பன்னியர் ஆறு
பன்னியர் ஆறு (Panniyar River) இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியார் ஆற்றின் துணை ஆறாகும்.[1] இந்த ஆறு இடுக்கி மாவட்டத்தில் பாய்கிறது. மதிகெட்டான் தேசியப் பூங்காவின் மலைகளில் இருந்து உருவாகும் உச்சில்குத்திப்புழா, மதிகெட்டான் புழா, செம்மன்னார் மற்றும் நந்தர் புழா ஆகியவை பன்னியார் ஆற்றின் துணை ஆறுகள் ஆகும். பன்னியர் நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதியாக பொன்முடி அணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.[2] மின் உற்பத்திக்கு பின், பன்னியர் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பன்னியர் ஆற்றிலிருந்து வெளியேறும் நீரும், பொன்முடி அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரும் கல்லார்குட்டி அணையை வந்தடைகிறது.[3] பின்னர் இங்கிருந்து உடும்பஞ்சோலை, தேவிகுளம், கொத்தமங்கலம், மூவாட்டுப்புழா, குன்னத்துநாடு, ஆலுவா, கொடுங்கல்லூர், பரவூர் வழியாக பாய்கிறது . இடுக்கி மாவட்டத்தில் உள்ள இராசகுமாரி, இராசாக்காடு, சாந்தன்பாறை, சேனாபதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக பன்னியர் ஆறு உள்ளது.[4][5]
பன்னியர் ஆறு Panniyar River | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி மாவட்டம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Karnam, Nikitha (2020-10-25). "Visit The Best National Parks In Kerala". Travel.Earth (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.
- ↑ "PONMUDI DAM – KSEB Limted Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.
- ↑ "Understanding the 42-year-old Idukki dam which is now saving Kerala". Theprint.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.
- ↑ "Santhanpara panchayat comes to the rescue of Panniyar from slow death". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.
- ↑ "പന്നിയാര് പുഴ ഒഴുകി തുടങ്ങി. മാലിന്യം ഇല്ലാതെ..." ഹൈറേഞ്ച് വാര്ത്ത (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-03. Archived from the original on 2021-07-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.