பஞ்ச ஈஸ்வரங்கள்
பஞ்ச ஈஸ்வரங்கள் என்பன சிவபெருமானுக்காக இலங்கையில் கட்டப்பட்டுள்ள கோவில்களாகும். இவ்வீஸ்வரங்கள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் அமைந்திருக்கின்றன. இராவணன் காலத்திலேயே இவ்வீஸ்வரங்கள் கட்டப்பட்டு விட்டன என்பது மக்களிடையே காணப்படும் தொன்நம்பிக்கை ஆகும். இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை போர்த்துக்கீசர் கைப்பற்றி இலங்கையைத் தம்முடைய காலனித்துவ நாடாக மாற்றிய காலப்பகுதியில் இவ்வீஸ்வரங்களை இவர்கள் அழித்துச் சேதம் விளைவித்தனர். 1917 ஆம் ஆண்டில் ரோயல் ஏசியாட்டிக் கூட்டத்தின் போது டாக்டர். பவுல். ஈ. பீரிஸ் கீழுள்ளவாறு குறிப்பிட்டார்:
“ | விசயனின் வருகைக்கு முன்பே இந்திய வழிபாட்டு அம்சத்தைக் கொண்டுள்ள பஞ்ச ஈஸ்வரங்கள் காணப்பட்டன". | ” |
பஞ்ச ஈஸ்வரங்களின் பட்டியல்
தொகுபெயர் | படிமம் | திசை | மாவட்டம் | தகவல் |
---|---|---|---|---|
நகுலேஸ்வரம் | வடக்கு | யாழ்ப்பாணம் | கீரிமலைக் கோவில் என இது அழைக்கப்படுகின்றது. | |
திருக்கேதீச்சரம் | வடமேற்கு | மன்னார் | 274 பாடல் பெற்ற சிவ்வாலயங்களுள் இவ்வாலயமும் ஒன்றாகும். | |
திருக்கோணேச்சரம் | கிழக்கு | திருக்கோணமலை | 274 பாடல் பெற்ற சிவ்வாலயங்களுள் இவ்வாலயமும் ஒன்றாகும். கயிலை மலைக்கு சரியாக தெற்குப்பகுதியில் (நெடுங்கோட்டடிப்படையில்) அமைந்திருப்பதால் "தென் கைலாயம்" என் இது அழைக்கப்படுகின்றது[1] | |
முன்னேசுவரம் | மேற்கு | புத்தளம் | இராமர் இத்தலத்தில் இராவணனைக் கொன்ற தோசத்தை நீக்கிக்கொண்டார். | |
தொண்டீசுவரம் | தெற்கு | மாத்தறை | கட்டடக் கலைவடிவத்தில் மற்றைய ஈஸ்வரங்களுடன் ஒப்பிடுகையில் இது முற்றிலும் வேறுபடுகிறது. |
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2014-12-05 at the வந்தவழி இயந்திரம் Ceylontoday (2014-01-26 02:05:00).