பட்டனேசு (Batanes) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், ககயன் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பசுகோ ஆகும். இம்மாகாணத்தில் 29 கிராமங்களும், 6 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர்மரிவோல் கைகோ (Marilou Cayco) ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக பட்டனேசு மாகாணத்தின் சனத்தொகை 17,246 ஆகும்.[2] இதன் மொத்த நிலப்பரப்பளவு 219.01 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் இறுதி மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையிலும் இறுதி மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.

பட்டனேசு
மாகாணம்
மாகாணச் சின்னம்
மாகாணச் சின்னம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்ககயன் பள்ளத்தாக்கு
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டனேஸ்&oldid=3561554" இலிருந்து மீள்விக்கப்பட்டது