பிஸ்த் தோவாப்
பிஸ்த் தோவாப் (Doaba also known as Bist Doab), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாயும் சட்லஜ் ஆறு மற்றும் பியாஸ் ஆறுகளிடையே அமைந்த நீர் வளம் மற்றும் நில வளம் மிக்க பிரதேசம் ஆகும்.[1]பாரசீக மொழியில் தோவாப் எனபதற்கு இரு ஆறுகளிடையே அமைந்த நீர் வளம் மற்றும் வண்டல் மண் நிறைந்த நில வளம் மிக்க பகுதி எனப்பொருளாகும். [2] பிஸ்த் தோவாப் பிரதேசத்தில் பாயும் சட்லஜ் ஆற்றின் தெற்கில் மால்வா, மால்வா பகுதியும், பியாஸ் ஆற்றின் வடக்கில் மஜ்ஜா பகுதியும் உள்ளது. இப்பகுதியில் கோதுமை மற்றும் பாசுமதி நெல் அதிக அளவில் விளைகிறது.
பிஸ்த் தோவாப் பிரதேசத்தில் சீக்கியர்களுடன் பட்டியல் சமூத்தவர்கள 40% மேலாகவும் மற்றும் சைனி வகுப்பினர், ஜாட் மக்கள் மற்றும் கம்போ மக்களும் வாழ்கின்றனர். 1947-இல் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து இப்பகுதியில் குடியேறிய இந்து, சீக்கிய மக்கள் வாழ்கின்றனர்.[3]
பிஸ்த் தோவாப்பின் மாவட்டங்கள்
தொகுபிஸ்த் தோவாப் பிரதேசத்தில் பஞ்சாப் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் கீழ்கண்ட மாவட்டங்கள் உள்ளது.:[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Grover, Parminder Singh; Grewal, Davinderjit Singh (2011). Discover Punjab: Attractions of Punjab. self-published. p. 179.
- ↑ "GAZETTEER OF INDIA". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
- ↑ Gurharpal Singh; Darsham Singh Tatla (2006). Sikhs in Britain: The Making of a Community. London: Zed Books Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 1 84277 717 6.