பயனர்:Harithamanohar/மணல்தொட்டி
இறகுப்பந்தாட்ட வீராங்கனை | |||||||||||||||||
குடியுரிமை | இந்தியர் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதக்கத் தகவல்கள்
|
மாளவிகா பான்சோடு (Malvika Bansod) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று பிறந்தார். மகாராட்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பான்சோடு தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகளின் இளையோர் மற்றும் முதியோர் பிரிவுகளில் பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். உலக இறகுப்பந்து வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள இவர் இந்தியாவின் சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.[1][2]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபான்சோடு மகாராட்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் பிறந்தார். மருத்துவர்களான திருப்தி மற்றும் பிரபோத் இவருடைய பெற்றோர்களாவர். தனது எட்டு வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பள்ளிப் படிப்பிலும் சிறந்த மாணவியாக விளங்கியுள்ளார். தனது 10-ஆம் வகுப்புத் தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றார். தேர்வுகளுக்குத் தயாராகும் போதும் கூட பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.[3]
தொழில்முறை சாதனைகள்
தொகு- பஞ்ச்குலா நகரத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான அனைத்திந்திய தரவரிசை இறகுப்பந்து போட்டியின் ஒற்றையர் பட்டம்.[4]
- நேபாளத்தின் காட்மாண்டு நகரத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டோருக்கான பிராந்திய இறகுப்பந்து போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற குழுவில் பான்சோடு அங்கம் வகித்தார்.[5]
- கேரள மாநிலம் கோழிக்கோடில் நடைபெற்ற அனைத்திந்திய தரவரிசைக்கான முதியோர் இறகுப்பந்து போட்டியில் மாளவிகா பான்சோடு வென்றார்.[6]
- கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்திந்திய தரவரிசை இளையோர் போட்டியில் மாளவிகா பான்சோடு வெற்றி பெற்றார்.[7]
- பல்கேரியாவில் நடைபெற்ற இளையோர் பன்னாட்டு சாம்பியன் பட்டத்திற்கான இறகு பந்து போட்டியில் மாளவிகா வெண்கலப் பதக்கம்.[8]
- மாலத்தீவுகளில் 2019 ஆம் நடைபெற்ற பன்னாட்டு பெண்கள் இறகுப்பந்து போட்டியில் மாளவிகா பான்சோடு சாம்பியன் பட்டம்.[9]
- 2019 ஆம் ஆண்டு நேபாள நாட்டின் அன்னபூர்ணா நேப்பாள் பன்னாட்டு பெண்கள் இறகுபந்து போட்டியில் மாளவிகா பான்சோடு பட்டம் வென்றார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ PTI. "Malvika Bansod: 'Need to gain strength and power to break into top 100'". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
- ↑ "Second consecutive title for Malvika Bansod". The Bridge (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2018-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Sportstar, Team. "Indian junior shuttlers win 3 gold, a silver and 2 bronze at Bulgarian Open". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 14 ஆகத்து 1995 பெங்களூர், கர்நாடகா, இந்தியா |
வசிப்பிடம் | பெங்களூர் |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
நிகழ்வு(கள்) | சுற்றுவழி மோட்டார் வாகனப் பந்தயம்/செப்பனிடப்படாத சாலை பந்தயம்/மோட்டார் கார் பந்தயம்]] |
ஐசுவர்யா பிசே (Aishwarya Pissay) இந்தியாவைச் சேர்ந்த மோட்டார் வாகனப் பந்தய வீர்ராவார். 1995 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 அன்று ஐசுவர்யா பிசே பிறந்தார். சுற்றுவழி மோட்டார் வாகனப் பந்தய வகை, கரடு முரடான செப்பனிடப்படாத சாலை மோட்டார் வாகனப் பந்தய வகைகளில் பிசே பங்கேற்று விளையாடுகிறார்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் உலக பட்டத்தை வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமை பிசேவுக்கு உண்டு. எப். ஐ. எம். பயாசு எனப்படும் பன்னாட்டு மோட்டார் பந்தய கூட்டமைப்பு நடத்திய உலகக் கோப்பை போட்டியில் டி.வி.எசு. நிறுவனத்தின் ஆதரவுடன் பங்கேற்ற பிசா, பெண்கள் பிரிவில் முதலிடத்தையும் இளையோர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். இப்போட்டியில் வெற்றி பெற 800-1000 கிலோமீட்டர் தூரம் வரை மாறுபட்ட நிலப்பரப்புகளில் இரண்டு நாட்கள் பயணிக்க வேண்டும்.
