பதார் பள்ளிவாசல்
இந்தியப் பள்ளிவாசல்
பதார் பள்ளிவாசல் (Pathar Mosque) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள பழைய நகரமான சிறீநகரில் அமைந்துள்ளது. உள்ளூரில் இதை நேவ்மசீத் என்று அழைக்கிறார்கள்.இப்பள்ளிவாசல் முகலாயர் காலத்தில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. சீலம் ஆற்றின் இடது கரையில் காங்கா-இ-மௌலா சன்னதிக்கு எதிரே[1] அமைந்துள்ள இப்பதார் பள்ளிவாசலை பேரரசர் சகாங்கீரின் மனைவியான முகலாய பேரரசி நூர் சகான் 1623 ஆம் ஆண்டில் கட்டினார்.[2]
பதார்பள்ளிவாசல் Pathar Mosque | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சிறிநகர், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 34°05′31″N 74°48′21″E / 34.09194°N 74.80583°E |
சமயம் | இசுலாம் |
மண்டலம் | காஷ்மீர் பள்ளத்தாக்கு |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | சிறீநகர் |
செயற்பாட்டு நிலை | இயங்குகிறது |
காசுமீர் பள்ளத்தாக்கிலுள்ள மற்ற பள்ளிவாசல்களிலிருந்து வேறுபட்ட சில தனித்துவமான அம்சங்கள் பதார் பள்ளிவாசலில் உள்ளன. மற்ற பள்ளிவாசல்களைப் போல, இதற்கு பாரம்பரிய பிரமிடு கூரை இல்லை.மேலும் இங்கு ஒன்பது அலங்கார வளைவுகள் உள்ளன. மையமான வளைவு மற்ற வளைவுகளைவிட பெரியதாகும்.[3][4] பள்ளிவாசல் அழகான தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lawrence, W.R., The Valley of Kashmir, p. 37, கூகுள் புத்தகங்களில்
- ↑ "Pathar Masjid-Kashmir Tourism".
- ↑ Feisal Alkazi, Srinagar: An Architectural Legacy, p. 91, கூகுள் புத்தகங்களில்
- ↑ "A Desecrate Mosque".
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் சிறீநகர் பதார் பள்ளிவாசல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.