திருவைந்தெழுத்து

(பஞ்சாட்சரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.

திருவைந்தெழுத்து

வடிவங்கள்

தொகு

திருவைந்தெழுத்தினை ஐந்து வடிவங்களாக கொள்கின்றனர். அவை கீழே.

  • தூல பஞ்சாட்சரம் - நமசிவய [1]
  • சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம[1]
  • ஆதி பஞ்சாட்சரம்- சிவயசிவ[1]
  • காரண பஞ்சாட்சரம் - சிவசிவ[1]
  • மகாகாரண பஞ்சாட்சரம் (ஏக பஞ்சாட்சரம்) - சி

நமசிவாய என்பதை சிவபெருமானின் பெயர்களில் ஒன்றாகும்.[2][3]

இந்த பஞ்சாட்சரமானது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும், சூட்சும பஞ்சாட்சரம் எனவும் இருவகைபடுகிறது.[4] நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும், சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம் எனவும் அறியப்படுகிறது.

சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். சிவாயநம என்பது சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாக உள்ளது. இதற்குப் பல பொருள் உண்டு என்று இந்து சமயத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாகத் 'திருவைந்தெழுத்து' கூறப்படுகிறது.

விளக்கம்

தொகு

திருமூலர் முதலான தமிழ்ப் புலவர்கள் உட்பட இம் மந்திரத்துக்கு அவரவர் கண்ட விளக்கங்களைக் கூறியுள்ளனர். அவை எந்த மொழியியலையும் பின்பற்றவில்லை. உண்மையில் அவை மந்திரமொழி.

  • மந்திரம் பொதுமொழி. அதனைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது ஒரு சாரார் கருத்து
  • நமசிவாய மந்திரம் தமிழ் என்போர் தமிழியல் வழியில் சில விளக்கங்களைத் தருகின்றனர்.
  • நமசிவாய மந்திரம் வடமொழி என்போர் சில விளக்கங்களைத் தருகின்றனர்.

மந்திரமா, தமிழா, வடமொழியா என்பது அவரவர் மனப்பாங்கைப் பொருத்தது. இது சரி, இது தவறு, என யாராலும் நிறுவ இயலாது.

தமிழியல் விளக்கம்

தொகு

நமசிவாய
சிவாயநம

  • நம - 'நாம்' என்னும் பால்பகா அஃறிணைப் பெயரின் ஆறாம் வேற்றுமை நிலை 'நம'. இது 'அது' என்னும் உருபினை ஏற்கும்போது 'நமது' என வரும். உருபு மறைந்திருக்கும் வேற்றுமைத்தொகையில் 'நம' என நிற்கும். இது 'என் கை' 'என கைகள்' என்று அமைவதைப் போன்றது.
  • சிவ் - சிவன் 'சிவ்' என்னும் சத்தியை அவளிடம் பெற்றுக்கொண்டு அவளோடு ஒன்றாய் இருப்பவன்.
  • ஆய - ஆயம். ஆய என முடிந்த பின்னர் மீண்டும் நம வந்து சேரும்போது மகர-ஒற்று இடையில் தானே வந்துவிடும். சிவாய[ம்]நம எனவே ஆய என்பது ஆயம் ஆகிவிடும். ஆயம் என்பது ஆயத்தாராகிய திருக்கூட்டம்

இவற்றால் நாம் அறிவது நம்முடையவை சிவத்திருக்கூட்டம் என்பதே 'நமசிவாய' என்பதன் பொருள்.

நமச்சிவாய

  • நம் அச்சு இவ் ஆய[ம்]

நமக்கு அச்சாக இருப்பதெல்லாம் நம்முடன் இருக்கும் திருக்கூடமே. பிறர் இல்லாமல் நம்மால் தனித்து வாழமுடியாது அல்லவா?

வடமொழி விளக்கம்

தொகு

திருவைந்தெழுத்து விளக்கம்

தொகு
 
திருவைந்தெழுத்து விளக்கம்

திருவைந்தெழுத்தான நமசிவாய இலுள்ள ஒவ்வொரு அட்சரமும் தத்துவப் பொருளுடையவை.

  • ந - திரோத மலத்தையும்,
  • ம - ஆணவ மலத்தையும்,
  • சி - சிவமயமாயிருப்பதையும்,
  • வா - திருவருள் சக்தியையும்,
  • ய - ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.

இதன் உட்பொருள் உயிர்களில் உறைந்துள்ள ஆணவமும் மாயையும் விலகி சிவசக்தி சிவத்துடன் ஐக்கியமாவதே நமசிவாய என்பதன் பயன் என்பதாகும்.

திருவைந்தெழுத்து ஓதுவதன் பயன்கள்

தொகு

ஆன்மாவுக்கு நற்றுணையாகவும் உயிர்த்துணையாகவும் அமைவது இம்மந்திரமாகும். வாழ்வில் துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை இயைபாக்கவும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பது சைவசமயிகளின் முடிபாகும்.

திருவைந்தெழுத்தின் சிறப்புக் கூறும் இலக்கியங்கள்

தொகு
  • "சிவாயநம என்று சிந்தித்திருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" - ஔவையார்.
  • "கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" - திருநாவுக்கரசர்
  • "நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க" - மாணிக்கவாசகர்

{{dablink|திருவைந்தெழுத்தை விளக்கும் நூல்களில் மற்றொன்று பஞ்சாக்கர மாலை}

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 http://www.tamilvu.org/slet/l41F0/l41F0pm1.jsp?pglink=p54&bookid=259&pno=322&brno=5
  2. எந்தையார் திருநாமம் நமச்சி வாய என்றெழுவார்க கிருவிசும்பி லிருக்க லாமே.
  3. http://www.tamilvu.org/slet/l4160/l4160sur.jsp?sno=919&book_id=114&head_id=64&sub_id=2203&x=2360&y=2413
  4. http://temple.dinamalar.com/news_detail.php?id=20586 நமசிவாய, சிவாயநம இரண்டில் எது சிறந்தது?

வெளி இணைப்புகள்

தொகு

"மந்திர யோகம்" - முனைவர் சி.சேதுராமன் - திண்ணை சனிக்கிழமை பிப்ரவரி 6 2010 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவைந்தெழுத்து&oldid=3908423" இலிருந்து மீள்விக்கப்பட்டது