பத்தூர் விசுவநாத சுவாமி கோயில்

திருவாரூர் மாவட்டக் கோயில்

பத்தூர் விசுவநாத சுவாமி கோயில் அல்லது பாத்தூர் விசுவநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கொடச்சேரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் அருகே உள்ள பத்தூர் (இவ்வூர் பாத்தூர் என்றும் குறிக்கப்படுகிறது) என்ற ஊரில் உள்ள சிவன் கோயில் ஆகும்.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலைச் சுற்றி அலங்கார வளைவுடன் கூடிய மதில்சுவர் சூழ்ந்துள்ளது. மதில் சுவர்களுக்குள் இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முகப்பு மண்டபத்தில் அனுக்ஞை விநாயகரும், முருகரும் உள்ளனர். மேலும் முகப்புமண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் விசாலாட்சி அம்மன் உள்ளார்.

கருவறை கோட்டங்களில் பிள்ளையார், தென்முகன், இலிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை போன்றோர் உள்ளனர். பிரகாரத்தில் பிள்ளையார், முருகன், திருமகள் போன்ற தெய்வங்களுக்கு சிற்றாலயங்கள் உள்ளன. கோயில் வளாகத்தின் வடபுறத்தில் வில்வ மரத்தினடியில் சில நாகர்கள் உள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்கள், பைரவர் போன்றோர் உள்ளனர்.[1]

வழிபாடு

தொகு

இக்கோயிலில் ஒருகால பூசை நடக்கிறது.

கோயிலின் சிறப்பு

தொகு

இக்கோயிலுக்கு சொந்தமான நடராசர் சிலையை மீட்ட வழக்கான பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு என்பது ஒரு புகழ்பெற்ற வழக்கு ஆகும்.[2] இக்கோயில் குறித்து சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடியுள்ளார் என்ற கருத்து உள்ளது.

சுந்தரர் பாடிய பதிகம்

“பத்தூர் புக்கிரந்துண்டு பலபதிகம் பாடிப்

பாவையரைக் கிறி பேசிப் படிறாடித்திரிவீர்

செத்தார்தம் எலும்பு அணிந்து சேஏறித்திரிவீர்

செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நாள் இரங்கீர்

முத்தாரம் இலங்கி மிளிர் மணி வயிரக்கோவை

அவை பூணத் தந்தருளி மெய்க்கினிதா நாளும்

கத்தூரி கமழ்சாந்தும் பணித்தருள வேண்டும்

கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே."

குறிப்புகள்

தொகு
  1. கடம்பூர் விஜயன், B. (2019-03-27). "பத்தூர் சிவன் கோயில் பற்றி தெரியுமா?". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  2. "சிலை சிலையாம் காரணமாம் - 5: பத்தூர் நடராஜர் வந்த கதை!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.