பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்

பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள் இலக்கிய, தொல்லியல், கல்வெட்டு, நாணய ஆய்வியல் மூலம் அறியப்படுகின்றது. இவற்றில் சங்க இலக்கியம் மிக முக்கியமானதாகும். இது பொ.ஊ.மு. பிற்கால இறுதி நூற்றாண்டு காலம் தொடக்கம் பொ.ஊ. ஆரம்ப காலப் பகுதிக்குரியதாகும். சங்க இலக்கிய செய்யுள்கள் பண்டைய தமிழகச் சமூகம் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் வேறுபட்ட பகுதிகளை வருணணை விளக்கமாக கொண்டுள்ளது. இவற்றின் பல பகுதிகளை ஆய்வாளர்கள் நம்பகமான விபரங்கள் என ஏற்றுக் கொள்கின்றனர். கிட்டத்தட்ட கிறித்தவ கால வளர்ச்சி ஏற்பட்ட காலப்பகுதி கிரேக்க உரோம இலக்கியங்கள் தமிழகத்திற்கும் உரோமைப் பேரரசுக்கும் இடையிலான கடல் வாணிபம் பற்றிய, தமிழ் நாட்டின் கரையோர பல துறைமுகங்களின் பெயர்கள் மற்றும் இடங்கள் உட்பட்ட விபரங்களைத் தருகின்றன.

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளாய்வு அகழ்வுகள் சங்க கால எச்சங்களான பல்வகை மட்பாண்டங்கள், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், தருவிக்கப்பட்ட மட்பாண்ட பொருட்கள், தொழிற்சாலைப் பொருட்கள், செங்கல் கட்டமைப்புக்கள், சுற்றும் திருகுச்சுருள் ஆகியவற்றை வெளிப்படுத்தியது. பாறைப்படிவியல், பண்டையெழுத்துமுறை நுட்பங்கள் போன்றவை சங்ககால அப்பொருட்களின் காலத்தைக் கணிக்க உதவியது. அகழ்ந்தெடுக்கப்பட்ட செயற்கைப் பொருட்கள் சங்க இலக்கியம் குறிப்பிடும் வேறுபட்ட பொருளாதார செயற்பாடுகளான விவசாயம், நெசவு, கொல்லர் வேலை, இரத்தினக் கற்கள் பட்டை தீட்டல், கட்டட கட்டுமானம், முத்து அகழ்வு, ஓவியம் ஆகியவற்றின் இருத்தலுக்கான சான்றை வழங்குகின்றது.

குகைகளிலும் மட்பாண்டங்களிலும் காணப்பட்ட எழுத்துப் பொறிப்புக்கள் தமிழக வரலாறு பற்றி கற்றுக் கொள்வதற்கான இன்னுமொரு மூலமாகும். கேரளம், தமிழ்நாடு, இலங்கை மற்றும் எகிப்து, தாய்லாந்து ஆகிய இடங்கள் பலவற்றில் தமிழ்ப் பிராமியிலான எழுத்துக்கள் காண்டுபிடிக்கப்பட்டன.[1] இவற்றில் அதிகமானவை அரசர்களாலும் மக்கள் தலைவர்கள் அல்லது தளபதிகளாலும் உருவாக்க அனுமதிக்கப்பட்டிருந்தன. சங்க சமூகத்தினாலும் ஏனைய விடயங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இக்கால தமிழ் அரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் அவர்களின் அரசின் நகர் மத்தி மற்றும் ஆற்றுப்படுக்கையிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டன. பல நாணயங்கள் அவற்றின் பின்புறத்தில் அரச சின்னத்தைக் கொண்டிருந்தன. சேரர் சின்னமான அம்பும் வில்லும் போன்றன சின்னங்கள் குறிப்பிடத்தக்கன. சில உருவப்படத்தையும் எழுத்துப் பொறிப்பையும் கொண்டிருந்ததன் மூலம் நாணய ஆய்வியலாளர்கள் அதன் காலத்தைக் கண்டுபிடிக்க உதவின.

