பத்மான் மாகாணம்
பேட்மேன் என்பது அனத்தோலியாவின் தென்கிழக்கில் ஒரு துருக்கிய மாகாணம். இது மே 1990 இல் உருவாக்கப்பட்டது, சட்ட எண் 3647 இன்படி கிழக்கு மாகாணமான சிரித்திலிருந்து சில பகுதிகளையும், தெற்கு மாகாணமான மார்தினிலிருந்து சில பகுதிகளையும் எடுத்துக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் மாகாணத்தின் மக்கள் தொகை 500,000 ஐ தாண்டியது. 1940 களில் தொடங்கிய எண்ணெய் இருப்பு மற்றும் எண்ணெய் உற்பத்தி காரணமாக இந்த மாகாணம் முக்கியமானது. பேட்மேனில் இருந்து துருக்கிய துறைமுகமான இசுகெண்தெருன் வரை 494 கி.மீ நீளமுள்ள எண்ணெய் குழாய் உள்ளது. பருத்தி இதன் முக்கிய விவசாய உற்பத்தியாகும். ஒரு ரயில் பாதை பேட்மேனை அருகிலுள்ள நகரங்களான தியர்பாகர், எல்சா மற்றும் தலைநகர் அங்காராவுடன் இணைக்கிறது. பேட்மேன் நதி இதன் வழியாக பாய்கிறது. பேட்மேன் , 246,700 என்ற மக்களை தொகை எண்னிக்கையைக் கொண்டுள்ள மாகாண தலைநகரம் ஆகும். ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியில் இந்த நகரமும் முக்கியமான இடமாக உள்ளது. இங்கு குர்து இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
வரலாறு
தொகுபேட்மேன் மாகாணத்தில் முக்கியமாக டைகிரிசு ஆறு அதன் பக்கங்களில் வளமான நிலங்களைக் கொண்டுள்ளது, அதே போல் ஏராளமான குகைகளைக் கொண்ட பாறை மலைகள் உள்ளன. ஆகையால், இது வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து, தொல்பொருள் சான்றுகளின்படி புதிய கற்காலம் பழைய கற்காலம் ஆகிய இருகாலங்களிலிருந்தே குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. மாகாணத்தில் குடியேற்றங்கள் பற்றிய முதல் ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் கிமு 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவை. இந்த சதுப்பு பகுதியில் ஒரு செயற்கை "தீவு" உருவாக்கப்பட்டது. இது "எலெகான்' என்று பெயரிடப்பட்டது, மேலும் கிமு 546 முதல் கிமு 352 இல் பேரரசர் அலெக்சாந்தர் படையெடுப்பு வரை 194 ஆண்டுகளாக ஒரு சுயாதீன அந்தஸ்தைக் கொண்டிருந்தது. பேட்மேன் மாகாணம் கி.பி 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு மத மையமாகவும் பைசாந்திய பேரரசின் ஒரு பகுதியாகவும் இருந்தது . 11 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் இது செல்யூக் பேரரசு மற்றும் அர்துகித்ஸ் ஆகியோரால் ஆளப்பட்டது, கசன்கைப் நகரம் பேட்மேன் மாகாணத்தின் ஒரு கலாச்சார மையமாகும், மேலும் இது 1981 ஆம் ஆண்டில் இயற்கை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது.[1]
கி.பி 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளில் இந்த மாகாணம் பட்டுப் பாதையின் புறக்காவல் நிலையமாக மாறியது. இது அசிரிய கிறித்துவர்களால் நிறைந்திருந்தது, மேலும் பக்தாத் யூதர்கள், மற்றும் ஆர்மீனியர்கள் ஆகியோரும் இருந்துள்ளனர், அவர்கள் கிமு 3 நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இப்பகுதியில் வாழ்ந்தனர். கிமு 95–55 ஆம் ஆண்டில் பேரரசர் டைக்ரேன்சு என்பவரால் இது கட்டப்பட்டது மற்றும் அவரது நினைவாக பெயரிடப்பட்டது.[2] கிமு 95–55 வரை ஆட்சி செய்த பேரரசர் டைக்ரேன்சு நினைவாக இப்பெயரிடப்பட்டது.[3]
மாவட்டங்கள்
