பன்றி மீன்
மிலனில் உள்ள காட்சியகம் ஒன்றில் பன்றி மீன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
ஆக்டினோட்டெரிகீயை
வரிசை:
குடும்பம்:
கேப்ரோயிடே
பேரினம்:
கேப்ரோசு

இனம்:
கே. ஆபெர்
இருசொற் பெயரீடு
கேப்ரோசு ஆபெர்
(லின்னேயஸ், 1758)[2]

பன்றி மீன் (boar fish) என்பது கேப்ரோசு ஆபெர் எனப்படும் கேப்ரோயிடே (Caproidae) குடும்பத்தைச் சார்ந்த ஓர் சிற்றினமாகும். கேப்ரோயிடே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பேரினங்களுள் ஒன்றான கேப்ரோசு பேரினத்தின் ஒற்றைச் சிற்றினம் இதுவாகும்.[3]

உடலமைப்பு

தொகு

பன்றி மீனின் ஆண் வகையானது 13 செ.மீ முதல் 30 செ.மீ வரை வளரக்கூடியது. 85 கிலோ வரை எடை கொண்டது. பெண் மீன் ஆண் மீனை விட பெரியது. இந்த மீன்கள் பெரிய கண்கள், நீண்ட மூக்கு, நீண்ட வாய் மற்றும் விரிவடையும் போது பலமான குழாய் போன்ற வடிவம் கொண்டது.

இம்மீனின் உடலமைப்பானது மிகவும் ஆழமான நெருக்கமான சாய்சதுர வடிவமுடையது. முதுகுத் துடுப்பானது தனித்தும், வால் துடுப்பு நீளமாகவும் மற்றும் குவிந்த இலை வடிவத்திலும், கீழ்புறத் துடுப்புகள் மிகவும் நீளமாகவும் முதுகெலும்புகள் கொண்டதாகும் மற்றும் மார்பு துடுப்பு சற்றே சிறியதாகவும் இருக்கும்.

இதன் உடல் சிவப்பு ஆரஞ்சு வண்ணம் கொண்டது. சில நேரங்களில் மூன்று அழுத்தமான பட்டைகளைக் கொண்டது. ஒன்று கண்களுக்கு பின்புறமாகவும், மற்றொன்று உடம்பிற்கு மத்தியிலும் மற்றொன்று வால் மஞ்சரிகாபிலும் காணப்படுகிறது. இனப்பெருக்க காலத்தின் போது, பாலின இருநிலை வளர்ச்சி காணப்படுகிறது. அப்போது ஆணினத்தின் உடம்பானது வளைவான ஆரஞ்சு கோடுகளால் மூடப்பட்டும் முதுகு மற்றும் கீழ்புற துடுப்பு சிவப்பு நிறமாக மாறியும் காணப்படும். பெண் இன மீனின் உடம்பின் நடுப்பகுதியில் ஆரஞ்சு நிற அழுத்தமான பட்டைகள் காணப்படுகிறது மற்றும் வயிற்றுப் பகுதி மற்றும் கீழ்ப்புற துடுப்பின் அடிப்பகுதி வெள்ளை நிறம் கொண்டும் கீழ்ப்புற தடுப்பின் கடைசி பகுதி அடர்த்தியான ஆரஞ்சு நிறம் உடையதாகவும் காணப்படும். இவை ஓட்டு மீன்கள், இறால் மீன்கள், கடல் மீன்கள், கடல் முகட்டுப் புச்சிகள், மெல்லுடலிகள் ஆகியவைகளை உணவாக உட்கொள்கிறது.

பரவல்

தொகு

இந்தச் சிற்றினம் கிழக்கு அட்லாண்டிக் மத்திய தரைக்கடல், மேற்கு நார்வே, மேற்கு ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக மத்திய தரைக்கடலின் மேற்கு பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.

வாழ்விடம்

தொகு

இந்த இனம் கடலின் அடிப்பகுதியில் குறிப்பாக சேற்றின் அடிப்பகுதியிலும் பாறைகளின் அடிப்பகுதியிலும், பவளப்பாறைகளிலும் வசிக்கும். இரவு நேரங்களில் 700 மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்லும் திறனுடையது.

சான்றுகள்

தொகு
  1. NatureServe (2013). "Capros aper". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "WoRMS taxon details—Capros aper (Linnaeus, 1758)". World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 11-01-2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Capros aper (Linnaeus, 1758)". FishBase. பார்க்கப்பட்ட நாள் 11-01-2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்றி_மீன்&oldid=4052604" இலிருந்து மீள்விக்கப்பட்டது