சுற்றுவழி மோட்டார் சைக்கிள் மற்றும் பொது சாலைவழி மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் சாம்பியன் பட்டம் பெற்ற முதலாவது இந்தியப் பெண் என்ற சிறப்பும் பிசேவைச் சேர்ந்ததாகும். தனது 18 ஆவது வயதில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் தனக்கிருந்த ஆர்வத்தைப் கண்டு கொண்ட பிசே தனது சொந்த ஊரான பெங்களூரைச் சுற்றி சிறிய சாலைப் பயணங்களை மேற்கொண்டார். இதன் விளைவாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சவாரி செய்யும் கலை நுட்பங்களைக் கற்று பந்தயங்களில் எவ்வாறு வெற்றிபெறலாம் என்பதைக் கற்றுக்கொண்டார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தேசிய பொதுசாலை வகை போட்டியிலும், தேசிய பொதுசாலை வகை சாம்பியன் பட்டப் போட்டியிலும் பங்கேற்று நான்கு தேசிய பட்டங்களை வென்றார். 2018 ஆம் ஆண்டில் தேசிய பொதுசாலை வகை சாம்பியன் பட்டப் போட்டியில் போட்டியிட்டு தேசிய பட்டம் வென்றார். [1] இதன் மூலம் பொழுது போக்கு மோட்டார் வாகன வீராங்கனையாக இருந்த பிசே தொழில் முறை வீர்ராக உருவெடுத்தார். 2018 ஆம் ஆண்டில் எசுப்பானியாவில் நடைபெற்ற பாயா அரகோன் உலக பொதுசாலை வகை சாம்பியன் பட்டப் போட்டியில் போட்டியிட்ட முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பிசா பெற்றார். [2]
பின்னணி
தொகுபள்ளிப் பருவத்திலிருந்தே பிசேவுக்கு மோட்டார் சைக்கிள் பந்தய வீர்ராகவேண்டும் என்ற கனவு இருந்தது. குடும்பம் சற்று பழமைவாதமானது என்பதால் பெண்கள் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் பங்கேற்பதை பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற பெண்களைப் போல பிசேவும் நன்றாகப் படித்து பணிக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
அந்நேரத்தில் நாட்டில் குறைந்த அளவிலேயே பெண்கள் மோட்டார் வாகனப் பந்தயங்களில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். பல எதிர்ப்புகளைத்தாண்டி தாயாரின் ஆதரவுடன் பிசே தன் கனவை நோக்கிய பயணத்தை தொடர்ந்தார்.
18 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். வார இறுதியில் நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் பயணங்கள் மேற்கொண்டார். பிசேவுக்கு எம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது, அது 24 நாட்களில் குசராத்திலிருந்து மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டமாகும். இதற்காக 8000 கிலோ மீட்டர் தூரத்தை, இருசக்கர வாகனத்தில் கடந்தார். 2017ஆம் ஆண்டு டி.வி.எசு. மோட்டார் நிறுவனத்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னர் பிசேவுக்கு தன்னம்பிக்கையும் குடும்பத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் அமையத் தொடங்கின.
தொழில் முறை சாதனைகள்
தொகு2016
தொகுபெங்களூரில் உள்ள அபெக்சு மோட்டார் பந்தய அகாடமியில் பயிற்சி பெற்ற பிசே 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி.வி.எசு. ஒன் மேக் சாம்பியன் பட்டப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார்.