தமிழில் இலக்கிய மூலங்கள்

தொகு

பண்டைய தமிழ் வரலாற்று மிக முக்கிய மூலம் தமிழ் செய்யுள்களாகும். இது பொதுவாக முன் கிறித்தவ கால கடைசி நூற்றாண்டு முதல் ஆரம்ப கிறித்தவ கால வரையென கருதப்படுகின்றது.[2][3][4] இது 2,381 அறியப்பட்ட செய்யுட்களை 50,000 மேற்பட்ட வரிகளுடன் 473 புலவர்களால் எழுதப்பட்டது.[5][6] ஒவ்வொரு செய்யுளும் அகம் அல்லது புறம் என்ற இரண்டில் ஓர் வகைக்கு உட்பட்டது. அகம் மனித உள்ளுணர்வுகளான காதல் பற்றியும் புறம் வெளி அனுபவங்களான சமூகம், கலாச்சாரம், போர் பற்றியும் கூறுகின்றது. பண்டைய தமிழ் நாட்டு வாழ்வின் பல்வேறுபட்ட பண்பு பற்றி அதன் உள்ளடக்கம் விபரிக்கின்றது. மங்குடி மருதனாரின்மதுரைக் காஞ்சி மதுரை பற்றிய முழு விபரத்தையும் மூன்றாம் நெடும் செழியனின் பாண்டிய நாட்டு ஆட்சி பற்றிக் குறிப்பிடுகின்றது.[7] நக்கீரரின் நெடுநல்வாடை அரச அரண்மனை பற்றிக் குறிப்பிடுகின்றது. புறநானூறு மற்றும் அகநானூறு பல அரசர்களைப் புகழ்ந்து பாடும் செய்யுள்களாகவும் அரசர்களாலேயே புனையப்பட்டதாகவும் காணப்படுகின்றது. சங்க கால தொகைநூல் பதிற்றுப்பத்து சேரர்களின் மூன்று அல்லது நான்கு சந்ததி வமிசவழி பற்றியும் சேர நாடு பற்றியும் பொதுவாகக் குறிப்பிடுகின்றது. சேர அரசன் சேரல் இளம்பிறை அரசேற்றபோது, பலராலும் எழுதப்பட்ட ஐங்குறுநூறு கூடலூர் கிழாரினால் தொகுக்கப்பட்டது. சேர அரசர்களின் வேறு செயல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவற்றில் விபரிக்கப்பட்டுள்ளது.[8] பட்டினப் பாலை சோழர்களின் துறைமுகப் பட்டணமான காவிரிப்பூம்பட்டினம் பற்றி விரிவாகக் குறிப்பிடுகின்றது. இது துறைமுகத்திற்கு வந்த ஈழத்து உணவு பற்றிக் குறிப்பிடுகின்றது. புகழ்பெற்ற சங்ககாலப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதன்தேவனார் பற்றி அகநானுறு 88, 231, 307; குறுந்தொகை: 189, 360, 343 மற்றும் நற்றிணை: 88, 366 குறிப்பிடுகின்றன.

வரலாற்று பெறுமதிமிக்க சங்க செய்யுள்கள் 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டு அறிஞர்களால் விமர்சனத்துடன் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

அகழ்வாய்வுச் சான்றுகள்

தொகு

தமிழகத்தில் அத்திரம்பாக்கம், ஆதிச்சநல்லூர், சாயர்புரம், மைசூரின் பிரம்ம கிரி, கோவை மாவட்டமப் பெருங்கற்குழிகள், சித்தூர் மாவட்டப் பையம்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டத் தாயினிப்பட்டி, வட ஆர்க்காடு வட்டம் கரிக்கந்தாங்கல், செங்கற்பட்டு வட்டம் குன்னத்தூர் போன்ற இடங்களிலும் இன்னும் தமிழகத்தின் பல இடங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருள்களிலிருந்து தமிழ் பண்பாட்டின் தொன்மை, வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து இருந்து வருவதை அறியலாம்

குறிப்புகள்

தொகு
  1. Mahadevan, Iravatham (2010-06-24). "An epigraphic perspective on the antiquity of Tamil". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/opinion/op-ed/article482654.ece. 
  2. Subrahmanian. p. 22. {{cite book}}: Missing or empty |title= (help)
  3. Sharma, TRS (2000). Ancient Indian Literature: An Anthology. Vol III. Sahitya Academy, New Delhi. p. 43.
  4. "Cankam literature". The Encyclopædia Britannica 2. (2002). 802. 
  5. Rajam, V. S. 1992. A reference grammar of classical Tamil poetry: 150 B.C.-pre-fifth/sixth century A.D. Memoirs of the American philosophical society, v. 199. Philadelphia, Pa: American Philosophical Society. p12
  6. Dr. M. Varadarajan, A History of Tamil Literature, (Translated from Tamil by E.Sa. Viswanathan), Sahitya Akademi, New Delhi, 1988 p.40
  7. Sastri. A History of South India from Prehistoric Times to the Fall of Vijayanagar. p. 127.
  8. Krishnamurthy. p. 59. {{cite book}}: Missing or empty |title= (help)

வெளி இணைப்புகள்

தொகு