படூர் (ஆங்கில மொழி: Padur, Kanchipuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

படூர்
Padur, Kanchipuram

படூர்
புறநகர்ப் பகுதி
படூர் Padur, Kanchipuram is located in தமிழ் நாடு
படூர் Padur, Kanchipuram
படூர்
Padur, Kanchipuram
படூர், காஞ்சிபுரம் மாவட்டம் (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 12°48′28″N 80°13′33″E / 12.807700°N 80.225800°E / 12.807700; 80.225800
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
ஏற்றம்31 m (102 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்603 103
அருகிலுள்ள பகுதிகள்சிறுசேரி, நாவலூர், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, திருவிடந்தை மற்றும் கோவளம்
மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர். எம். ஆர்த்தி, இ. ஆ. ப.
இணையதளம்https://kancheepuram.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள படூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12°48′28″N 80°13′33″E / 12.807700°N 80.225800°E / 12.807700; 80.225800 ஆகும். இந்தியாவின் சர்வதேச தொழில்நுட்பப் பூங்காக்களில் ஒன்றான சிறுசேரி பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே படூர் அமையப் பெற்றுள்ளது.[2][3] சிறுசேரி, நாவலூர், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, திருவிடந்தை மற்றும் கோவளம் ஆகியவை படூர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

படூர் பகுதியில் இந்துஸ்தான் சர்வதேச பள்ளி ஒன்று அமைந்துள்ளது.[4] மேலும், இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றும் படூரில் நிறுவப்பட்டுள்ளது.[5]

சுப்ரீம் பல்நோக்கு மருத்துவமனை ஒன்று படூரில் சேவைகள் செய்து கொண்டிருக்கிறது.[6]

இங்குள்ள கிருஷ்ணசாமி என்கிற பெருமாள் கோயில்[7] மற்றும் பழண்டியம்மன் கோயில்[8] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Liffy Thomas (2021-09-25). "Wake up Padur!". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  2. Sathik Basha (2022-12-23). "Poor administration turns Padur roads into accident hot spots". Citizen Matters, Chennai (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  3. Jayanthi Jacob (2016-10-07). "Residents of Padur on OMR raise their voices against dumping". Citizen Matters, Chennai (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  4. "Contact us now for Admissions in Hindustan Schools" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  5. "HITS-Contact". hindustanuniv.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  6. "Supreme Multi-speciality Hospitals Omr Padur". www.supremehospitals.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  7. "Arulmigu Krishanaswamy @ Perumal Temple, Padur - 603107, Kancheepuram District [TM002945].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  8. "Arulmigu Pazhandiamman Temple, Padur - 603107, Kancheepuram District [TM002952].,pazhandiyamman,pazhandiyamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படூர்&oldid=3663614" இலிருந்து மீள்விக்கப்பட்டது