2017
தொகுசியாட் நிறுவனம் நடத்திய சிப்ரிண்ட் மோட்டார் கார் போட்டியை வென்ற ஐசுவர்யா 2016 ஆம் ஆண்டு அபெக்சு மோட்டார் பந்தய அகாடமியிலும் 2017 ஆம் ஆண்டு கலிபோர்னியா சிறப்பு மோட்டார் சைக்கிள் பள்ளியிலும் பயிற்சி முடித்து பட்டம் பெற்றார். ஒரே ஆண்டில் இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டத்தையும், இந்திய தேசிய மோட்டார் கார் பந்தயத்தையும் வென்றார். [3][4] தக்சின் டேர் பிரிவு பி வகை மோட்டார் கார் பந்தயத்தில் மூன்றாவது இடமும் ரெய்டு டி இமாலாயா போட்டியில் நான்காவது இடத்தையும் பிசே வென்றார். ரெய்டு டி இமாலாயா போட்டியில் தொழில்முறை போட்டியாளர்கள் பங்கு பெறும் எக்சிட்ரீம் பிரிவு போட்டியில் போட்டித் தொலைவை முழுமையாக நிறைவு செய்த ஒரே பெண் என்ற சிறப்பைப் பெற்றார். [5] டி.வி.எசு. நிறுவனம் நடத்திய ஒன் மேக் சாலைவழி மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டத்தையும் இதே ஆண்டில் வென்றார். [6] டி.வி.எசு. நிறுவனம் பிசேவை தனது நிறுவன மோட்டார் வாகன வீர்ராக ஒப்பந்தம் செய்து கொண்டது.
2018
தொகு2018 ஆம் ஆண்டில் ஐசுவர்யா இந்திய தேசிய மோட்டார் கார் சாம்பியன் பட்டத்தை வென்றார். [1][7] எசுப்பானியாவில் நடைபெற்ற பாயா அரகோன் போட்டியில் கலந்துகொண்டு விபத்திற்குள்ளாகி போட்டியிலிருந்து விலகினார். [8]
விருதுகள்
தொகு2016 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவைச் சேர்ந்த டி.ஐ.இ நிறுவனத்தின் இளம் சாதனையாளர் விருது ஐசுவர்யாவுக்கு வழங்கப்பட்டது. [9] இதே ஆண்டில் இந்திய மோட்டார் வாகனப் பந்தய சங்கங்களின் கூட்டமைப்பு வழங்கும் சிறந்த மோட்டார் வாகன பந்தயப் பெண் என்ற விருதும் வழங்கப்பட்டது. [10] 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த மோட்டார் வாகன பந்தயப் பெண் விருதும் ஐசுவர்யாவுக்கே கிடைத்தது. ஆட்டோடிரக் என்ற மோட்டார் வாகனப் பத்திரிகை 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் விளையாட்டு வீர்ர் என்ற விருதை வழங்கி சிறப்பித்தது. [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Aishwarya Pissay is back to winning track".
- ↑ "Aishwarya Pissay To Become First Indian Woman To Participate In Baja Aragon Rally - NDTV CarAndBike".
- ↑ "Bengaluru's Aishwarya Pissay crowned National Champion in the Girls Stock upto 165cc class in Round 4 – FMSCI". www.fmsci.co.in.
- ↑ Reporter, Sports (9 September 2017). "Aishwarya clinches title with a round to spare" – via www.thehindu.com.
- ↑ "Aishwarya fourth in Raid de Himalaya". 14 October 2017 – via www.thehindu.com.
- ↑ "Aishwarya Pissay to be part of Sherco TVS Rally Factory squad at 2018 Baja Aragon - Overdrive". Overdrive.
- ↑ "TVS racings' R Nataraj wins the MRF rally of Nashik, Aishwarya wins the National Championship". 28 May 2018.
- ↑ "Pissay undergoes surgery after Baja Aragon crash - Cross-Country Rally News".
- ↑ "TiE-Aspire Young Achievers Awards 2016 honours three brave women". India Today.
- ↑ "FMSCI announces 2016 motorsport awards - Autocar India". www.autocarindia.com.
- ↑ chokhani, darshan. "Top Honours for Anindith Reddy in FMSCI Awards".
