பமீலா மல்கோத்ரா
பமீலா கேல் மல்கோத்ரா (Pamela Gale Malhotra) இந்தியாவில் வசிக்கும் ஒரு அமெரிக்க வனவிலங்கு சரணாலய உரிமையாளர். இவரது இப்பணிக்காக பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருதான, நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
பமீலா மல்கோத்ரா | |
---|---|
2017இல் பமீலா மல்கோத்ரா | |
பிறப்பு | பமீலா கேல் 1952கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
தேசியம் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
பணி | சரணாலய உரிமையாளர் |
அறியப்படுவது | வனவிலங்கு சரணாலயம் அமைத்ததற்காக நாரி சக்தி விருது பெற்றவர் |
வாழ்க்கைத் துணை | முனைவரனில் குமார் மல்கோத்ரா |
வாழ்க்கை
தொகுபமீலா கேல் 1952களில் நியூ செர்சியிலுள்ள ரெட் பேங்கில் பிறந்தார். [1] இவர் ஒரு இரவு உணவகத்தில் வேலை செய்யும் போது ஒரு இந்திய உணவக உரிமையாளரான் அனில்குமார் மல்கோத்த்ரா என்பவரைச் சந்தித்து திருமணம் செய்து கொண்டார். ஹவாயில் தங்கள் தேனிலவுக்கு சென்ற இவர்கள் அங்கு நிலங்களை வாங்கி அதை காடாக்கும் எண்ணம் இவர்களுக்கு இருந்தது. பின்னர் ஹவாயில் நிலங்களை வாங்க தொகை சேமிக்கப்பட்டன.
ஆனால் பின்னர், இவர்கள் ஹவாயை விட்டு வெளியேறி தங்கள் நிதியை இந்தியாவில் பயன்படுத்த முடிவு செய்தனர். இவர்கள் முதலில் இமயமலைக்குச் சென்றனர். ஆனால் இவர்களுக்கு அங்கு 12 ஏக்கர் நிலம் மட்டுமே வாங்க அனுமதிக்கப்பட்டது, எனவே இவர்கள் விலங்குகள் பாதுகாப்பு சரணாலயம் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி தென்னிந்தியாவுக்கு வந்தனர். [2]
இவர்களின் சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளில் வங்காளப் புலிகள், [2] ஆசிய யானைகள், [3] கழுதைப்புலி, காட்டுப்பன்றி, சிறுத்தைகள், கடமான் , இந்திய மலை அணில் ஆகியவை அடங்கும். [4]
2017ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாள் அன்று புது தில்லியில் இவருக்கு குடியரசுத் தலைவர் இல்லத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி நாரி சக்தி விருது வழங்கினார். [5] விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் சான்றிதழுடன், 100,000 ரூபாயும் கிடைத்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "24 Hours In Life Of Anil And Pamela Malhotra: Life In Lap Of Wilderness, Surrounded By Elephants | Outlook India Magazine". Outlook (India). பார்க்கப்பட்ட நாள் 2020-04-23.
- ↑ 2.0 2.1 "The Couple Who Bought Barren Land In 1991 And Transformed It Into A 300 Acre Wildlife Sanctuary". The Better India. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
- ↑ "Green Initiative". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 21 December 2015.
- ↑ The Outdoor Journal (12 February 2015). "Award-winning couple attempts to save India's rainforests by buying them up". The Outdoor Journal. Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Nari Shakti Awardees- | Ministry of Women & Child Development | GoI". wcd.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-21.