பண்டைய லிபியா

நைல் நதி பள்ளத்தாக்கிற்கு மேற்கே உள்ள பகுதி

பண்டைய லிபியா (Ancient Libiya) நைல் நதி பாயும் பண்டைய எகிப்திற்கு மேற்கே, அட்லசு மலைத்தொடருக்கு கிழக்கே, மத்திய தரைக் கடலின் கிரீட் தீவிற்கு தெற்கே அமைந்த பிரதேசம் ஆகும்.

உலக வரலாற்றாளர் எரோடோட்டசு வரைந்த ஐரோப்பா வரைபடத்தில் பண்டைய லிபியாவின் அமைவிடம்
பண்டைய லிபியாவின் சப்ரதா தொல்லியல் களம்

எலனியக் காலத்தில் பெர்பர் மக்களை கிரேக்கர்கள் லிபியர்கள் என்றும்,[1]அவர்கள் வாழ்ந்த பகுதியை லிபியா என்றும் அழைத்தனர். பண்டைய லிபியர்கள் சிவி மொழி மற்றும் பெர்பெர் மொழிகளைப் பேசினர்.

வரலாறு தொகு

எகிப்தை ஆண்ட லிபியாவின் மெஸ்வெஷ் மக்கள் தொகு

எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் எகிப்தைக் கைப்பற்றிய, பண்டைய லிபியாவின் பெர்பர் மக்களின் ஒரு பிரிவினரான மெஸ்வெஷ் மக்கள் 22-ஆம் வம்சத்தினராக கீழ் எகிப்து (வடக்கு எகிப்து) மற்றும் நடு எகிப்து பகுதிகளை ஆண்டனர். மேலும் லிபியாவின் மெஸ்வெஷ் மக்கள் 23-ஆம் வம்சத்தினராக மேல் எகிப்தை (தெற்கு எகிப்து) ஆண்டனர். பண்டைய லிபியாவின் மெஸ்வெஷ் மக்கள் எகிப்தை கிமு 943 முதல் கிமு 728 முடிய 215 ஆண்டுகள் தனீஸ், ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா மற்றும் தீபை நகரங்களை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

மேற்கோள்கள் & அடிக்குறிப்புகள் தொகு

  1. Oliver, Roland & Fagan, Brian M. (1975) Africa in the Iron Age: c. 500 B.C. to A.D. 1400. Cambridge: Cambridge University Press; p. 47

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_லிபியா&oldid=3211343" இலிருந்து மீள்விக்கப்பட்டது