பத்தூர்
திருவாரூர் மாவட்ட சிற்றூர்
பத்தூர் அல்லது பாத்தூர் (Pathur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 613 703 ஆகும். இந்த ஊரானது பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது.
பத்தூர் பாத்தூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 613703 |
பெயராய்வு
தொகுநெல் வயல்களை பத்து என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. வயல்சார்ந்த ஊர் என்பதால் இது பத்தூர் என்ற பெயர்பெற்றது.[1]
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருவாரூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், குடவாசலில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் தஞ்சை - நாகை சாலையில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 572 என்றும், மொத்த மக்கள் தொகை 2,160 என்றும் உள்ளது. இதில் 1,120 ஆண்களும், 1,040 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ கடம்பூர் விஜயன், B. (2019-03-27). "பத்தூர் சிவன் கோயில் பற்றி தெரியுமா?". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
- ↑ "Pathur Village in Kodavasal (Thiruvarur) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.