பபேந்திர நாத் சய்கியா

சாகித்திய அகாதமி விருது பெற்ற அசாமிய எழுத்தாளர்

பபேந்திர நாத் சய்கியா (பிறப்பு:பெப்ரவரி 20, 1932; இறப்பு:ஆகஸ்டு 13, 2003) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இயற்பியலிலும், இலக்கியத்திலும் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். சாகித்திய அகாதமி விருது (1976) உட்பட பல இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது ஆக்கங்கள் வங்காளம், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது அக்னிஸ்நான் என்ற திரைப்படம் இவருக்கு பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. 2001 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.[1]

பபேந்திர நாத் சய்கியா (ভবেন্দ্ৰ নাথ শইকীয়া)
பிறப்புஅசாம், இந்தியா
இறப்புகவுகாத்தி, அசாம், இந்தியா
கல்விஇலக்கியம், இயற்பியல்
பணிஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
பிரீத்தி சய்கியா
வலைத்தளம்
http://www.bhabensaikia.com

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பபேந்திர_நாத்_சய்கியா&oldid=3387693" இலிருந்து மீள்விக்கப்பட்டது