பத்மராணி
பத்மராணி (Padmarani ) பத்மா ராணி என்றும் (25 ஜனவரி 1937 – 25 ஜனவரி 2016) அழைக்கப்படும் இவர், குஜராத்தி நாடகங்கள், குஜராத்தி திரைப்படங்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த இந்திய நடிகை ஆவார்.
பத்மராணி | |
---|---|
பிறப்பு | புனே, மகாராட்டிரம் | 25 சனவரி 1937
இறப்பு | 25 சனவரி 2016 மும்பை, மகாராட்டிரம் | (அகவை 79)
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | நாம்தர் இரானி |
பிள்ளைகள் | டெய்சி இராணி (மகள்) |
உறவினர்கள் | சரிதா ஜோஷி (சகோதரி) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபத்மராணி 1937ம் ஆண்டு, ஜனவரி 25 அன்று மகாராட்டிர மாநிலம் புனேவில் வசித்த ஒரு மராத்தியக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குசராத்தின் வடோதராவில் உள்ள ராஜ்மஹால் சாலையில் உள்ள கனாபி வாட், உஞ்சி போலில் வளர்ந்தார்.[1] இவரது தந்தை, பீம்ராவ் போஸ்லே, ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரது தாயார், கமலாபாய் ரானே, கோவாவைச் சேர்ந்தவர். இவரது சிறு வயதில் இவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. மேலும் குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டி, இவரும், இவரது சகோதரியும், பின்னர் மூத்த நடிகையான சரிதா ஜோஷியும் மேடையில் நடிக்கத் தொடங்கினர்.[2][3] வடோதராவின் தாண்டியா பஜாரில் உள்ள கோவிந்தராவ் மத்தியப் பள்ளியில், இவர் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.[1]
வடோதராவில் ரமன்லால் மூர்த்திவாலாவின் நாடகத்தில் நடித்தபோது அருணா இரானியின் தந்தை பரேதூன் இரானியின் பார்வை இவர்கள் மேல் விழுந்தது. அவர் இவர்களை மும்பைக்கு அழைத்துச் சென்றார். பத்மராணி தனது பதினெட்டாவது வயதில், ஜமீன்தாரும் பார்சி குடும்ப உறுப்பினரும் நாடக இயக்குநருமான அருணா இரானியின் மாமாவான நம்தார் இரானியை மணந்தார்.[3]
தொழில்
தொகுபத்மராணி 6,000 குஜராத்தி நாடக நிகழ்ச்சிகளில் நடித்தார். பா ரிடையர் தாய் சே, பா இ மாரி பவுண்டரி, கெவ்டா நா டாங்க், சப்தபதி, சந்தர்வோ, 5 ஸ்டார் ஆன்ட்டி மற்றும் வச்சான் உட்பட பல பிரபலமான நாடகங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். இவரது வாழ்க்கையின் இறுதி தசாப்தங்களில், பத்மராணி அதிகளவில் 'தாய்' கதாபாத்திரத்தில் முக்கிய வேடங்களில் நடித்தார். அமரி தோ அர்ஜீ பாக்கி தாமரி மர்ஜீ இவரது கடைசி நாடகம் ஆகும். இவர் பிரபல குஜராத்தி நடிகரான அரவிந்த் ரத்தோடுடன் 'பா ரிடையர் தாய் சே' உட்பட பல நாடகங்களில் பணியாற்றினார்.
இவர், 200க்கும் மேற்பட்ட குஜராத்தி படங்களிலும் நடித்துள்ளார். 1961 ஆம் ஆண்டு வெளியான நர்சையனி ஹண்டி திரைப்படம் இவரது முதல் குஜராத்தி திரைப்படமாகும் . 1963 இல், ஆஷா பரேக்க்குடன் இணைந்து அகண்ட் சௌபாக்யவதி படத்தில் நடித்தார். 1966 இல், பத்மராணி குஜராத்தி அரசரும் கவிஞருமான கலாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கலாபியில் நடித்தார். அதில் சஞ்சீவ் குமார் நடித்த கலாபியின் இளவரசி மனைவியாக நடித்தார். ஜனம்திப் (1969), பாட்லி பர்மர் (1978), உபேந்திர திரிவேதி, கங்காசதி (1979), லோகினி சகாய் (1980), கசும்பி நோ ரங், ஷமல் ஷா நோ விவா மற்றும் பகத் பீபாஜி (1980) உள்ளிட்ட பல வெற்றிகரமான குஜராத்தி படங்களில் நடித்தார். பகத் பீபாஜி, கவிஞர் பகத் பீபாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை ஆகும்.[1]
பத்மராணி தனது முக்கிய அறிமுகமான கன்யாதான் (1968) உட்பட சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதில் இவர் நன்கு பேசக்கூடிய ஆனால் உணர்திறன் கொண்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, பரிவார் (1968), வீர் கடோத்கஜ் (1970), ஜெய் சந்தோஷி மா (1975), தில் (1990) மற்றும் ஜாலிம் (1994) ஆகிய படங்களில் நடித்தார்.[2][3]
பெங்காலி நடிகர் அனில் சாட்டர்ஜி நடித்த இவரது தொலைக்காட்சித் தொடரான நகாப் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. இதில், வயதான நடிகருக்கு (சட்டர்ஜி) செவிலியராக இவர் நடித்தார். ஹிமேஷ் ரேஷ்மியாவின் மற்றொரு தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். மேலும், பத்மராணி ஸ்வப்னா கினாரே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 1000 அத்தியாயங்களுக்கு மேல் நடித்தார் என்று சொல்லப்படுகிறது.
இறப்பு
தொகுபத்மராணி தனது 79வது பிறந்தநாளான ஜனவரி 25, 2016 அன்று மும்பையில் தீநுண்மி தொற்று காரணமாக நுரையீரலில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து இறந்தார்.[2][3]
சொந்த வாழ்க்கை
தொகுபத்மராணிக்கும் நாம்தார் இரானிக்கும் டெய்சி இரானி என்ற மகள் இருந்தார். அவரும் நடிகையாக நடிக்கத் தொடங்கினார். திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் குடியேறினார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "જીવનની રમત પૂરી કરી 'બા રિટાયર્ડ થયા' પદ્મારાણીનો ઘરોબો વડોદરા સાથે હતો". Mumbai Samachar (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 10 February 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 2.2 Baker, Rachel (25 January 2016). "Veteran Gujarati actress Padmarani passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/gujarati/Veteran-Gujarati-actress-Padmarani-passes-away/articleshow/50719053.cms. பார்த்த நாள்: 26 January 2016.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 DeshGujarat (25 January 2016). "Noted Gujarati actress Padma Rani passes away". DeshGujarat. பார்க்கப்பட்ட நாள் 10 February 2016.