பன்னேருகட்டா தேசியப் பூங்கா

பன்னேருகட்டா தேசியப் பூங்கா (Bannerghatta) இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது 2002 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்கா பெங்களூர் நகரத்திலிருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தேசியப் பூங்கா 104.27 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. பெங்களூரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பூங்காவில் இந்தியப் புலிகள், வெள்ளைப் புலிகள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பாலூட்டிகள் காணபடுகின்றன. இப்பூங்காவின் உள்ளே 30,000 சதுர மீட்டர்கள் பரப்பளவில் வண்ணத்துப் பூச்சிப் பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது.

பன்னேருகட்டா தேசியப் பூங்கா
Map showing the location of பன்னேருகட்டா தேசியப் பூங்கா
Map showing the location of பன்னேருகட்டா தேசியப் பூங்கா
பன்னேருகட்டா தேசியப் பூங்கா
அமைவிடம்கர்நாடகம், இந்தியா
அருகாமை நகரம்பெங்களூர்
பரப்பளவு104.27 சதுர கிலோமீட்டர்கள்
நிறுவப்பட்டது1974
நிருவாக அமைப்புவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு மற்றும் கர்நாடக அரசு
bannerghattabiologicalpark.org

புகைப்படங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு