பஞ்சாபின் நாட்டுப்புற இசை

பஞ்சாபி நாட்டுப்புற இசை (Folk music of Punjab) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் பஞ்சாப் பகுதியின் பாரம்பரிய இசைக்கருவிகள் மீதான பாரம்பரிய இசையைக் குறிப்பதாகும் .[1][2] பிறந்த காலத்திலிருந்து மகிழ்ச்சி மற்றும் துக்கத்தின் வெவ்வேறு கட்டங்கள் வழியாக மரணம் வரை அவர்களைடையே இசையின் தாக்கம் உள்ளது.[3] அவர்களின் நாட்டுப்புற இசை மரபுகள், கடின உழைப்பு இயல்பு, துணிச்சல், இந்தியாவின் புவியியல் இருப்பிடமான அதன் நுழைவாயில் போன்றவைகள் பஞ்சாப் மக்களை பல விஷயங்களில் அழைக்கிறது. பல துணை பிராந்தியங்களைக் கொண்ட பெரிய பகுதி காரணமாக, நாட்டுப்புற இசையில் சிறிய மொழி வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அதே உணர்வுகளைத் தூண்டுகின்றன. துணைப் பகுதிகளான, மால்வா, பிஸ்த் தோவாப், மாஜ்ஹா, போத்தோஹர் மற்றும் மலைப் பகுதிகள் ஏராளமான நாட்டுப்புற பாடல்களைக் கொண்டுள்ளன.[4] பஞ்சாபி நடனமான ஓபி பாங்க்ரா இசை, இது பஞ்சாபி புலம்பெயர்ந்தோரால் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சாபி நவீன இசையின் வகையாகும்.

இரண்டு முரசுகள்

இசை பாணியின் பொதுவான அம்சங்கள் தொகு

தாளம் தொகு

பொதுவாக சிக்கலான பாங்க்ரா இசையின் தாளங்களைப் போலல்லாமல் பஞ்சாபி நாட்டுப்புற இசையின் தாளம் மிகவும் எளிதானது.[5]

மெல்லிசை தொகு

ஈர் ராஞ்சா, மிர்சா சாகிபான் போன்ற சில காதல் பாடல்கள் பாரம்பரிய பாடல்களைப் பயன்படுத்தி பாடப்படுகின்றன. இசைக்கலைமை இல்லாததால் பஞ்சாபி நாட்டுப்புற வகை புதிய பாடல்களுடன் இருந்தாலும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மெல்லிசைகளை மீண்டும் பயன்படுத்த உறுதிபூண்டுள்ளது

நாட்டுபுறப் பாடல்கள் தொகு

பஞ்சாபில் பிறப்பு, திருமணம், இறுதிச் சடங்கு, மரணம், காதல், பிரிப்பு, அழகு, சமூக மற்றும் பொருளாதார நிலை, கிராம வாழ்க்கை முறை, உணவு, இயல்பு, துணிச்சல், நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புற காதல், நாட்டுப்புற மற்றும் வரலாற்று நாயகர்கள், திருவிழாக்கள் மற்றும் பலவற்றிலும் நாட்டுப்புற பாடல்கள் இடம் பெற்றுள்ளன.[2] நாட்டுப்புற பாடல்களில் பஞ்சாபின் தொழில்முறை சாதிகளின் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்:

பாடுவதற்கான சந்தர்ப்பம் தொகு

சர்ச்சை தொகு

பஞ்சாபி நாட்டுப்புற இசை ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடையது. பாடல்களுடன் தொடர்புடைய பல கருப்பொருள்கள் சாதி அமைப்பு மற்றும் போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மூடநம்பிக்கைகள் போன்ற பஞ்சாபி சமுதாயத்தின் தீமைகளை மேம்படுத்துகின்றன. சீக்கிய புரட்சி போன்ற பஞ்சாபில் பல புரட்சிகள் பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களுக்கு நேரடி எதிர்ப்பில் இருந்தன. 

வாழ்க்கை சுழற்சி சடங்குகள் தொகு

பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களில் பெரும்பகுதி பிறப்பு முதல் இறப்பு வரையிலான சம்பவங்களை முன்வைக்கிறது [4] உறவுகள், உறவினர்கள் மற்ற சந்தர்ப்பங்களில் பாடல்கள் உட்பட, விழாக்கள் மற்றும் கண்காட்சிகள். பெண்களின் மென்மையான உணர்வுகள், இயல்பு, பொழுதுபோக்குகள் மற்றும் குறைந்த சமூக அந்தஸ்தை வரையறுக்கப்பட்ட வட்டத்தில் குறிக்கின்றன. அதே நேரத்தில் ஆண்களின் பாடல்கள் அவர்களின் சுதந்திரம், வலிமை மற்றும் கடின உழைப்பைக் குறிக்கின்றன. நாட்டுப்புற பாடல்கள் ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. பின்னர் பெயரிடும் விழா, திருமணம், உறவுகள், உறவினர்கள் மற்றும் பல.

திருமணத்தின் வெவ்வேறு கட்டங்களில் சுஹாக், கோர்ஹியன், செஹ்ரா, சித்னியன் போன்ற பல பாடல்கள் உள்ளன. சுஹாக் மணமகனுடன் தொடர்புடையவர், கோர்ஹியன் மற்றும் செஹ்ரா ஆகியோர் மணமகனுடன் தொடர்புடையவர்கள்.

ஒரு மகளின் உணர்வுகளுக்கு பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களில் ஒரு சிறப்பு இடம் உண்டு. அதில் அவர் தனது தந்தையிடம் ஒரு சிறந்த வீடு, நல்ல மனிதர்கள் (மாமியார்) மற்றும் பலரைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். நீளம் மற்றும் மனநிலையால், பல்வேறு வகையான பாடல்களில் சுஹாக்,[6] கோர்ஹியன், போலியன்,[7] டேப்பே,[8] சித்னியன்,[9] சாண்ட்,[10] ஹீரா, லோரியன் போன்றவை அடங்கும்.[2][4]

கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் தொகு

ஒவ்வொரு பண்டிகை சந்தர்ப்பத்திலும் அதனுடன் தொடர்புடைய இசை உள்ளது.[3] உலோகிரி மற்றும் மகி போன்ற பண்டிககளின்போது போதும் பருவகால மாற்றம் தொடர்புடைய அறுவடை திருவிழாவான வைசாக்கியின் போதும் இது நிக்ழகிறது. ஆண்கள் பாங்ரா நடனமாடுகிறார்கள், பெண்கள் கித்தா என்ற நடனத்தை ஆடுகிறார்கள். தீயான் பண்டிகையை கொண்டாடும் பெண்களுக்கு சாவன் மாதம் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.[3] திருமணமானவர்கள் தங்கள் பெற்றோரின் வீட்டிற்கு திரும்பி வந்து தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திக்கிறார்கள். திறந்த மைதானத்தில் அவர்கள் கித்தாவை ஆடுகிறார்கள். அவர்கள் பூல்காரி போன்ற வண்ணமயமான ஆடைகளை அணிந்துகொண்டு, மருதானி மற்றும் கண்ணாடி வளையல்களால் கைகளை அலங்கரிக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Folk music and musical instruments of Punjab. Mapin Publishers. https://archive.org/details/folkmusicmusical00pand/page/128. 
  2. 2.0 2.1 2.2 Punjab Da Lok Virsa. Punjabi University. 
  3. 3.0 3.1 3.2 "The Music of Punjab". SadaPunjab.com. Archived from the original on December 6, 2010. பார்க்கப்பட்ட நாள் May 22, 2012.
  4. 4.0 4.1 4.2 "ਪੰਜਾਬ ਦੇ ਲੋਕ-ਗੀਤ". sabhyachar.com (in பஞ்சாபி). பார்க்கப்பட்ட நாள் May 22, 2012.
  5. Musical heritage of India. 
  6. "Punjab heritage comes alive on concluding day". The Tribune (Ludhiana). October 1, 2011. http://www.tribuneindia.com/2011/20111001/ldh1.htm#8. 
  7. "Power failure hits show". The Tribune (Chandigarh). May 21, 1999. http://www.tribuneindia.com/1999/99may21/cth2.htm. 
  8. "Two plays staged". The Tribune (Amritsar). February 19, 2011. http://www.tribuneindia.com/2011/20110219/aplus.htm. 
  9. Maini, Darshan Singh (1979). Studies in Punjabi poetry. Vikas. பக். 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7069-0709-4. 
  10. Shivnath (1976). History of Dogri literature. சாகித்திய அகாதமி. பக். 194. 

மேலும் படிக்க தொகு

Bedi, Sohindar Singh. 1971. Folklore of the Punjab. New Delhi: National Book Trust.
Lybarger, Lowell H. 2011. "Hereditary Musician Groups of Pakistani Punjab." Journal of Punjab Studies 18(1/2).
Nahar Singh. 2011. "Suhāg and Ghoṛīāṅ: Culture's Elucidation in a Female Voice." Journal of Punjab Studies 18(1/2).
Nayyar, Adam. 2000. "Punjab." In The Garland Encyclopedia of World Music, Vol. 5, South Asia: The Indian Subcontinent, ed. by Allison Arnold. New York; London: Garland.
Nijhawan, Michael. 2006. Dhadi Darbar. New Delhi: Oxford University Press.
Pande, Alka. 1999. Folk Music & Musical Instruments of Punjab. Middletown, NJ: Grantha Corporation.
Schreffler, Gibb. 2004. "Vernacular Music and Dance of Punjab." Journal of Punjab Studies 11(2).
Schreffler, Gibb. 2011. "Music and Musicians in Punjab." Journal of Punjab Studies 18(1/2).
Schreffler, Gibb. 2011. "Western Punjabi Song Forms: Māhīā and Ḍholā." Journal of Punjab Studies 18(1/2).
Thuhi, Hardial. 2011. "The Folk Dhadi Genre." Trans. by Gibb Schreffler. Journal of Punjab Studies 18(1/2).
Thuhi, Hardial. 2011. "The Tumba-Algoza Ballad Tradition." Trans. by Gibb Schreffler. Journal of Punjab Studies 18(1/2).