வாள்வீச்சு விளையாட்டு வீராங்கனை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | பவானி தேவி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முழு பெயர் | Chadalavada Anandha Sundhararaman Bhavani Devi. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 27 ஆகத்து 1993 சென்னை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | வாள்வீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மிகவுயர் உலக தரவரிசை | 36 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சந்தலவதா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி(C A Bhavani Devi) (பிறப்பு: ஆகஸ்ட் 27, 1993) , ஒரு இந்திய வாள்வீச்சு விளையாட்டு வீராங்கனை.[9] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சீனியர் காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் போட்டிகளில் வாள்வீச்சில் தங்கல் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி தேவி பெற்றுள்ளார். [8] கோ ஸ்போர்ட்ஸ் எனும் தொண்டு நிறுவனம், ராகுல் டிராவிட் தடகள வழிகாட்டுதல் திட்டத்தின் மூலமாக அவருக்கு உதவிகளை செய்துவருகிறது. [5]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுபவானி தேவி சென்னையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளந்தவர். இவரின் தந்தை ஒரு புரோகிதர்; தாயார் ஒரு இல்லத்தரசி. [9] சென்னையிலுள்ள முருகா தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் பவானி தேவி. அதன்பின் சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பயின்றார். 2004 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வாள்வீச்சு விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அவருக்கும் இது அறிமுகமானது. [1] 10 ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்ததும், இந்திய வாள்சண்டை பயிற்சியாளர் சாகர் லாகுவிடம் சேர்ந்து, கேரளாவின் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (எஸ்எஐ) மையத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். தனது பதினான்காம் வயதில் துருக்கியில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் முதல் முறையாக கலந்துகொண்டார். ஆனால் அப்போட்டிக்கு மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக அவருக்கு கருப்பு அட்டை வழங்கப்பட்டது. அப்பொழுதுதான் ஒவ்வொரு நிமிடத்தின் அருமையையும் உணர்ந்ததாக கூறுகின்றார் பவானி தேவி. [2] பல நேர்காணல்களில் வாள்வீச்சு ஆர்வலர்களை நிதி பற்றாக்குரை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து பேசியுள்ளார். அதே நிதி பற்றாக்குறையால் பவானியும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார். உதவித்தொகை வழங்க தகுந்த ஆதரவாளர்களை திரட்ட பவானியின் தாயார் கடினமாக முயற்சித்தார். அதன் மூலமாக பவானி தொடந்து பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்க முடிந்தது. [2] தன்னைப் போன்ற வீரர்கள் சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்க அரசாங்க ஆதரவு தேவை என்றும், இதனால் அவர்களின் விளையாட்டு ஒலிம்பிக்கில் போட்டியிடும் அளவிற்கு முன்னேறும் என்றும் வலியுறுத்துகிறார். ஆரம்ப காலகட்டத்தில், நிதி உதவி இல்லாததால் சர்வதேச போட்டிகளுக்கு, தன்னுடன் பயிற்சியாளரை அழைத்துச் செல்ல முடியாதநிலை பவானி தேவிக்கு ஏற்பட்டது. [1]
சாதனைகள்
தொகுபவானி தேவி ஆரம்ப காலகட்டத்தில் அணியாக விளையாடும் ஆட்டங்களில் பங்குபெற்று பதக்கங்களை வென்றார். 2009 ஆம் ஆண்டு, மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி, 2010 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஓபன் மற்றும் அதே ஆண்டு, பிலிப்பைன்ஸில் நடைபெற்ற கேடட் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வாள்வீச்சு அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 2012 ஆம் ஆண்டு, ஜெர்சியில் நடைபெற்ற ஜூனியர் காமன் வெல்த் சாம்பியன்ஷிப்பில் இந்திய வாள்வீச்சு அணி வெண்கலப் பதக்கம் வென்றபோது, ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை முதல் முறையாக வென்றார் பவானி தேவி. [8] 2014 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். [3] அதற்காக, தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, பவானி தேவி அமெரிக்காவில் பயிற்சி பெறுவதற்காக ரூபாய் மூன்று இலட்சம் வழங்கி கௌரவித்தார். அதன்பின், 2014 