வாழ்க்கை

தொகு

கவுர் அரியானா மாநிலம், சிர்சா மாவட்டம், எலெனாபாதைச் சேர்ந்தவர். எலனாபாத்தில் உள்ள நாச்சிகேதன் பொதுப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.[6] இவர் ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட் என்ற அரசு சாரா அமைப்பினால் ஆதரிக்கப்படுகிறார். இவரது தந்தை பகவான் சிங் ஒரு விவசாயி, இவருக்கு ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உள்ளனர்.[7]

2024 கோடை ஒலிம்பிக்

தொகு

2024 ஆம் ஆண்டு பாரிசில் நடந்த கோடைகால ஒலிம்பிக் 2024 கோடை ஒலிம்பிக்கில் கவுர் தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவர் பெண்களுக்கான தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்றுக்கு முன்னேறினார். இருப்பினும், ஷூட்-ஆஃப் போட்டியில் அவர் 5-6 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் டயானந்தா சொய்ருனிசாவிடம் தோற்றார். மகளிர் அணியில் அங்கிதா பகத், தீபிகா குமாரியுடன் கவுர் காலிறுதிக்கு முன்னேறினார். எனினும், அந்த அணி 0-6 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது தோற்றது.[8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Full list of Indian athletes for Asian Games 2023". Firstpost (in ஆங்கிலம்). 26 August 2023. பார்க்கப்பட்ட நாள் 3 October 2023.
  2. Sportstar, Team (6 October 2023). "Asian Games 2023: India wins Bronze in Archery Recurve Women's Team event". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 October 2023.
  3. "Asian Games Day 13: India win bronze in women's recurve archery". Firstpost (in ஆங்கிலம்). 6 October 2023. பார்க்கப்பட்ட நாள் 6 October 2023.
  4. "Asian Games 2023, Archery: Indian Women's Recurve team win bronze after beating Vietnam". India Today (in ஆங்கிலம்). 6 October 2023. பார்க்கப்பட்ட நாள் 6 October 2023.
  5. "Olympics archery: Bhajan Kaur wins gold as India bag women's individual quota". Hindustan Times (in ஆங்கிலம்). 16 June 2024. பார்க்கப்பட்ட நாள் 12 July 2024.
  6. "Meet Bhajan Kaur - Can She Win for India at Olympics 2024?". India Sport Pulse. 21 July 2024. பார்க்கப்பட்ட நாள் 29 July 2024.
  7. "धनुष दिलाने के लिए माता-पिता ने उधार लिए थे पैसे, जानें पेरिस ओलंपिक कोटा दिलाने वाली भजन कौर की दर्दभरी कहानी | archer bhajan kaur profile who got paris olympics 2024 quota". Patrika News (in இந்தி). 18 June 2024. பார்க்கப்பட்ட நாள் 12 July 2024.
  8. Sandikar, Abhishek (3 August 2024). "Paris Olympics 2024: Bhajan Kaur loses against Diananda Choirunisa via shoot-off in RO16 clash". Sportstiger.com. Sports Tiger. பார்க்கப்பட்ட நாள் 3 August 2024.
  9. "Kaur Bhajan". olympics.com. பார்க்கப்பட்ட நாள் 3 August 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜன்_கவுர்&oldid=4142769" இலிருந்து மீள்விக்கப்பட்டது