பனையபுரம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், பனையபுரம் ஊராட்சிக்குட்பட்ட வருவாய் கிராமம் ஆகும். இவ்வூரில் பொன்னையாறு பாய்கிறது. பனையபுரத்தில் புகழ்பெற்ற பனங்காட்டீஸ்வரர் கோயில்[1]மற்றும் திரௌபதியம்மன் கோயில்கள் உள்ளது. இதன் தொலைபேசி குறியீட்டு எண் 04146 மற்றும் அஞ்சல் சுட்டு எண் 605601, அஞ்சலகம் முண்டியம்பாக்கம் ஆகும். பனையபுரம் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் உப்டட்டது.

அமைவிடம்

தொகு

பனையபுரம் விழுப்புரத்திலிற்கு வடகிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும்; விக்கிரவாண்டிக்கு தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவிலும், முண்டியம்பாக்கத்திற்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பனையபுரம் அருகே அமைந்த நகரங்கள் விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி மற்றும் புதுச்சேரி ஆகும். பனையபுரம் அருகே அமைந்த தொடருந்து நிலையங்கள் விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ளது.

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனையபுரம்&oldid=3595973" இலிருந்து மீள்விக்கப்பட்டது