பஞ்சாபி காக்ரா

பஞ்சாபி காக்ரா (பஞ்சாபி மொழி: ਘੱਗਰਾ) என்னும் உடையை பஞ்சாபி பெண்கள் அணிகின்றனர். தலையில் போர்த்திக் கொள்ளும் துணி, மேலே உடுத்திக்கொள்ளும் குர்த்தா, கீழே அணித்து கொள்ளும் காக்ரா, பேண்ட்/கால்சட்டை போன்ற சல்வார்/சுத்தன் ஆகிய நான்கும் சேர்ந்ததே இந்த உடை[1][2][3] இந்த உடையை அரியானா, [4]இமாச்சலப் பிரதேசம்[5] ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் அணிகின்றனர். இந்த உடையை அணிந்துகொண்டு கித்தா நடனம் ஆடுகின்றனர்[6].

பஞ்சாபி காக்ரா
பஞ்சாபி நடனமாடும் பெண்களின் உடை

புல்காரி

தொகு

தலையில் போர்த்திக் கொள்ளும் துணியை புல்காரி என்று அழைக்கின்றனர். இதில் விதவிதமான அலங்கார வடிவங்கள் வரையப்பட்டிருக்கும்.

குர்த்தா/குர்த்தி/அங்கி/சோளி

தொகு

பஞ்சாபியர் குர்த்தா எனப்படும் மேலாடையை அணிந்து கொள்கின்றனர்.[7]

நீளமான குர்த்தாவுக்கு பதிலாக நீளம் குறைந்த குர்த்தியை அணிவதும் உண்டு.[8]

மார்பகங்களை மட்டும் மறைக்கும் ரவிக்கை/ஜாக்கெட் போன்ற உடையை அங்கி என்றும், சோலி என்றும் அழைக்கின்றனர். இந்த உடை வயிற்றை மறைக்காது.[9] அங்கியை மட்டும் அணிந்தால் அதற்கு சோலி என்று பெயர்.[10]

சோளியை பட்டுத்துணியால் நெய்வதும் உண்டு. இந்த துணி பல நிறங்களில் விற்பனையாகிறது[11]

காக்ரா

தொகு
 
Saraiki Tradition women wearing ghagra west Punjab

காக்ராவை பட்டுத் துணியிலோ, முஸ்லின் என்ற துணியிலோ நெய்கின்றனர். இது 9 முதல் 25 யார்டு நீளம் இருக்கும்.[12]பஞ்சாபை சேர்ந்த அனைத்து மத பெண்களும் காக்ராவை அணிகின்றனர்.[13]

இந்த துணியில் எம்பிராய்டரி எனப்படும் அழகு வேலைப்பாடுகளை காணலாம்.

சுத்தன்/சல்வார்

தொகு

காக்ராவுக்கு கீழே சுத்தன்/சல்வார் எனப்படும் ஆடைகளை அணிகின்றனர். பண்டிகை காலத்திலும், இழவு வீடுகளுக்குச் செல்லும் போதும், பெண்கள் காக்ரா அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.[14]

படங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. Punjab District Gazetteers: Ibbetson series, 1883-1884
  2. Biswas, Arabinda (1985) Indian Costumes
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-05-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
  4. Chaudhry, Nazir Ahmad (2002) Multan Glimpses: With an Account of Siege and Surrender [1]
  5. Mehta, Parkash and Kuma, Anjala (1990) Page 19 Poverty and Farm Size in India: A Case Study [2]
  6. "Nrityabhakti.com". Archived from the original on 2017-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
  7. Gazetteer of the Hoshiarpur District: 1883-84. Sang-e-Meel Publications, 2001.[3]
  8. Punjab District Gazetteers: Rawalpindi District (v. 28A) (1909)
  9. Punjab gazetteers, 1883, bound in 10 vols., without title-leaves
  10. Gazetteer of the Jalandhar District 1884
  11. Gazetteer of the Muzaffargarh District 1884
  12. Eh Mera Punjab
  13. Punjab District Gazetteers Volume VII Part A Multan District 1923-1924
  14. Punjab District Gazetteers: Rupnagar 1987
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_காக்ரா&oldid=3650298" இலிருந்து மீள்விக்கப்பட்டது