தொகுஇந்த மாகாணம் 4,649 கி.மீ. 2 பரப்பளவைக் கொண்டுள்ளது [4] இது ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் 270 கிராமங்கள் உள்ளன.[5] தலைநகருக்கு தொழிலாளர்கள் வருவதன் விளைவாக நகரத்தின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது. 1990 மற்றும் 2000 க்கு இடையில், அதன் மக்கள் தொகை ஆண்டுக்கு 5% என்ற விகிதத்தில் உயர்ந்து கொண்டிருந்தது.[6] மொத்த மக்கள் தொகை 2010 இல் 510,200 ஆக இருந்தது, 373,388 பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர், பெரும்பாலும் தலைநகரில். இது 49.8% பெண்கள். நகரம் சராசரியாக 550 மீட்டர் உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது, இதில் பல ஆயிரக்கணக்கான குகைகள் உள்ளன. குறிப்பாக டைக்ரிசு ஆறு, பேட்மேன் போன்ற நதிகள் இந்நகரத்தின் வழியாக ஓடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க மலபாடி பாலம் ( 1146–1147 இல் கட்டப்பட்டது)[7]
எண்ணெய் தொழில்
தொகுபேட்மேன் மாகாணத்தில் எண்ணெய் தேடல் 1935 இல் தொடங்கப்பட்டது. ஏப்ரல் 20, 1940 அன்று, நகரத்திற்கு அருகிலுள்ள பேட்மேனின் தென்கிழக்கில் உள்ள ரமான் எண்ணெய் வயலில் 1048 மீட்டர் ஆழத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.[8] துருக்கியின் மிகப்பெரிய எண்ணெய் வயலாக விளங்கும் தினசரி சுமார் 7,000 பீப்பாய்களை உற்பத்தி செய்யும் பேட் ரமான் எண்ணெய் வயல் மூலம் பல எண்ணெய் வயல்கள் பின்னர் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.[9]
எண்ணெய் வயல்களின் வளர்ச்சியின் விளைவாக துருக்கிய மக்கள் பெரும்பான்மையாக குர்த் மக்கள் வசிக்கும் பேட்மேன் மாகாணத்தில் குடியேற்றப்பட்டனர். இது 1990 களில் இன மோதல்கள் அதிகரிக்க காரணமாயிற்று. 1992 மற்றும் 1993 க்கு இடையில் 180 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேட்மேன் நகர பகுதியில் அடையாளம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டனர்.[10]
குறிப்புகள்
தொகு- ↑ Hasankeyf பரணிடப்பட்டது 2011-12-23 at the வந்தவழி இயந்திரம், kultur.gov.tr
- ↑ Avdoyan, Levon. "Tiganocerta: The City 'Built by Tigranes'" in Armenian Tigranakert/Diarbekir and Edessa/Urfa. Richard G. Hovannisian (ed.) UCLA Armenian History and Culture Series: Historic Armenian Cities and Provinces, 6. Costa Mesa, California: Mazda Publishers, 2006, pp. 94–95.
- ↑ (ஆர்மேனிய மொழி) Hakobyan, Tadevos Kh. «Տիգրանակերտ» (Tigranakert). Armenian Soviet Encyclopedia. vol. xi. Yerevan: Armenian Academy of Sciences, 1986, pp. 699–700.
- ↑ Türkei, Europa auf einen Blick
- ↑ Balaban, Meltem Şenol Risk society and planning: the case of flood disaster management in Turkish cities. PhD Thesis. Graduate School of Natural and Applied sciences, Middle East Technical University 2009, p. 21
- ↑ The Characteristics Of The Population By Provinces, 2000 Population Census. City and Village Population, Annual Growth Rate of Population, Surface Area and Population Density By Districts பரணிடப்பட்டது 2018-11-14 at the வந்தவழி இயந்திரம். turkstat.gov.tr
- ↑ Batman. Coğrafya பரணிடப்பட்டது 2012-09-12 at the வந்தவழி இயந்திரம், kultur.gov.tr, 21 February 2007 (in Turkish)
- ↑ History of petroleum பரணிடப்பட்டது 2011-12-23 at the வந்தவழி இயந்திரம், tpao.gov.tr
- ↑ "Batman-Dörtyol Petrol Boru Hattı (Turkish)". BOTAŞ. Archived from the original on 2011-08-27. பார்க்கப்பட்ட நாள் 2011-02-12.
- ↑ Jonathan Rugman; Roger Hutchings (13 March 2001). Ataturk's Children. Continuum International Publishing Group. pp. 55–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-5490-4.