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற டஸ்கனி கோப்பையில் தங்கப்பதக்கம் வென்று அவரது வலிமையை நிருபித்தார். [8] 2015 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தடகள வழிகாட்டுதல் திட்டத்திற்கு, கோ ஸ்போர்ட்ஸ் எனும் தொண்டு நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து தடகள விளையாட்டு வீரர்களில் பவானி தேவியும் ஒருவர். [5] அந்த ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற 23 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பிலும், பெல்ஜியத்தில் நடைபெற்ற ஃப்ளெமிஷ் ஓபனிலும், வெண்கலப் பதக்கங்களை வென்றார். [8] ஐஸ்லாந்தின் தலைநகரமான ரெகவிக்யில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச வைக்கிங் கோப்பை வாள்வீச்சு போட்டியில் ஐந்தாவது இடம் பெற்றார். [6] 2017 ஆம் ஆண்டு, ஐஸ்லாந்தில் நடைபெற்ற டூர்னோய் செயற்கைக்கோள் டபிள்யூ சி வாள்வீச்சுப் போட்டியில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றார். 2018 ஆம் ஆண்டு, அதே போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றார். 2018 ஆம் ஆண்டு, கான்பெர்ராவில் நடந்த சீனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். [8] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டோர்னாய் சாட்டிலைட் வாள்வீச்சுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தற்போது உலக வாள்வீச்சு வீரர்களுக்கான தரவரிசையில் 45 ஆவது இடத்தில் உள்ளார். மேலும் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. [8]
சான்றாதரங்கள்
தொகுhttps://www.sportskeeda.com/fencing/tn-fencer-bhavani-battling-against-odds [1] https://www.newindianexpress.com/sport/2016/apr/13/Will-a-Fencers-Sabre-Strike-Gold-923647.html [2] https://www.newindianexpress.com/sport/2014/oct/13/Sword-of-Bhavani-Fetches-Asian-First-671156.html [3] https://www.indiatoday.in/pti-feed/story/jaya-announces-sports-scholarship-reward-for-students-486409-2016-01-11 [4] https://web.archive.org/web/20160603013614/http://www.chennainewz.com/go-sports-foundation-selected-15-athletes-for-rahul-dravid-athlete-mentorship-programme/ [5] https://web.archive.org/web/20160818130247/http://newstodaynet.com/sports/chennai-fencer-bhavani-aims-2020-olympics [6] https://www.firstpost.com/sports/tournoi-satellite-fencing-indias-ca-bhavani-devi-wins-silver-in-sabre-individual-category-after-going-down-to-azerbaijans-bashta-anna-7425271.html [7] https://www.bhavanidevi.com/achievements [8] https://www.bhavanidevi.com/biography [9]
தனிப்பட்ட தகவல்கள்
தொகுபெயர் பவானி தேவி முழு பெயர் சந்தலவதா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி பிறந்த தேதி 27 ஆகஸ்ட் 1993 (வயது 27 ) பிறந்த இடம் சென்னை, தமிழ்நாடு , இந்தியா நாடு இந்தியா விளையாட்டு வாள்வீச்சு
சாதனைகள்
தொகுஜூனியர் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் வெண்கல பதக்கம் 2009 மலேசியா சேபர் அணி
கேடட் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் வெண்கல பதக்கம் 2010 பிலிப்பைன்ஸ் சேபர் அணி
சர்வதேச ஓபன் வெண்கல பதக்கம் 2010 தாய்லாந்து சேபர் அணி
ஜூனியர் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் 2012 ஜெர்சி சேபர் அணி வெண்கல பதக்கம் 2012 ஜெர்சி தனிநபர்
23 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் 2014 பிலிப்பைன்ஸ் சேபர், தனிநபர்
டஸ்கனி கோப்பை தங்கப் பதக்கம் 2014 பிலிப்பைன்ஸ் சேபர், தனிநபர்
23 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப்
வெண்கல பதக்கம் 2015 மங்கோலியா சேபர்,
தனிநபர்
ஃப்ளெமிஷ் ஓபன் வெண்கல பதக்கம் 2015 பெல்ஜியம் சேபர், தனிநபர்
டோர்னாய் சாட்டிலைட் டபிள்யூ சி வாள்வீச்சு போட்டி தங்கப் பதக்கம் 2017 ரெகவிக் சேபர், தனிநபர்
டோர்னாய் சாட்டிலைட் டபிள்யூ சி வாள்வீச்சு போட்டி வெண்கல பதக்கம் 2018 ரெகவிக் சேபர், தனிநபர் வெள்ளிப் பதக்கம் 2018 ரெகவிக் சேபர், தனிநபர்
சீனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் 2018 கான்பெர்ரா சேபர், தனிநபர்
டோர்னாய் சாட்டிலைட் டபிள்யூ சி வாள்வீச்சுப் போட்டி வெண்கல பதக்கம் 2019 ரெகவிக் சேபர், தனிநபர் வெள்ளிப் பதக்கம் 2019 பெல்ஜியம் சேபர், தனிநபர்