பந்துசுத்தான்
பந்துசுத்தான் (Bantustan) அல்லது பன்டு தாயகம், கறுப்பினர் தாயகம், கறுப்பினர் நாடு அல்லது சுருக்கமாக தாயகம் எனப்படும் நிலப்பகுதிகள் இனவொதுக்கல் கொள்கைப்படி தென்னாப்பிரிக்காவிலும் தென் மேற்கு ஆப்பிரிக்காவிலும் (தற்போதைய நமீபியா) கறுப்பின மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளாகும். தென்னாப்பிரிக்காவில் பத்து பந்துசுத்தான்கள் நிறுவப்பட்டிருந்தன. அடுத்திருந்த தென்மேற்கு ஆபிரிக்காவில் (அப்போது தென்னாப்பிரிக்க நிர்வாகத்தில் இருந்தது) பத்து பந்துசுத்தான்கள் நிறுவப்பட்டிருந்தன. ஒவ்வொரு குறிப்பிட்ட இனமக்களுக்கும் செறிவுபடுத்தப்பட்ட பந்துசுத்தான் உருவாக்கப்பட்டிருந்தன. இதனால் ஒவ்வொரு பந்துசுத்தானும் ஒரே இனத்தவர் வாழுமாறு அமைக்கப்பட்டிருந்தது. வெவ்வேறு கறுப்பின இனங்களுக்கு தனித்தனியான "தன்னாட்சி" பெற்ற நாட்டு மாகாணங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இவ்வாறு உருவாக்கப்பட்டது.
இச்சொற்றொடர் முதன்முதலில் 1940களின் பிற்பகுதியில் உருவானது; சில பண்டு மொழிகளில் பன்டு என்பதற்கு "மக்கள்" என்ற பொருள் இருந்தது; -ஸ்தான் என்ற பின்னொட்டு பாரசீக மொழியிலிருந்து "நாடு" என்ற பொருளுடன் பயன்படுத்தப்பட்டது. இச்சொல்லை இழிவுதரும் சொல்லாக "தாயக" அரசியலில் கருதப்பட்டது. இன்று, இச்சொல் "பந்துசுத்தான்", இழிசொல்லாகவே பயன்படுத்தப்படுகின்றது.
தென்னாப்பிரிக்காவின் நான்கு பந்துசுத்தான்கள்—டிரான்ஸ்கெய், போப்புதட்சுவானா, வெண்டா, சிஸ்கெய் (இவை "TBVC அரசுகள்" எனப்பட்டன)—தன்னாட்சி பெற்றவையாக அறிவிக்கப்பட்டன; ஆனால் தென்னாப்பிரிக்காவிற்கு வெளியே இது அலுவல்முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. தென்னாப்பிரிக்காவின் குவாசுலு, லெபோவா போன்ற பிற பந்துசுத்தான்களுக்கு பகுதியாக தன்னாட்சி வழங்கப்பட்டது, ஆனால் இவற்றிற்கு தன்னாட்சி வழங்கப்படவில்லை. தென்மேற்கு ஆபிரிக்காவில் ஓவம்போலாந்து, காவன்கோலாந்து, கிழக்கு கேப்ரிவி தன்னாட்சி பெற்றன.
இனவொதுக்கல் கொள்கை ஒழிக்கப்பட்ட பின்னர் தென்னாப்பிரிக்காவில் பந்துசுத்தான்கள் அழிக்கப்பட்டு மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
தென்னாப்பிரிக்கா அல்லாத பகுதிகளில் பயன்பாடு
தொகு"பந்துசுத்தான்" என்ற சொல் பொதுவாக இனஞ்சார்ந்து மாநிலங்களோ மண்டலங்களோ அமைக்கப்படும்போதும் அல்லது முற்படும்போதும் தென்னாப்பிரிக்கா அல்லாத பகுதிகளிலும் பயன்படுத்தபடுகின்றது. இது இனவொதுக்கலுடன் தொடர்புள்ளதால் பொதுவாக இப்பயன்பாடு இழிவான பொருளிலியே, விமரிசனத்தை முன்வைக்கும் நிலையில், பயன்படுத்தப்படுகின்றது.
தெற்காசியாவில், இலங்கையின் சிங்களவர் அரசு தமிழ் பகுதிகளை "பந்துசுத்தான்களாக" மாற்ற முற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.[1] இந்தியாவிலும் இச்சொல் தலித்களின் வாழ்விடத்தை குறிப்பிடுகையில் பயன்படுத்தப்படுகின்றது.[2]
தென்கிழக்கு ஐரோப்பாவில், யுகோசுலாவியாவின் பிளப்பிற்குப் பின்னதாக பால்கன் குடாவில் உருவாகிவரும் சிறு நாடுகள் பல நேரங்களில் "பந்துசுத்தான்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றன.[3]
கனடாவில் பெரும்பாலும் இனுவிட்டு மக்கள் வாழும் நூனவுட் நாட்டின் "முதல் பந்துசுத்தான், இனவொதுக்கல் அடிப்படையிலான இனக்குழுத் தாயகம்" என ஒட்டாவா சிட்டிசன் என்ற இதழ் குற்றஞ்சாட்டியுள்ளது.[4]
நோம் சோம்சுக்கி, பென் வைட்டு போன்ற எழுத்தாளர்கள் இசுரேல் அமைக்க முன்மொழியும் பாலத்தீன நாட்டைக் குறித்து "பந்துசுத்தான்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.[5][6]
இவற்றையும் காண்க
தொகு- தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்
- இந்திய ஒதுக்கீடு (ஐக்கிய அமெரிக்கா)
- இந்திய ஒதுக்கம் (கனடா)
- இனக்கருவறுப்பு
மேற்சான்றுகள்
தொகு- ↑ "The Tamil areas were on the one hand colonised, and on the other, by a policy of "benign neglect", turned into a backyard bantustan." Satchi Ponnambalam. Sri Lanka: The National Question and the Tamil Liberation Struggle, Chapter 8.3, Zed Books Ltd, London, 1983.
- ↑ "Gaurav Apartments came up 15 years ago as the realisation of the dream of Ram Din Rajvanshi to carve out secure, dignified residential space for dalit families that can afford to buy a two or three-bedroom flat rather than as a "bantustan" for low-caste people." Devraj, Ranjit. Dalits create space for themselves பரணிடப்பட்டது 2016-03-27 at the வந்தவழி இயந்திரம், Asia Times Online, 26 January 2005.
- ↑ "As a region where, during the last hundred years, all the modern political forms have been tried out, from empire to revolutionary republic, from multi-national federation to nation state to protectorate, a series repeated in the last century's decade as in an abridged, though not more successful edition, skipping revolutionary republic, while adding self-imposed bantustan." - Mocnik, Rastko. Social change in the Balkans பரணிடப்பட்டது 2016-03-09 at the வந்தவழி இயந்திரம், Eurozine, 20 March 2003. Accessed 16 June 2006.
- ↑ "The Mille Lacs Treaty Case is over, but don't stop fighting for what you believe in பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்", Ottawa Citizen
- ↑ "Bantustan Borders: Israel's Colonisation of the Jordan Valley and the security myth". Middle East Monitor. 6 November 2013.
- ↑ "Noam Chomsky: Israel's West Bank plans will leave Palestinians very little". CNN. 16 August 2013.