பணம்பாக்கம்

கிராமம் , திருவள்ளூர்

பனம்பாக்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இந்த கிராமம் சென்னையின் புறப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகில் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் நகரம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது.

பனம்பாக்கம்
புறநகர்
பனம்பாக்கம் is located in தமிழ் நாடு
பனம்பாக்கம்
பனம்பாக்கம்
பனம்பாக்கம் is located in இந்தியா
பனம்பாக்கம்
பனம்பாக்கம்
ஆள்கூறுகள்: 13°05′12″N 79°49′57″E / 13.08661°N 79.83242°E / 13.08661; 79.83242
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
தாலுகாதிருவள்ளூர்
மாநகரம்சென்னை
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீடு
631 203
தொலைபேசி குறியீடு044-2765
வாகனப் பதிவுTN-20-xxxx
நாடாளுமன்ற தொகுதிதிருவள்ளூர்
சட்டமன்ற தொகுதிதிருவள்ளூர்

தொடர்பு

தொகு

இந்த கிராமம் திருவள்ளூர் மற்றும் அரக்கோணத்திற்கு இடையே அமைந்துள்ளது. செஞ்சி பணம்பாக்கம் இரயில் நிலையத்தின் மூலம் இவ்வூர் சென்னை புறநகர் இருப்புவழியில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரின் முக்கிய போக்குவரத்து தொடர்பாக இரயில்வே உள்ளது. இது சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதை[1] தடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தினை அடைய சுமார் 90 நிமிடங்கள் பயணம் செய்யவேண்டும். இந்த கிராமம் புறநகர் இரயில் மூலம் சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை, வேளச்சேரி, பெரம்பூர், ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மக்கட்தொகை

தொகு

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த ஊரானது 365.34 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஊரின் மொத்த மக்கட்தொகை 915 ஆகும். இதி 466 பேர் ஆண்களாவர்; 449 பெண்களாவர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Senji Panambakkam Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018.
  2. https://villageinfo.in/tamil-nadu/thiruvallur/thiruvallur/panambakkam.html. பார்த்த நாள்: 27.09.2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=பணம்பாக்கம்&oldid=3746169" இலிருந்து மீள்விக்கப்பட்டது